முதனியியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதனியியல் அல்லது முதனிலை விலங்கியல் என்பது முதல் நிலை விலங்குகளைப் பற்றி ஆயும் துறையாகும். இத்துறை சார்ந்த வல்லுனர்களை உயிரியல், மானிடவியல், உளவியல் மற்றும் பல துறைகளில் காணமுடியும். இத்துறை, ஓமோ பேரினத்தை, சிறப்பாக ஓமோ சப்பியன்களை இயற்பிய மானிடவியலின் ஒரு கிளைத்துறை ஆகும். இத்துறை மனித இன மூதாதைகளான மனிதக் குரங்குகளை ஒத்த இனங்களை ஆய்வு செய்யும் துறையுடனும் பொதுவான ஆய்வுப்பரப்பைக் கொண்டுள்ளது.
விலங்கியல் |
விலங்கியலின் கிளைகள் |
மானிடவியல் · |
குறிப்பிடத்தக்க விலங்கியலாளர் |
ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின் |
வரலாறு |
டார்வினுக்கு முன் |
தற்கால முதனியியல் பெருமளவு பல்வகைமைத் தன்மை கொண்ட ஒரு அறிவியல். இது, முதனிலை விலங்கு மூதாதைகளின் உடற்கூற்றியல் ஆய்வுகள், முதனிலை விலங்குகளை அவற்றின் வாழிடங்களில் கவனித்துச் செய்யும் கள ஆய்வு, விலங்கு உளவியல் சோதனைகள், மனிதக்குரங்கு மொழி போன்ற பலவற்றை உள்ளடக்குகின்றது. இவ்வாய்வுகள், மனிதனுடைய அடிப்படை நடத்தைகள், அவற்றின் தொன்மையான மூலங்கள் தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
Remove ads
துறைகள்
முதனியியல், அதனைத் தொடங்கியவர்களின் பண்பாட்டுப் பின்புலத்தில் இருந்து உருவான பல வேறுபாடான துறைகளைக் கொண்டுள்ளது. உண்மையில் இத்துறையேகூட உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாகக் கையாளப்பட்டு வருவதைக் காணலாம். இவை வேறுபட்ட அணுகுமுறைகள், கோட்பாடுகள், வழிமுறைகள் போன்றவற்றை, மனிதரல்லாத முதனிலை விலங்குகளினதும், அவை மனிதருடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்தும் ஆய்வு செய்வதற்குப் பயன்படுத்துகின்றன.
முதனியியல் துறையில் காணப்படும் முக்கிய துறைகளில் மேற்கத்திய முதனியியல், சப்பானிய முதனியியல் என்பவையும் அடங்கும். இவ்விரு துறைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள், இவற்றின் உருவாக்கத்தின் போது காணப்பட்ட தனித்துவமான பண்பாடு, மெய்யியல் நோக்கு என்பவற்றினால் உருவானவை. முதனியியலின் இவ்விரு பிரிவுகளும், பல ஒத்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும், ஆய்வுக்குரிய இடங்களும், தரவுகளைப் பெறுவதற்கான வழிமுறைகளும் பெரிதும் வேறுபடுகின்றன.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads