ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேதாஜி தினசரி காய்கறி சந்தை (Netaji Daily Vegetable Market) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு காய்கறிச் சந்தை ஆகும்.[1]
வரலாறு
வியாபாரிகள் 1935 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் சிறிய காய்கறி கடைகளை நடத்தி வந்தனர். 1992 ஆம் ஆண்டு மாநகராட்சி இங்கு கடைகளை கட்டியது. ஆர்.கே.வி. சாலையில் செயல்பட்டு வரும் இச்சந்தையில் தினமும் 500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கடைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு விற்பனை செய்கின்றன. வாகனங்கள் நிறுத்த போதிய இடமில்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தொடக்கத்தில் காய், கனிகள் உள்பட அனைத்து பொருட்களும் விற்கப்பட்டு வந்ததால் பொதுசந்தை என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது காய், கனிகள் மட்டுமே விற்கப்பட்டு வருகின்றன. சந்தை இடம்பெற்றுள்ள் இருபெருந்தெருக்களும் நேதாஜி சாலை என்றும், ஆர்.கே.வி. சாலை என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
1935 ஆம் ஆண்டில் அப்போதை ஈரோடு நகராட்சியின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது மார்க்கெட்டிற்கு அருகில் மணிக்கூண்டு அப்போதைய கோவை கலெக்டராக இருந்து வந்த கோல்டுவொர்த் என்பவரால் அமைக்கப்பட்டது. இந்த மணிக்கூண்டு மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நேரம் தெரிந்து கொள்ள வசதியாக இருந்துள்ளது.
ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை ₹ 29.85 கோடியில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads