உமாங்கு மக்கள்

From Wikipedia, the free encyclopedia

உமாங்கு மக்கள்
Remove ads

உமாங்கு (Hmong) மக்கள் எனப்படுவோர் பெரும்பாலும் தெற்கு சீனா (குயிசூ, யுன்னான், சிச்சுவான், சோங்கிங், குவாங்சி), வியட்நாம், இலாவோசு, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளில் வசிக்கும் ஆசிய இன மக்கள் ஆவர். இவர்கள் 2007 ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு (UNPO) என்ற அமைப்பின் பிரதிநிதிகளாக உள்ளனர்.[8] சீனாவில் இவர்கள் மியாவோ மக்களின் ஒரு உப குழுவினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

1950களில் முதலாம் இந்தோசீனப் போர், 1970களில் வியட்நாம் போர்களின் போது, வடக்கு, தெற்கு வியட்நாம் மற்றும் கம்யூனிச பதெட் லாவோ படையினருக்கு எதிராகப் போரிடுவதற்காக பிரான்சும் ஐக்கிய அமெரிக்காவும் பல்லாயிரக்கணக்கான உமாங்கு மக்களைத் தமது படைகளில் சேர்த்துக் கொண்டனர். நடுவண் ஒற்று முகமையின் இந்த நடவடிக்கை இரகசியப் போர் என அழைக்கப்பட்டது.[9] 1975 ஆம் ஆண்டில் பதெட் லாவோ படைகள் இலாவோசு நாட்டைக் கைப்பற்றியதை அடுத்து வஞ்சம் தீர்ப்பதற்காக உமாங்கு இனத்தவர்கள் ஏனைய லாவோ மக்களிடம் இருந்து வேறுபடுத்தப்பட்டார்கள். இதனை அடுத்து அவர்கள் பல்லாயிரக்கணக்கில் அரசியல் தஞ்சம் கோரி தாய்லாந்து சென்றார்கள். 1970களின் பிற்பகுதியில் இவர்களில் பெரும்பான்மையானோர் மேலை நாடுகளில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரெஞ்சு கினி, கனடா போன்ற நாடுகளில் குடியமர்த்தப்பட்டார்கள். மீதமிருந்தோரில் பலர் ஐநாவின் உதவித்திட்டத்துடன் லாவோசிற்குத் திரும்பினார்கள். கிட்டத்தட்ட 8,000 உமாங்கு மக்கள் இன்னமும் அகதிகளாக தாய்லாந்தில் தங்கியிருக்கிறார்கள்.[10]

Remove ads

ஊடகக் காட்சியகம்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads