இவான் இவானோவிச் செகால்கின்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இவான் இவானோவிச் செகால்கின் (Ivan Ivanovich Zhegalkin, ஆகத்து 3, 1869, – மார்ச் 28, 1947, மாஸ்கோ) ஓர் உருசியக் கணிதவியலாளர் ஆவார். இவர் கணித ஏரணவியல் பள்ளியை 1927இல் நிறுவியவர்களில் ஒருவர். இவர் 1927-28 இல் இரண்டு எண்களாலான எண்ம வடிவில் முற்கோள்களின் ஏரணத்தை உருவாக்கினார். இவற்றில் ஒன்று இரட்டைப்படை எண்; மற்றொன்று ஒற்றைப்படை எண்ணாகும். இது ஏரணவியல் கணக்குகளின் தீர்வை எளியதாக்கியது. வழக்கமான ஏரண வினைகளைப் போல் அல்லாமல், இவரது ஏரணம் conjunctionகளைப்[தெளிவுபடுத்துக] பயன்படுத்தாமல், disjunctionகளைப்[தெளிவுபடுத்துக] பயன்படுத்துகிறது. அதாவது. எண்ணியல் முறையைப் போல ஒற்றை, இரட்டைப்படை எண்களைப் பயன்படுத்துகிறது.[1] இவர் பூலியன் இயற்கணிதத்தை முறைமை 2 வகை முற்றெண்களின் வலயக் கோட்பாடாக, அதாவது இன்று செகால்கின் பல்லுறுப்பிகள் எனப்படும் கோவை வழியாக விளக்கினார்.

விரைவான உண்மைகள் இவான் இவானோவிச் செகால்கின், பிறப்பு ...

செகால்கின் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறைப் பேராசிரியர் ஆவார் இவர் அங்கிருந்த கணிதவியல் ஏரணக் குழு தொடர்ந்து நிலவ மிகவும் துணையாக இருந்துள்ளார். இது 1959 இல் சோஃபியா யானோவ்சுகாயா அவர்களால் முழு கணித ஏரணவியல் துறையாக நிறுவப் பட்டது. நிக்கோலாய் உலூழ்சின் தன் நினைவலைகளில் தன் அச்சமே உறாத ஒரே பேராசிரியர் செகால்கின் மட்டுந்தான் என்கிறார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads