உடும்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உடும்பு (ⓘ) (Monitor lizard) என்பது பல்லி வகையைச் சேர்ந்த பேரினம் ஆகும். இவை பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த மூட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புலால் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா (Varanus bitatawa) , வரானசு மபிடாங் (Varanus mabitang) மற்றும் வரானசு ஒலிவாசியசு (Varanus olivaceus ) ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது.[1][2] இவை முட்டையிடல் மூலம் இனம் பெருக்கும் உயிரினங்கள் ஆகும். 7 தொடக்கம் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன.[3] உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு (Varanus) ஆகும்.
Remove ads
பரவல்
வரானசின் பல்வேறு இனங்கள் உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ளன; ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை, சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, நியூ கினியா, ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகள், தென் சீனக் கடல் போன்ற பகுதிகளில் இவற்றைக் காணலாம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads