உதகமண்டலம் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உதகமண்டலம் தொடருந்து நிலையம் (Udagamandalam railway station, நிலையக் குறியீடு:UAM) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ்வாய்ந்த மலைப் பிரதேசமும், நகருமான ஊட்டியில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்தத் தொடருந்து நிலையம் நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதையின் ஒரு பகுதியாகும். இந்த தொடருந்து நிலையம் ஒரு உலக பாரம்பரியக் களமாகும்.[2]
Remove ads
வரலாறு
1908 ஆம் ஆண்டில்நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதை, உதகமண்டலம் வரை நீட்டிக்கப்பட்டபோது இந்த நிலையம் திறக்கப்பட்டது. பாரம்பரிய நீலகிரி மலை தொடருந்து ஆனது, நீலகிரி மலைகளின் அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் நகரத்திற்குச் செல்ல கிட்டத்தட்ட இரண்டு மணிநேர பயணம் ஆகும்.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, உதகமண்டலம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [8][9][10][11][12][13][14][15]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads