உண்ணிமேனன்
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உண்ணிமேனன் (Unni Menon; மலையாளம்: ഉണ്ണിമേനോൻ) ஓர் தென்னிந்தியத் திரைப்படப் பாடகர். 500க்கும் மேலான திரைப்பாடல்களை தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பாடியுள்ளார். துவக்கத்தில் நன்கு அறியப்படாத பாடகராக இருந்து வந்த உண்ணிமேனனுக்கு 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தில் அவர் பாடிய "புது வெள்ளை மழை" என்ற பாடல் திருப்புமுனையாக அமைந்தது. ஏ.ஆர்.ரகுமானின் பல படங்களில் பாடியுள்ளார்.[1]
Remove ads
இளமை வாழ்க்கை
உண்ணி மேனன் 1957 ஆகத்து 12 அன்று கோவில் நகரமான குருவாயூரில் வி.கே.எஸ்.மேனன் மற்றும் மாலதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.குருவாயூரிலும் பாலக்காட்டிலும் கல்வி கற்று பாலக்காட்டின் அரசு விக்டோரியா கல்லூரியில் இயல்பியலில் பட்டம் பெற்றார். இளமையில் இசையில் பெருநாட்டம் காட்டிய உண்ணிமேனன் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதே பல இசைப்போட்டிகளில் விருதுகள் வென்றுள்ளார்.[2]
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads