உத்தமபாளையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உத்தமபாளையம் (ஆங்கிலம்:Uthamapalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தேனி - கம்பம் சாலையில் உள்ளது. உத்தமபாளையம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,508 வீடுகளும், 29,050 மக்கள்தொகையும் கொண்டது.[1]
இது 9 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 121 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
Remove ads
பொருளாதாரம்
கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உத்தமபாளையம் பகுதி விவசாயச் செழிப்பு வாய்ந்த பகுதியாகும். இங்கு நெல், வாழை, கரும்பு ஆகியன பயிரிடப்படுகின்றன.
கோயில்
இந்த ஊரில் தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் காளாத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
கல்லூரிகள்
- ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரி. இந்தக் கல்லூரியில் கவியரசு நா.காமராசன் பேராசிரியர் ஆக பணி புரிந்தார். இந்த கல்லூரியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பயின்றார்
- தமிழ்நாடு அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி
சிறப்புகள்
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பி. டி. ராஜன் வாழ்ந்த இல்லம் இங்குள்ளது. பி. டி. ராஜனின் மகன் பி. டி. ஆர். பழனிவேல்ராசன் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்தார். பி. டி. ஆர். பழனிவேல்ராசன் அவர்களின் புதல்வர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் தமிழ்நாட்டு அரசியலின் ஒரு முக்கிய பிரமுகராகவும், தமிழ்நாட்டின் நிதி அமைச்சராகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads