கம்பம்

கம்பம் நகராட்சி தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. From Wikipedia, the free encyclopedia

கம்பம்map
Remove ads

கம்பம் (ஒலிப்பு) (ஆங்கிலம்:Cumbam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கம்பம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்
Remove ads

பெயர்க் காரணம்

கம்பம் நாயக்கர் என்ற பெயருடைய குறுநில மன்னர் இங்கு வாழ்ந்ததால் சுருக்கமாகக் கம்பம் என்ற பெயர் ஊருக்கும் வழங்கிற்று என்பர்[3][4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9.73°N 77.3°E / 9.73; 77.3 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 391 மீட்டர் (1282 அடி) உயரத்தில் இருக்கின்றது. மூன்று திசையும் மலைகளால் சூழப்பட்டு ரம்மியமாக ஒரு பள்ளத்தில் அமைந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கபடுகிறது.

புகழ் பெற்ற முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முக நதி, ஆகியவை மேலும் வளம் சேர்க்கின்றன. விவசாயம் பிரதான தொழிலாகும். கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்ட ஏலம் விவசாயிகளில் 80 சதம் இங்குள்ள தமிழர்கள் ஆவர்.

Remove ads

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18,567 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 68,090 ஆகும். அதில் 33,848 ஆண்களும், 34,242 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.85% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6661 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,282 மற்றும் 13 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.60%, இசுலாமியர்கள் 19.05%, கிறித்தவர்கள் 2.26% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads