இளையனார்வேலூர் சோளீஸ்வரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இளையனார்வேலூர் சோளீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்திற்குத் தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில் செய்யாற்றின் கரையில் இளையனார்வேலூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக சோளீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி சுந்தராம்பாள் ஆவார். கோயிலின் தீர்த்தம் செய்யாறு ஆகும். பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[1]
அமைப்பு
விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, நாகர், காசி விசுவநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நடராஜர், சிவகாமி ஆகியோர் இக்கோயிலில் உள்ளனர். காசிபர் புனித யாத்திரையாக பல தலங்களுக்கும் சென்றுகொண்டிருந்தபோது அவருடைய பெற்றோர் இறந்து விடுகின்றனர். அவர்களுக்கான இறுதிச்சடங்குகளை முடித்துவிட்டு, அவர்களுடைய அஸ்தியுடன் அவர் த்னது பயணத்தைத் தொடர்ந்தார். காசியில் அந்த அஸ்தியைக் கரைக்க எண்ணினார். இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு இங்கேயே தங்கினார். அப்போது இறைவன் அவருடைய பெற்றோர்களின் அஸ்தியைக் கரைக்க காசிக்குச் செல்வதற்கு பதிலாக இங்கேயே செய்யாற்றில் கரைத்துவிடலாம், காசியில் கரைத்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறினார். அவரும் அவ்வாறே செய்தார். காசிபர் சோலையில் அமைத்த லிங்கமானதால் மூலவர் சோளீசுவரர் என்றழைக்கப்படுகிறார்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads