உசைன்சாகர் விரைவுவண்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உசைன்சாகர் எக்ஸ்பிரஸ் (Hussainsagar Express) தெற்கு மத்திய ரயில்வேயினால், ஹைதராபாத்-மும்பைக்கிடையே செயல்படுபடும் முக்கிய ரயில்சேவை ஆகும். 1993 ஆம் ஆண்டின் மத்திய மாதங்களில் (7001 / 7002) தாதர், ஹைதராபாத் ஆகியவற்றிற்கு இடையே வாரம் இருமுறை செயல்படும் ரயில்சேவையாக தொடங்கப்பட்டது. விரைவிலேயே, 1994 ஆம் ஆண்டு தினசரி ரயில்சேவையாக (2101 / 2102) மாறியது. அப்போது மும்பையின் வி.டி நிலையத்துக்கும் செகந்திரபாத்திற்கும் இடையே இந்த ரயில்சேவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போதும் தினசரி அதிவிரைவு ரயில்சேவையாக 2701/2702 என்ற எண்ணுடன் செயல்படுகிறது.
Remove ads
சொற்பிறப்பு

ஹைதராபத்தில் உள்ள உசைன் சாகர் ஏரியினை ‘ஹஸ்ரத் உசைன் ஷாஹ் வாலி’ 1562 ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். அது இப்ராஹிம் குவ்லி குத்பு ஷாஹின் ஆட்சிக்காலம் ஆகும்.[1] முதலில் மைனர் எக்ஸ்பிரஸ் என்ற பெயருடன், செகந்திரபாத்தில் இருந்து மும்பைக்கு செயல்பட்டு வந்த இந்த ரயில்சேவை, உசைன் சாகரை கௌரவிக்கும் பொருட்டு ‘உசைன்சாகர் எக்ஸ்பிரஸ்’ என்று மாற்றப்பட்டது.
வண்டி எண்
- 12701 – மும்பை சிஎஸ்டி – ஹைதராபாத் டெக்கான் உசைன்சாகர் எக்ஸ்பிரஸ்[2]
- 12702 - ஹைதராபாத் டெக்கான் - மும்பை சிஎஸ்டி உசைன்சாகர் எக்ஸ்பிரஸ்[3]
இந்த ரயில்சேவை பயண தூரமான 429 மைல்களை (790 கிலோமீட்டர்) 13 மணி நேரம் மற்றும் 45 நிமிடங்களில், சராசரியாக மணிக்கு 58.7 கிலோமீட்டர் வேகத்தில் கடந்துசெல்கிறது.
இணைப்புப் பெட்டிகள்
- 12701 உசைன்சாகர் எக்ஸ்பிரஸ்: ENG – SLR – GEN - S10 - S9 - S8 - S7 - S6 - S5 - S4 - S3 - S2 - S1 - B2 - B1 - A1 - HA1 – GEN - SLR
- 12702 உசைன்சாகர் எக்ஸ்பிரஸ்: ENG – SLR – GEN – GEN – GEN – GEN - S1 – GEN – GEN - SLR
இது தனது பெட்டிகளை ஹைதராபாத் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்சேவையுடன் பகிர்ந்துள்ளது.
இதர ரயில்கள்
ஹைத்ராபாத்தையும் மும்பையையும் இணைக்கும் பிற ரயில்சேவைகளின் விவரம் பின்வருமாறு:[4]
Remove ads
எஞ்சின்
உசைன்சாகர் எக்ஸ்பிரஸ் WCM எஞ்சின் உதவியுடன் இழுக்கப்பட்டது, அதேபோல் மும்பை மற்றும் புனே இடையே WCAM3 / WCG2 உதவியுடனும், புனேயில் DC நிலையிலிருந்து AC ஆக மாற்றப்பட்டதில் இருந்து WDM3A டீசல் எஞ்சின் உதவியுடனும் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 2013 ஆம் ஆண்டின் மத்திய மாதங்களில் இருந்து இந்த எஞ்சின்கள் மாற்றப்பட்டன. தற்போது மத்திய ரயில்வேயின் கல்யாண் WDM3A/D அல்லது WDG 3 உதவியுடன் செகந்திரபாத்தில் இருந்து மும்பை சிஎஸ்டி வரையிலான பயணம் முழுவதும் ஒரே எஞ்சின் மூலம் செயல்படுகிறது.
Remove ads
வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்
உசைன்சாகர் விரைவுவண்டி புறப்படும் நேரமும் வழிப்பாதை விவரங்களும் பின்வருமாறு:[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads