உதகமண்டலம்

உதகமண்டலம் எனவும் அழைக்கப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு மலைப்ப From Wikipedia, the free encyclopedia

உதகமண்டலம்map
Remove ads

ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (தோடா மொழி: ஒத்தக்கல்மந்து [4]) (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்.[5] இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும். உதகமண்டலம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்

இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,082 ஆண்கள், 45,348 பெண்கள் ஆவார்கள். உதகமண்டலத்தில் 1000 ஆண்களுக்கு 1053 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட அதிகமானது.. உதகமண்டலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.07% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.53%, பெண்களின் கல்வியறிவு 85.86% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. உதகமண்டலம் மக்கள் தொகையில் 7,781 (8.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 987பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு அதிகமானதாக உள்ளது.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 64.36% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 21.25% இஸ்லாமியர்கள் 13.37% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உதகமண்டலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 28.98%, பழங்குடியினர் 0.30% ஆக உள்ளனர். உதகமண்டலத்தில் 23,235 வீடுகள் உள்ளன.[6]

Remove ads

வரலாறு

பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலை போசளர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர், திப்பு சுல்தானின், மைசூர் அரசுப் பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது.

அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார். ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக்காலத் தலைநகரமாக விளங்கியது. உதகமண்டலத்தில் சேரிங் கிராஸ் அருகிலுள்ள ஸ்டோன் ஹவுஸ் மலைப்பகுதியில் தான் கோடைக்காலத் தலைநகரின் அலுவலகம் அமைந்திருந்தது. தற்போதைய அரசு கலைக்கல்லூரி கட்டடத்தில் தான் இவ்வலுவலகம் செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

ஒத்தக்கல் மந்து (தமிழ் - ஒற்றைகல் மந்தை) என்பதை ஆங்கிலேயர்கள் உதகமண்ட் என்று அழைத்தனர்.[7] உதகமண்ட் என்று ஆங்கிலத்திலேயே அழைக்கப்பட்ட இவ்வூரின் பெயரை 1972ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் உதக மண்டலம் என்று தமிழ் படுத்தி ஆணையிட்டார்.[8]

Remove ads

கல்வி நிலையங்கள்

உதகமண்டலத்தில் உள்ள பள்ளிகள்.

  • பிரீக்ஸ் மெமோரியல் பள்ளி, சேரிங் கிராஸ்
  • நல்ல மேய்ப்பன் சர்வதேச பள்ளி
  • ஹெர்பன் பள்ளி, சேரிங் கிராஸ்
  • லாரன்ஸ் பள்ளி
  • புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி
  • செயின்ட் ஹில்டா பள்ளி உதகமண்டலம்

கற்பூர மரம்

உதகமண்டலத்தில் அமைந்துள்ள கற்பூர மரம் 12 மீட்டர்கள் சுற்றளவு கொண்டதாக உள்ளது. இதனை 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டி பிடிக்க முடியும். இம்மரம் பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.[9]

உதகமண்டல ஒளிக்காட்சி அரங்கு

Remove ads

உதகமண்டல மலைக்காட்சி அரங்கு

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads