மானிடவியல்

மனிதர்கள், மனித நடத்தை மற்றும் சமூகங்கள் பற்றிய அறிவியல் ஆய்வு மானுடவியல் ஆகும் From Wikipedia, the free encyclopedia

மானிடவியல்
Remove ads

மானிடவியல் அல்லது மாந்தவியல் என்பது (Anthropology) மனித இனம் பற்றிய ஆய்வறிதல் ஆகும். இது மனித குலத்தைச் சமூக நிலை, பண்பாட்டு நிலை, உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளில் கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்து விரிந்த இலக்குடையதாக உள்ளது.[1][2][3][4]

இது இரண்டு வகைகளில் முழுதளாவிய (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த அனைத்து மனிதர்களையும், மனித இனத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. பண்பாடு பற்றிய எண்ணக்கருவும், மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம் உலகத்தை குறியீட்டு முறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில் குறியீட்டு முறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் எங்களையும் மாற்றிக் கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும்.

ஐக்கிய அமெரிக்காவில், மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது:

  • உடல்சார் மானிடவியல்: இது உயர் பாலூட்டியின் நடத்தைகள், மனித படிமலர்ச்சியியல், குடித்தொகை, மரபியல் என்பவை பற்றி ஆராய்கின்றது; இத் துறை சில சமயங்களில் உயிரியல்சார் மானிடவியல் எனவும் வழங்கப்படுகின்றது.
  • சமூக, பண்பாட்டு மானிடவியல்: இது சமூக மானிடவியல், பண்பாட்டு மானிடவியல் ஆகிய இரண்டையும் இணைத்து உருவாகியதாகும். இந்த ஆய்வுக் களம் சமூக வலையமைப்பு, சமூக நடத்தைகள், உறவுமுறை வடிவங்கள், அரசியல், நம்பிக்கைகள், உற்பத்தி வடிவங்கள், பரிமாற்றம், நுகர்வு மற்றும் ஏனைய பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கும்;
  • மொழிசார் மானிடவியல்: இது காலம் மற்றும் இடம் சார்ந்த நிலையில் மொழிகளின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழிப் பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு பற்றி ஆய்வு செய்கின்றது;
  • தொல்பொருளியல், இது மனித சமூகங்களின் பொருள்சார் எச்சங்களை ஆராய்கிறது. (இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது).
Remove ads

மானிடவியல் எண்ணக்கருக்கள்

மானிடவியல் துறைகளும் துணைத் துறைகளும்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads