உயிரே (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உயிரே இது ஒரு சிங்கப்பூர் நாட்டு குடும்பம் சார்ந்த தமிழ்மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை 'அப்பாஸ் அக்பர் மற்றும் குமரன் சுந்தரம்' என்பவர்கள் இயக்க புரலவன் நாராயணசாமி, அஸ்வினி, இந்திரா சந்திரன், நிஷா குமார், மாலினி, குணாளன், அரவிந்த் நாயுடு, தவனேசன் சிவானந்தன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[1]

விரைவான உண்மைகள் உயிரே, வகை ...

இந்த தொடர் சனவரி 14, 2019 முதல் 31 மார்ச்சு 2019 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 62 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

கதைச்சுருக்கம்

இந்த தொடரின் கதை ராகவன் மற்றும் சாரு ஆகியோரின் நம்பிக்கை இல்லாதிருமண வாழ்க்கையையும் அவர்களின் மூன்று மகள்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் மையமாக வைத்து நகர்கின்றது.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • புரலவன் நாராயணசாமி - ராகவன்
    • முன்னாள் ராணுவ அதிகாரி, சாருவின் கணவன், கீர்த்தி, பிரியங்கா, பூமிகா ஆகியோரின் தந்தை.
  • அஸ்வினி - சாரு ராகவன்
    • அமைதியான பெண், ராகவனின் மனைவி மற்றும் கீர்த்தி, பிரியங்கா, பூமிகா ஆகியோரின் தாய்.
  • இந்திரா சந்திரன் - கீர்த்தி ராஜேஷ்
    • சாதாரண குடும்ப பெண், ராகவேந்திரன் மற்றும் சாருவின் மூத்த மகள், ராஜேஷின் மனைவி.
  • நிஷா குமார் - பிரியங்கா
    • ராகவேந்திரன் மற்றும் சாருவின் ரெண்டாவது மகள், தைரியமான தனித்தன்மை வாய்ந்த ஒரு வழக்கறிஞர், தந்தை மீது அதிகம் பாசம் உடையவள், அஸ்ஹவினின் காதலி.
  • மாலினி - பூமிகா
    • ராகவேந்திரன் மற்றும் சாருவின் மூன்றாவது மகள், தினமும் அழகுபடுத்திக்கொள்பவள், குடும்பத்தினருடன் எதிர்மறையானவள்.
  • குணாளன் - ராஜேஷ்
    • ஒரு பலசரக்கு கடை முதலாளி, கீர்த்தியின் கணவன். குடும்பத்திற்காக எதையும் செய்பவன்.
  • அரவிந்த் நாயுடு - அஸ்வின்
    • காவல் அதிகாரி, பிரியங்காவின் காதலன்.
  • தவனேசன் சிவானந்தன் - நிஷோக்
    • ஒரு கலகலப்பான விளையாட்டு தனம் கொண்ட விளம்பர நடிகர்.

துணை கதாபாத்திரம்

  • நிஷானா - ரேணுகா
    • தனி தாய், இவருக்கு 10 வயதில் ஒரு மகள் உண்டு. இவர் குடும்பத்திற்கும் ராகவன் குடும்பத்திற்கும் எதோ ஒரு சம்பந்தம் உண்டு.
  • சங்கரி - காமினி
    • தனது உடல் எடை காரணமாக கவலைப்படுகின்ற ஒரு பள்ளி மனைவி.
  • வினதி
  • தர்ஷினி
  • ஹரிநாக்ஷி
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads