சிங்கப்பூர்

தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு From Wikipedia, the free encyclopedia

சிங்கப்பூர்map
Remove ads

சிங்கப்பூர் (Singapore) அல்லது சிங்கப்பூர் குடியரசு (Republic of Singapore; சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும், நகர அரசும் ஆகும். இதன் நிலப்பரப்பு ஒரு முதன்மைத் தீவு, 63 தீவுகள் அல்லது திட்டுக்கள், ஒரு வெளிப்புறத் திட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது. சிங்கப்பூர் நிலநடுக் கோட்டுக்கு வடக்கே ஏறத்தாழ ஒரு அகலக்கோட்டுப்பாகையில் (137 கிலோமீட்டர்கள் அல்லது 85 மைல்கள்) அமைந்துள்ளது. இதன் வடக்கே மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனையும், மேற்கே மலாக்கா நீரிணை, இந்தோனேசியாவின் இரியாவு தீவுகள் ஆகியவையும், தெற்கே சிங்கப்பூர் நீரிணையும், கிழக்கே தென்சீனக் கடலும் எல்லைகளாக உள்ளன. அத்துடன், இதன் வடக்கே மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் ஜொகூர் நீரிணையையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் சிங்கப்பூர் குடியரசுமலாய்:Republik Singapuraமாண்டரின்:新加坡共和国சிஞ்சியாபோ கோங்கேகுவோ, மலாய்: ...

சிங்கப்பூர் அதன் தொடக்க கால வரலாற்றில் துமாசிக் என்று அறியப்பட்டது. அந்தக் கட்டத்தில் சிங்கப்பூர் ஒரு கடல்சார் வணிக மையமாகத் திகழ்ந்தது. பல்வேறு தொடர்ச்சியான கடல் ஆதிக்கப் பேரரசுகளின் முதன்மையான கட்டுப்பாட்டுப் பகுதியாகவும் இருந்தது. இதன் சமகால வரலாறு 1819-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவர் பிரித்தானியப் பேரரசிற்குச் சொந்தமாக ஒரு வணிகப் பணியிடமாகச் சிங்கப்பூரை நிறுவினார். 1867-இல் சிங்கப்பூர், நீரிணைக் குடியேற்றங்களின் பகுதியாக, பிரித்தானியாவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூர், 1942-ஆம் ஆண்டு சப்பானிய பேரரசினால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1945-இல் சப்பானின் சரணடைவைத் தொடர்ந்து, ஒரு குடியேற்றமாக பிரித்தானியக் கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் திருப்பி அளிக்கப்பட்டது. 1959-இல் சிங்கப்பூர் சுயாட்சி பெற்றது. 1963-இல் மலாயா, வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் ஆகியவற்றுடன் இணைந்து மலேசியாவின் ஒரு புதிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக உருவானது. இரண்டு ஆண்டுகள் கழித்து கொள்கை வேறுபாடுகளின் காரணமாக, மலேசிய கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டது. 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஒரு சுதந்திரமான இறையாண்மையுள்ள நாடாக உருவானது. தொடக்க கால அமைதியற்ற ஆண்டுகளுக்குப் பிறகு, இயற்கை வளங்கள் இல்லாமல்; மற்றும் ஒரு பின்னிலப் பகுதியாக இருந்த போதிலும்; நான்கு ஆசியப் புலிகளில் ஒன்றாக உருவாகும் அளவிற்கு இந்த நாடு துரிதமாக வளர்ச்சி அடைந்தது.

மிக வளர்ச்சி அடைந்த நாடாக; கொள்வனவு ஆற்றலில் தனிநபர் சராசரி வருமானங்களில் மிக உயர்ந்த அளவைக் கொண்டுள்ளது. இந்த நாடு வரி குறைவான ஓர் இடமாகவும் அடையாளப் படுத்தப்படுகிறது. அனைத்து முதன்மையான தரநிலை முகமைகளிடம் இருந்தும்; ஆசியாவிலேயே மிக உயர்ந்த கடன் மதிப்பீட்டுத் தரநிலையைக் கொண்ட ஒரே நாடாகவும் சிங்கப்பூர் திகழ்கின்றது. சிங்கப்பூர் ஒரு முக்கியமான வானூர்தி மையமாகவும், நிதி மையமாகவும், மற்றும் துறைமுகப் பட்டண மையமாகவும் திகழ்கிறது. குடி பெயர்ந்தவர்கள்; மற்றும் அயல்நாட்டுப் பணியாளர்கள் வாழ்வதற்கு மிக அதிக செலவை ஏற்படுத்தக் கூடிய நகரங்களில் ஒன்றாகத் தொடர்ச்சியான தர நிலைப் பதிவுகளைப் பெறுகிறது. முக்கியமான சமூக சுட்டிக் காட்டிகளில் சிங்கப்பூர் மிக உயர்ந்த தரநிலையைப் பெறுகிறது: கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம், தனி நபர் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதி, போன்றவற்றில், இந்த நாடு 88% தர நிலையைக் கொண்டுள்ளது. மிக நீண்ட ஆயுட்கால எதிர்பார்ப்பு, மிக வேகமான இணைய வேகம், மிகக் குறைவான குழந்தை இறப்பு வீதங்கள்; மற்றும் உலகின் மிகக் குறைவான ஊழல் நிலை ஆகியவற்றை சிங்கப்பூர் மக்கள் பெற்றுள்ளனர். நகரத் திட்டமிடலின் விளைவாக ஏராளமான எண்ணிக்கையிலான பசுமை மற்றும் பொழுது போக்கு இடங்கள் உருவாக்கப்பட்ட போதிலும்; மிக அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது. பல பண்பாட்டு மக்கள் தொகையுடன்; நாட்டின் முதன்மையான இனக் குழுக்களின் பண்பாட்டு அடையாளங்களை அங்கீகரித்ததுடன்; நான்கு அலுவல் மொழிகளை சிங்கப்பூர் கொண்டுள்ளது. ஆங்கிலம், மலாய், மாண்டரின் மற்றும் தமிழ் மொழிகளுடன்; ஆங்கிலம் பொதுவான மொழியாக உள்ளது. பொதுச் சேவைகளில் ஆங்கில மொழி தனிச் சிறப்புடன் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர் அரசியலமைப்பில் பல்லினப்பண்பாடு நிறுவப்பட்டுள்ளது. அதுவே தேசியக் கொள்கைகளையும் தொடர்ந்து வடிவமைத்து வருகிறது.

சிங்கப்பூர் ஒரு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். இதன் சட்ட அமைப்பானது பொதுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்த நாட்டில், சட்டப்படி ஒரு பல கட்சி சனநாயகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அதே நேரத்தில், மக்கள் செயல் கட்சியின் கீழான அரசாங்கமானது பரவலான கட்டுப்பாடு மற்றும் அரசியல் ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் ஐந்து நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாக, ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்புச் செயலகத்தின் தலைமையகத்தையும்; பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றச் செயலகத்தையும் இந்த நாடு கொண்டுள்ளது. பல பன்னாட்டு மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்தும் நகரமாகவும் உள்ளது. ஐக்கிய நாடுகள் அவை, உலக வணிக அமைப்பு, கிழக்கு ஆசிய கூட்டமைப்பு, கூட்டுசேரா இயக்கம் மற்றும் நாடுகளின் பொதுநலவாயம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் சிங்கப்பூர் உள்ளது.

Remove ads

பெயர்க் காரணம்

இந்த நாட்டின் பூர்வீக மலாய் பெயரான சிங்கபுரா என்பதன் ஆங்கில மயமாக்கப்பட்ட வடிவமாக அதன் ஆங்கிலப் பெயரான "சிங்கப்பூர்" உள்ளது. சிங்கபுரா என்ற பெயரும் 'சிங்க நகரம்' (சமசுகிருதம்: सिंहपुर; உரோமானிய மயமாக்கப்பட்ட பெயர்: சிம்ஹபுரா; பிராமி: 𑀲𑀺𑀁𑀳𑀧𑀼𑀭; பொருள்: "சிங்க நகரம்"; सिंह - சிம்ஹா என்பதன் பொருள் 'சிங்கம்'; पुर - புரா என்பதன் பொருள் 'நகரம்' அல்லது 'கோட்டை') என்பதற்கான சமசுகிருதச் சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டதாகும்.[9] புலாவ் உஜோங் என்ற பெயரானது சிங்கப்பூர் தீவைக் குறிப்பிட்ட தொடக்க காலக் குறிப்புகளில் ஒன்றாகும். மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சீனக் குறிப்பில் பு லுவோ சோங் (சீனம்: ) என்று ஓர் இடம் குறிப்பிடப்படுகிறது. 'ஒரு தீபகற்பத்தின் முடிவில் உள்ள ஒரு தீவு' என்பதற்கான மலாய் பெயரின் ஒரு பெயர்ப்பு இதுவாகும். 1365-இல் எழுதப்பட்ட ஒரு சாவகப் பாராட்டுரையான நகரகிரேதகமாவில் துமாசிக் என்ற பெயருக்கான தொடக்க காலக் குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும், இதே காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு வியட்நாமிய பதிவிலும் துமாசிக் எனும் பெயர் காணப்படுகிறது. அநேகமாக இப்பெயரின் பொருள் கடல் பட்டணம் என்பதாகும். மலாய் மொழியில் 'கடல்' அல்லது 'ஏரி' என்ற பொருளுடைய தாசேக் என்ற சொல்லில் இருந்து துமாசிக் எனும் சொல் தருவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[10] தன்மாக்சி (சீனம்: 淡馬錫; பின்யின்: தன்மாக்சி; வேட்-கில்சு: தன் மா ஹ்சி) அல்லது தம் மா சியாக் என்ற பெயரிடப்பட்ட ஓர் இடத்தை சுமார் 1330-ஆம் ஆண்டு வாக்கில், சீனப் பயணியான வாங் தயுவான் அடைந்தார் என்றும்; அந்த வகையில் தன்மாக்சி என்பதன் ஒரு பெயர்ப்பாக துமாசிக் எனும் பெயர் உருவாகி இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. மேலும், 'நிலம்' என்று பொருள்படக்கூடிய மலாய் சொல்லான தானா மற்றும் வெள்ளீயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சீனச் சொல்லான 'சி' ஆகியவை இணைந்த ஒரு சொல்லாக இது இருக்கலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது. வெள்ளீயமானது துமாசிக் தீவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.[10][11]

சிங்கபுர இராச்சியம் நிறுவப்படுவதற்கு முன்னர், இந்தப் பகுதி முழுவதும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நகரங்களுக்குச் சிம்மபுரா என்ற பெயரின் வேறுபட்ட வடிவங்களானவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்து-பௌத்தப் பண்பாட்டில் சிங்கங்கள் சக்தி மற்றும் பாதுகாப்புடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. இத்தகைய ஒரு பெயருக்கு உள்ள ஈர்ப்பை இது விளக்குவதாக அமையலாம்.[12][13] 15-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்; இத்தீவில் சிங்கபுர இராச்சியம் நிறுவப் பட்டதற்குப் பிறகு, பலெம்பாங்கில் இருந்து தப்பித்து வந்த ஒரு சுமத்திரா அரசரால், ஏதோ ஒரு காலக் கட்டத்தில் துமாசிக் என்ற பெயரானது சிங்கபுரா என்ற மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். எனினும், பெயர் மாற்றிய துல்லியமான நேரம் மற்றும் காரணமானது இன்றுவரை அறியப்படவில்லை. மலாய் வரலாற்றுச் சுவடியான செஜாரா மெலாயு நூல்; பலெம்பாங்கைச் சேர்ந்த 13-ஆம் நூற்றாண்டு சுமத்திரா அரசர் நீல உத்தமனால் துமாசிக் எனும் பெயர் சிங்கபுரா என்று பெயர் மாற்றப்பட்டது என்று குறிப்பிடுகிறது. இக்குறிப்புகள் நீல உத்தமன் தீவில் ஒரு விசித்திரமான விலங்கை எதிர் கொண்டதாகக் குறிப்பிடுகின்றன. அந்த விலங்கை அவர் ஒரு சிங்கம் என்று கருதினார். இதை ஒரு சகுனமாகக் கருதி, விலங்கை எதிர் கொண்ட இடத்தில் சிங்கபுரா எனும் பட்டணத்தை நிறுவினார் என்றும் செஜாரா மெலாயு பதிவு செய்துள்ளது.[14]:37, 88–92[15]:30–31 இரண்டாவது கோட்பாடானது போத்துக்கீசிய ஆதாரங்களில் இருந்து தருவிக்கப்பட்டதாகும். இந்தத் தொன்மக் கதையானது பலெம்பாங்கின் பரமேசுவரனின் உண்மையான வாழ்வை அடிப்படையாகக் கொண்டது என்று அவை குறிப்பிடுகின்றன. மயாபாகித்து பேரரசிடம் இருந்து சுதந்திரத்தை அறிவித்த பரமேசுவரன் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தார். சாவகத்தைச் சேர்ந்தவர்களால் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு ஆளானதற்குப் பிறகு இவர் துமாசிக்கின் கட்டுப்பாட்டை முறையற்ற வகையில் கைப்பற்றினார். பரமேசுவரா இப்பகுதிக்கு சிங்கபுரா என்று பெயரை மாற்றி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தான் வெளியேற்றப்பட்ட சிம்மாசனத்தின் நினைவாக சிங்கபுரா எனும் பெயரை பரமேசுவரா சூட்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[16]

சப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் சிங்கப்பூரானது சியோனான்-தோ ( ஷோனான்?) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் பொருள் 'தெற்கின் ஒளி' என்பதாகும்.[17][18] சிங்கப்பூர் சில நேரங்களில் அதன் செல்லப் பெயரான "தோட்ட நகரம்" என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. இதன் பூங்காக்கள் மற்றும் இருபுறமும் மரங்கள் நடப்பட்ட வீதிகளைக் குறிப்பிடுவதற்காக இவ்வாறான பெயரைப் பெற்றுள்ளது.[19] மற்றொரு அலுவல் சாராத பெயரானது "சிறு சிவப்புப் புள்ளி" என்பதாகும். 4 ஆகத்து 1998 அன்று வெளி வந்த ஆசிய வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையில் ஒரு கட்டுரையானது இந்தோனேசிய அதிபரான பி. ஜே. அபிபியே சிங்கப்பூரை ஒரு வரைபடத்தில் உள்ள ஒரு சிவப்புப் புள்ளி என்று குறிப்பிட்டதாக கூறியதற்குப் பிறகு இப்பெயர் பின்பற்றப்பட்டது.[20][21][22][23]

Remove ads

வரலாறு

பண்டைக் கால சிங்கப்பூர்

1299இல் செஜாரா மெலாயு நூலின் படி சிங்கபுர இராச்சியமானது இத்தீவில் நீல உத்தமனால் நிறுவப்பட்டது.[24] செஜாரா மெலாயுவில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் வரலாற்றுத் தன்மையானது அறிஞர்கள் மத்தியில் விவாதத்திற்குரிய பொருளாக இருந்த போதிலும்[25] அப்போது துமாசிக் என்று அறியப்பட்ட சிங்கப்பூரானது பல்வேறு ஆவணங்கள் மூலம் 14ஆம் நூற்றாண்டில் மயாபாகித்து பேரரசு மற்றும் சியாமிய இராச்சியங்கள்[26] ஆகிய இரு அரசுகளின் செல்வாக்கின் கீழ் இருந்த ஒரு வணிகத் துறைமுகம் என்பது அறியப்பட்ட ஒன்றாகும். இது இந்திய செல்வாக்குப் பகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.[27][28][29][30][31] இந்த இந்தியமயமாக்கப்பட்ட இராச்சியங்கள் வியப்பூட்டும் ஈடு கொடுக்கும் தன்மை, அரசியல் நேர்மை மற்றும் நிர்வாக நிலைத் தன்மை ஆகியவற்றைப் பண்புகளாகக் கொண்டிருந்தன.[32] 14ஆம் நூற்றாண்டின் முடிவு வாக்கில் மயாபாகித்து பேரரசு அல்லது சியாமிய இராச்சியத்தால் இதன் ஆட்சியாளரான பரமேசுவரன் தாக்கப்பட்டார் என்று வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அவர் மலாக்காவிற்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அங்கு மலாக்கா சுல்தானகத்தை நிறுவினார்.[33] இதற்கு சில காலத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் ஒரு சிறிய வணிகக் குடியிருப்பானது தொடர்ந்து இருந்த போதிலும் கெனிங் மலைக் கோட்டை மீதிருந்த முதன்மையான குடியிருப்பானது இதே நேரம் வாக்கில் கைவிடப்பட்டது என்று தொல்லியல் ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன.[16] 1613இல் போத்துக்கீசிய ஊடுருவாளர்கள் இக்குடியிருப்பை எரித்துத் தரை மட்டமாக்கினர். அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு இத்தீவானது முக்கியத்துவம் அற்ற நிலைக்கு மங்கிப் போனது.[34] அந்நேரத்தில் சிங்கப்பூரானது சொகூர் சுல்தானகத்தின் ஒரு பகுதியாக பெயரளவுக்கு இருந்தது.[35] 1641இல் இடச்சுக்காரர்கள் மலாக்காவை வென்றதற்குப் பிறகு தொடர்ந்து வந்த கால கட்டத்தில் பரந்த கடல்சார் பகுதி மற்றும் பெரும்பாலான வணிகமானது இடச்சு கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.[36]

பிரித்தானியக் குடியேற்றமாதல்

Thumb
புருனேயின் 21ஆவது சுல்தானான சுல்தான் முகம்மது கன்சுல் ஆலமுக்கு வில்லியம் பர்குவர் எழுதிய 28 நவம்பர் 1819ஆம் நாளுக்குத் தேதியிடப்பட்ட கடிதம். முதல் வரியில் 6 பெப்ரவரி 1819 அன்று சிங்கப்பூரில் ஒரு தொழிற்சாலையை நிறுவ பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு சுல்தான் உசேன் மற்றும் தெங்கு அப்துல் இரகுமான் ஆகியோர் அனுமதியளித்துள்ளனர் என்று பர்குவர் குறிப்பிடுகிறார்.[37][38]

28 சனவரி 1819 அன்று பிரித்தானிய ஆளுநரான இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூருக்கு வருகை புரிந்தார். புதிய துறைமுகத்துக்கான ஓர் இயற்கையான தேர்வாக இத்தீவை சீக்கிரமே அடையாளம் கண்டார்.[39] இத்தீவானது அந்நேரத்தில் இடச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சொகூர் சுல்தான் தெங்கு அப்துல் இரகுமான் மற்றும் பூகிஸ் மக்களால் பெயரளவுக்கு ஆளப்பட்டு வந்தது.[40] எனினும், சுல்தான் உட்பிரிவுச் சண்டைகளால் பலவீனமடைந்து இருந்தார்: தெங்கு அப்துல் இரகுமானுக்கு சொகூரின் தெமெங்கோங்காக இருந்த அப்துல் இரகுமானும், அவரது அதிகாரிகளும் இரியாவு தீவுக் கூட்டத்தின் பெனியேங்கத் தீவில் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்த சுல்தானின் அண்ணனான தெங்கு லாங்கிற்கு விசுவாசம் உடையவர்களாக இருந்தனர். தெமெங்கோங்கின் உதவியுடன் இராஃபிள்சு தெங்கு லாங்கைச் சிங்கப்பூருக்குக் கள்ளக் கடத்தல் மூலம் கொண்டு வந்தார். சுல்தான் உசேன் என்ற பட்டத்தின் கீழ் சொகூரின் உரிமை கொண்ட சுல்தானாக தெங்கு லாங்கை அங்கீகரிக்கவும், அவருக்கு ஆண்டு தோறும் ஐஅ$5,000 (3,57,580) மற்றும் தெமெங்கோங்கிற்கு மற்றுமொரு ஐஅ$3,000 (2,14,548)ஐக் கொடுக்க இராஃபிள்சு முன் வந்தார்; பதிலுக்கு, சுல்தான் உசேன் சிங்கப்பூரில் ஒரு வணிக நிலையத்தை நிறுவும் உரிமையைப் பிரித்தானியருக்குக் கொடுக்க வேண்டும்.[41] இவ்வாறாக சிங்கப்பூர் ஒப்பந்தமானது 6 பெப்பிரவரி 1819 அன்று கையொப்பமிடப்பட்டது.[42][43]

Thumb
1825ஆம் ஆண்டின் சுற்றாய்வு வரைபடம். சிங்கப்பூரின் கட்டற்ற துறைமுக வணிகமானது 150 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் ஆற்றில் அமைந்திருந்தது. இதன் பண்டைக் கால மற்றும் தொடக்க கால காலனி ஆட்சியாளர்களுக்கு இருப்பிடமாகக் கெனிங் மலைக் கோட்டை (நடுவில் உள்ளது) திகழ்ந்தது.

1824இல் சுல்தானுடனான ஒரு மேற்கொண்ட ஒப்பந்தமானது ஒட்டு மொத்தத் தீவும் பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியாக மாறுவதற்கு வழி வகுத்தது.[44] 1826இல் அப்போது பிரித்தானிய இந்தியாவின் அதிகார வரம்பிற்குக் கீழான நீரிணைக் குடியேற்றங்களின் பகுதியாக சிங்கப்பூர் உருவானது. 1836இல் மாகாணத் தலைநகராக சிங்கப்பூர் உருவானது.[45] இராஃபிள்சு வருவதற்கு முன்னர் இத்தீவில் வெறும் சுமார் 1,000 மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பூர்வீக மலாய் மக்களாகவும், அவர்களுடன் சிறு எண்ணிக்கையிலான சீனர்களும் வாழ்ந்து வந்தனர்.[46] 1860 வாக்கில் மக்கள் தொகையானது 80,000க்கும் மேல் அதிகரித்தது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சீனர்களாக இருந்தனர்.[44] இந்தத் தொடக்க காலக் குடியேறிகளில் பெரும்பாலானவர்கள் மிளகு மற்றும் கம்பீர் மூலிகைச் சாறு தோட்டங்களில் பணியாற்றுவதற்காக வந்திருந்தனர்.[47] 1867இல் நீரிணைக் குடியேற்றங்களானவை பிரித்தானிய இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டன. பிரித்தானியாவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.[48] பிறகு 1890களில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தொய்வகத் தொழில் துறையானது நிறுவப்பட்ட நேரத்தில்,[49] மரத்தில் இருந்து தொய்வகம் எடுத்தல் மற்றும் ஏற்றுமதிக்கான ஓர் உலகளாவிய மையமாக இத்தீவானது உருவானது.[44]

Thumb
சிங்கப்பூரில் சூரிய உதயத்தைக் காட்டும் ஓர் அகல் விரிவுக் காட்சி. ஆண்டு 1865, வின்சென்ட் புரூக்கின் ஒரு கல்லச்சுப் பதிப்பு.

முதலாம் உலகப் போரால் (1914-18) சிங்கப்பூர் பெருமளவுக்குப் பாதிக்கப்படவில்லை. ஏனெனில், அப்போரானது தென்கிழக்காசியாவுக்குப் பரவியிருக்கவில்லை. அப்போரின் போது ஒரே ஒரு முக்கியமான நிகழ்வானது பிரித்தானிய இந்தியாவைச் சேர்ந்த முசுலிம் சிப்பாய்களால் நடத்தப்பட்ட 1915ஆம் ஆண்டின் சிங்கப்பூர் கிளர்ச்சியாகும். இவர்கள் சிங்கப்பூரில் கோட்டைக் காவல் படையினராகப் பணியாற்றினர்.[50] ஒரு முசுலிம் அரசான உதுமானியப் பேரரசுக்கு எதிராகச் சண்டையிட அவர்கள் அனுப்பப்படப் போவதாக வந்த செய்திகளை அறிந்ததற்குப் பிறகு சிப்பாய்கள் கிளர்ச்சி செய்தனர். தங்களது அதிகாரிகள் மற்றும் பல பிரித்தானியக் குடிமக்களைக் கொன்றனர். அதற்குப் பிறகு சொகூர் மற்றும் மியான்மரில் இருந்து வந்த முசுலிம் அல்லாத துருப்புகளால் இக்கிளர்ச்சியானது ஒடுக்கப்பட்டது.[51]

முதலாம் உலகப் போருக்குப் பிறகு சிங்கப்பூரைத் தற்காக்கும் உத்தியின் ஒரு பகுதியாக ஒரு பெரிய சிங்கப்பூர் கடற்படைத் தளத்தைப் பிரித்தானியர் கட்டமைத்தனர்.[52] உண்மையில் 1921ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த இதன் கட்டுமானமானது ஆகத்து 1931இல் மஞ்சூரியா மீது சப்பானியர் படையெடுக்கும் வரை ஒரு மெதுவான வேகத்திலேயே நடைபெற்றது. இதற்கு ஐஅ$60 மில்லியன் (429.1 கோடி) செலவு பிடித்தது. 1938ஆம் ஆண்டு வரை இது முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படவில்லை. இருந்த போதிலும் நீரை வெளியேற்றிக் கப்பலைப் பழுது பார்க்கக் கூடிய உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுத்தும் இடமாகவும், மூன்றாவது மிகப் பெரிய மிதக்கும் கப்பல் நிறுத்துமிடமாகவும் இவ்விடம் திகழ்ந்தது. ஒட்டு மொத்த பிரித்தானியக் கடற்படைக்கும் ஆறு மாதங்களுக்கு பயன்படத் தேவையான எரிபொருள் கொள்கலன்களையும் இது கொண்டிருந்தது.[52][53][54] சிலோசோ கோட்டை, கெனிங் கோட்டை மற்றும் லேப்ரடார் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனமான 15 அங்குலக் (380 மி. மீ.) கடற்படைத் துப்பாக்கிகள், மேலும் தெங்கா விமானப்படைத் தளத்தில் அமைந்திருந்த ஒரு வேத்தியல் விமானப் படை தளம் ஆகியவற்றால் இத்தளமானது தற்காக்கப்பட்டது. இத்தளத்தைக் "கிழக்கின் ஜிப்ரால்ட்டர்" என்று வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். இராணுவ ஆலோசனைகளில் இத்தளமானது பெரும்பாலும் வெறுமனே "சூயசுக்குக் கிழக்கே" என்று குறிப்பிடப்பட்டது. எனினும், பிரித்தானிய மையக் கப்பல் குழுவானது ஐரோப்பாவிலேயே நிலை நிறுத்தப்பட்டிருந்தது. ஆசியாவில் தங்களது பகுதிகளைப் பாதுகாக்க ஓர் இரண்டாவது கப்பல் குழுவைக் கட்டமைக்க பிரித்தானியரால் நிதி செலவழிக்க இயலவில்லை. நெருக்கடி நிலை நிகழும் போது சிங்கப்பூருக்கு உடனடியாக மையக் கப்பல் குழுவானது பயணிக்க வேண்டும் எனத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக 1939ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் வெடித்ததற்குப் பிறகு இக்கப்பல் குழுவானது பிரித்தானியாவைத் தற்காப்பதற்காக முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டது. இது சப்பானியப் படையெடுப்புக்கு இலக்காகக் கூடியதாக சிங்கப்பூரை விட்டு விட்டது.[55][56]

சப்பானிய ஆக்கிரமிப்பு

Thumb
சப்பானியச் சரணடைவுக்குப் பிறகு 1945இல் வெளியேறும் பிரித்தானியர். பின்புறம் நகருக்கு அருகில் உள்ள கல்லாங் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரமானது காட்டப்பட்டுள்ளது.

பசிபிக் போரின் போது மலாயா மீதான சப்பானியப் படையெடுப்பானது சிங்கப்பூர் போரில் இறுதி முடிவை எட்டியது. 15 பெப்பிரவரி 1942 அன்று 60,000 துருப்புக்களையுடைய பிரித்தானியப் படையானது சரணடைந்த போது பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இத்தோல்வியை "பிரித்தானிய வரலாற்றில் மிக மோசமான அழிவு மற்றும் மிகப் பெரிய பணிந்து போன நிகழ்வு" என்று குறிப்பிட்டார்.[57] சிங்கப்பூருக்கான சண்டையின் போது பிரித்தானியா மற்றும் பேரரசின் இழப்புகளானவை கடுமையாக இருந்தன. கிட்டத்தட்ட 85,000 வீரர்கள் மொத்தமாகப் பிடிக்கப்பட்டிருந்தனர்.[58] சுமார் 5,000 பேர் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருந்தனர்.[59] இதில் பெரும்பாலானவர்கள் ஆத்திரேலியர்கள் ஆவர்.[60][61][62] சிங்கப்பூரில் சண்டையின் போது சப்பானிய இழப்புகளானவை 1,714 பேர் கொல்லப்பட்டது மற்றும் 3,378 பேர் காயமடைந்ததாக இருந்தது.[58][f] சப்பான், பிரித்தானியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை உள்ளிட்ட பல நாடுகளின் வரலாற்றில் இந்த ஆக்கிரமிப்பானது ஒரு முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது. போரின் பொதுவான நிலையைத் தீர்மானிப்பதாக இருப்பதாக இவ்வெற்றியை சப்பானிய செய்தித்தாள்கள் வெற்றிக் களிப்புடன் அறிவித்தன.[63][64] இதைத் தொடர்ந்து நடந்த சூக் சிங் படுகொலையில் 5,000 மற்றும் 25,000க்கு இடையிலான சீன மக்கள் கொல்லப்பட்டனர்.[65] 1945/1946இல் சிங்கப்பூரை விடுதலை பெற வைக்க பிரித்தானியப் படைகள் திட்டமிட்டன; எனினும், இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் முன்னரே போரானது முடிவுக்கு வந்தது.[66][67]

போருக்குப் பிந்தைய காலம்

Thumb
1951இல் சிங்கப்பூர் பட்டணத்தின் வரைபடம்.

15 ஆகத்து 1945 அன்று நேச நாடுகளிடம் சப்பானியர் சரணடைந்ததற்குப் பிறகு சிங்கப்பூரானது ஒரு குறுகிய கால வன்முறை மற்றும் ஒழுங்கற்ற நிலைக்கு உள்ளானது; சூறையாடுதல் மற்றும் பழிவாங்கலுக்காகக் கொல்லப்படுதல் ஆகியவை பரவலாக நடைபெற்றன. 12 செப்டம்பர் 1945 அன்று தளபதி இசைச் தெரௌச்சியின் சார்பாக தளபதி செய்சிரோ இதாககியிடமிருந்து இப்பகுதியில் சப்பானியப் படைகள் அதிகாரப் பூர்வமாகச் சரணடைவதை ஏற்றுக் கொள்வதற்காக மவுண்ட்பேட்டன் பிரபுவால் தலைமை தாங்கப்பட்ட பிரித்தானிய, ஆத்திரேலிய, மற்றும் இந்தியத் துருப்புக்கள் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்தன.[66][67] இதற்கு இடையில் தோமோயுகி யமாசிதா போர்க் குற்றங்களுக்காக ஓர் ஐக்கிய அமெரிக்க இராணுவ ஆணையத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், மலாயா அல்லது சிங்கப்பூரில் தனது துருப்புகளால் நடத்தப்பட்ட குற்றங்களுக்காக இவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. 23 பெப்பிரவரி 1946 அன்று குற்றம் சாட்டப்பட்ட இவர் பிலிப்பீன்சில் தூக்கு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[68][69]

சிங்கப்பூரில் இருந்த பெரும்பாலான உட்கட்டமைப்பானது போரின் போது அழிக்கப்பட்டிருந்தது. பொதுப் பயன்பாட்டை வழங்க வேண்டியவையும் கூட இதில் அடங்கும். உணவுப் பற்றாக்குறையானது ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய், மற்றும் பரவலான குற்றம் மற்றும் வன்முறைக்கு வழி வகுத்தது. 1947ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களானவை பொதுப் போக்குவரத்து மற்றும் பிற சேவைகளில் பெருமளவுக்கு நிறுத்தப்படுவதற்குக் காரணமானது. எனினும், 1947ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொருளாதாரமானது மீளத் தொடங்கியது. வெள்ளீயம் மற்றும் தொய்வகத்திற்கான ஒரு அதிகரித்து வந்த பன்னாட்டு அளவிலான தேவையால் இது எளிதாக்கப்பட்டது.[70] தங்களது குடியேற்றத்தைச் சப்பானியருக்கு எதிராக வெற்றிகரமாகத் தற்காப்பதில் பிரித்தானியா அடைந்த தோல்வியானது சிங்கப்பூரர்களின் பார்வையில் பிரித்தானியா மீதான கண்ணோட்டத்தை மாற்றியது. 1 ஏப்ரல் 1946 அன்று சிங்கப்பூரில் பிரித்தானிய இராணுவம் நிர்வாகமானது முடிவுக்கு வந்தது. சிங்கப்பூரானது ஒரு தனியான பிரித்தானிய அரசின் குடியேற்றமாக உருவானது.[70] சூலை 1947இல் தனித் தனியான செயல்முறை மற்றும் சட்டமன்றங்கள் நிறுவப்பட்டன. இதைத் தொடர்ந்து வந்த ஆண்டில் சட்டமன்றத்தின் ஆறு உறுப்பினர்களுக்கான தேர்தலானது அறிவிக்கப்பட்டது.[71]

1950களின் போது தொழிற்சங்கங்கள் மற்றும் சீன பள்ளிகளுடனான வலிமையான தொடர்புகளுடன் சீனப் பொதுவுடைமைவாதிகள் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு கரந்தடிப் போர் முறையை நடத்தினர். மலாயா அவசரகாலம் ஏற்படுவதற்கு இது வழி வகுத்தது. சிங்கப்பூரில் நடந்த 1954 ஆம் ஆண்டின் தேசிய சேவை ஆர்ப்பாட்டங்கள், ஆக் லீ பேருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சீன நடுப் பள்ளிகள் ஆர்ப்பாட்டங்கள் ஆகிய அனைத்தும் இந்த நிகழ்வுகளுடன் தொடர்புடையவையாகும்.[72] தொழிலாளர் முன்னணியின் சுதந்திரத்துக்கு ஆதரவான தலைவரான தாவீது மார்சல் 1955ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[73] இலண்டனுக்குப் பயணித்த ஒரு தூதுக் குழுவுக்கு இவர் தலைமை தாங்கினார். முழுமையான சுயாட்சிக்கு இவரது கோரலை பிரித்தானியா நிராகரித்தது. இவர் இராஜினாமா செய்தார். 1956இல் இவருக்குப் பதிலாக லிம் யூ ஆக் பதவிக்கு வந்தார். மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாதுகாப்பு மற்றும் அயல்நாட்டு விவகாரங்கள் தவிர்த்து அனைத்து விவகாரங்களிலும் சிங்கப்பூருக்கு முழுமையான சுயாட்சியை வழங்க பிரித்தானியா 3 சூன் 1959 அன்று ஒப்புக் கொண்டது.[74] இதற்கு சில நாட்களுக்கு முன்னர் 30 மே 1959 தேர்தலில் மக்கள் செயல் கட்சியானது பெரும் வெற்றி பெற்றது.[75] முதல் யாங் டி பெர்துவான் நெகாராவாகச் (அரசின் தலைவர்) ஆளுநர் சர் வில்லியம் அல்மோண்ட் காட்ரிங்டன் குட் சேவையாற்றினார்.[76]

மலேசியாவுக்குள்

Thumb
ஒரு பண்டக சாலையாக சிங்கப்பூர் செழித்தோங்கியது. 1960களில் சிறு படகுகளானவை கடற்கரைக்கு அருகில் இருந்த கப்பல்கள் மற்றும் சிங்கப்பூர் ஆற்றுக்கு இடையிலான சரக்குகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

மக்கள் செயல் கட்சியின் தலைவர்கள் சிங்கப்பூரின் எதிர் காலம் மலாயாவுடன் தான் என்று நம்பினர். இதற்குக் காரணம் இரு நாடுகளுக்கும் இடையில் இருந்த வலிமையான உறவுகள் ஆகும். ஒரு பொதுவான சந்தையை உருவாக்குவதன் மூலம் மலாயாவுடன் மீண்டும் இணைவது பொருளாதாரத்துக்கு அனுகூலமாக அமையும் என்றும், சிங்கப்பூரில் நிகழ்ந்து கொண்டிருந்த வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தணிக்கும் என்றும் எண்ணப்பட்டது. எனினும், செல்வாக்கு இழக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக மக்கள் செயல் கட்சியின் ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கான இடதுசாரிப் பிரிவானது இரு நாடுகள் இணைவதை கடுமையாக எதிர்த்தது. மக்கள் செயல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு பாரிசன் சோசியாலிசு என்ற கட்சியை அவர்கள் அமைத்தனர்.[77][78] மலாயாவின் ஆளும் கட்சியான அம்னோ உறுதியான வகையில் பொதுவுடைமைவாதத்திற்கு எதிரானதாக இருந்தது. மக்கள் செயல் கட்சியின் பொதுவுடைமைவாதிகள் சாராத பிரிவுகளுக்கு அம்னோ ஆதரவளிக்கும் என்று சந்தேகிக்கப்பட்டது. தங்களது அரசியல் சக்திக்கு அடிப்படையாகத் திகழ்ந்த மலாயாவின் இன சம நிலையை சிங்கப்பூரில் இருந்த பெருமளவிலான சீன இன மக்கள் மாற்றுவர் என்ற அச்சம் மற்றும் மக்கள் செயல் கட்சியின் அரசாங்கம் குறித்த நம்பிக்கையின்மை காரணமாக அம்னோ தொடக்கத்தில் இணைப்பு யோசனை குறித்து ஐயம் கொண்டது. பொதுவுடைமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற இரு பிரிவினருக்கும் பொதுவான அச்சத்தின் காரணமாக இணைப்பு யோசனைக்குப் பிறகு ஆதரவளிக்கத் தொடங்கியது.[79]

27 மே 1961 அன்று மலாயாவின் பிரதமரான துங்கு அப்துல் ரகுமான் மலேசியா என்று அழைக்கப்படும் ஒரு புதிய கூட்டமைப்புக்கான ஒரு திடீர் முன் வரைவை வைத்தார். மலாயா கூட்டமைப்பு, சிங்கப்பூர், புரூணை, வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் ஆகிய இப்பகுதியில் இருந்த தற்போதைய மற்றும் முந்தைய பிரித்தானியப் பகுதிகளை இது ஒன்றிணைப்பதாக இருந்தது.[79][80] சிங்கப்பூரின் சீன மக்கள் தொகையைப் போர்னியோவின் பகுதிகளில் இருந்த மேற்கொண்ட மலாயா மக்கள் தொகையானது சமப்படுத்தும் என அம்னோ தலைவர்கள் நம்பினர்.[74] பிரித்தானிய அரசாங்கமும் தனது பங்குக்குச் சிங்கப்பூர் பொதுவுடைமைவாதத்திற்கு ஒரு புகலிடமாக மாறுவதை இந்த இணைப்பானது தடுக்கும் என்று நம்பியது.[81] இணைப்புக்கு அதிகாரத்தைப் பெறுவதற்காக மக்கள் செயல் கட்சியானது இணைப்பு குறித்து ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தியது. இந்த வாக்கெடுப்பானது மலேசியாவுடன் ஓர் இணைப்புக்கான வேறுபட்ட விதிமுறைகளுக்கான வாய்ப்பை உள்ளடக்கியிருந்தது. ஆனால், ஒட்டு மொத்தமாக இணைப்பைத் தவிர்ப்பதற்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.[82][83] 16 செப்டம்பர் 1963 அன்று மலேசிய ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் மலேசியாவின் புதிய கூட்டமைப்பை அமைப்பதற்காக சிங்கப்பூரானது மலாயா, வடக்கு போர்னியோ, மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளுடன் இணைந்தது.[84] இந்த ஒப்பந்தத்தின் கீழ் மலேசியாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் அதிகப்படியான தன்னாட்சியை சிங்கப்பூர் பெற்றிருந்தது.[85]

போர்னியோ மீதான தனது சொந்த உரிமை கோரல்களின் காரணமாக மலேசியா அமைக்கப்படுவதை இந்தோனேசியா எதிர்த்தது. மலேசியா அமைக்கப்படுவதற்கு எதிர் வினையாக கான்பிரன்டசி (இந்தோனேசிய மொழியில் "மோதல்") என்ற இயக்கத்தைத் தொடங்கியது.[86] 10 மார்ச் 1965 அன்று இந்தோனேசிய அழிம்பு வினைஞர்களால் மெக்டொனால்ட்டு ஹவுஸ் என்ற கட்டடத்தின் இடைத் தளத்தில் வைக்கப்பட்ட ஒரு வெடிகுண்டு வெடித்தது. மூன்று பேரைக் கொன்றது. 33 பேருக்குக் காயம் ஏற்படுத்தியது. இந்த மோதலின் போது நடைபெற்ற குறைந்தது 42 வெடிகுண்டு நிகழ்வுகளில் இதுவே அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியதாக அமைந்தது.[87] இந்தோனேசிய ஈரூடகப் படைப் பிரிவின் இரு உறுப்பினர்களான ஒசுமான் பின் ஹாஜி மொகமெது அலி மற்றும் ஹருன் பின் சையது ஆகியோர் இறுதியாகக் குற்றம் சாட்டப்பட்டனர். குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.[88] இந்த குண்டு வெடிப்பானது ஐஅ$2,50,000 (1,78,79,000) சேதத்தை மெக்டொனால்டு ஹவுஸ் கட்டடத்திற்கு ஏற்படுத்தியது.[89][90]

இணைப்புக்குப் பிறகும் கூட பல அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் சிங்கப்பூர் அரசாங்கமும், மலேசிய மைய அரசாங்கமும் கருத்துகளில் வேறுபட்டிருந்தன.[91] ஒரு பொதுவான சந்தையை நிறுவ ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் மலேசியாவின் எஞ்சிய பகுதியுடன் வணிகம் செய்யும் போது சிங்கப்பூர் தொடர்ந்து கட்டுப்பாடுகளை எதிர் கொண்டது. பதிலுக்கு இரு கிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட கடன்களை முழு அளவுக்கு சபா மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளுக்குச் சிங்கப்பூர் வழங்கவில்லை. பேச்சுவார்த்தைகள் சீக்கிரம் தோல்வியில் முடிந்தன. வன் சொற்களால் அவமதிக்கிற பேச்சுகளும், எழுத்துக்களும் இரு பக்கத்திலும் பொதுவாகிப் போயின. இது சிங்கப்பூரில் இனப் பிரச்சினைகளுக்கு வழி வகுத்தது. இறுதியாக, 1964ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் முடிவடைந்தது.[92] மேற்கொண்ட இரத்தம் சிந்துவதைத் தவிர்க்க எந்த ஒரு மாற்று வழியும் இல்லை எனக் கண்டதற்குப் பிறகு 7 ஆகத்து 1965 அன்று மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் இரகுமான் (மக்கள் செயல் கட்சியின் தலைவர்களின் இரகசியப் பேச்சு வார்த்தைகளின் உதவியுடன் இதைச் செய்தார் என 2015ஆம் ஆண்டு வெளிக் கொணரப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது)[93] மலேசியாவிலிருந்து சிங்கப்பூரை வெளியேற்ற வாக்களிக்க வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்றத்திற்கு அறிவுறுத்தினார்.[91] 9 ஆகத்து 1965 அன்று மலேசிய நாடாளுமன்றமானது ஆதரவாக 126 மற்றும் எதிர்ப்பாக 0 ஓட்டுகள் என்ற வாக்களிப்பின் படி அரசியலமைப்பில் திருத்தம் செய்ய முடிவு செய்தது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூரை வெளியேற்றியது. இது சிங்கப்பூரை ஒரு புதிய சுதந்திர நாடாக ஆக்கியது.[74][93][94][95][96][97]

சிங்கப்பூர் குடியரசு

Thumb
சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ.

மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு சிங்கப்பூர் 9 ஆகத்து 1965 அன்று சிங்கப்பூர் குடியரசாக சுதந்திரமடைந்தது.[98][99] லீ குவான் யூ மற்றும் யூசுப் இசாக் ஆகியோர் முறையே முதல் பிரதமர் மற்றும் அதிபராகப் பணியாற்றினர்.[100][101] 1967இல் இந்நாடானது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (ஆசியான்) பிற நாடுகளுடன் இணைந்து தோற்றுவித்தது.[102] 1969இல் இனக் கலவரங்கள் மீண்டும் ஒரு முறை வெடித்தன.[103] துரித பொருளாதார வளர்ச்சி, தொழில் முனைவோருக்கான ஆதரவு, மற்றும் உள்நாட்டு சனநாயகம் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு லீ குவான் யூ கொடுத்த முக்கியத்துவங்களானவை அடுத்த அரை நூற்றாண்டுக்கு சிங்கப்பூரின் கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்தன.[104][105] பொருளாதார வளர்ச்சியானது 1980கள் முழுவதும் தொடர்ந்தது. வேலையில்லா வீதமானது 3%ஆக இருந்தது. 1999ஆம் ஆண்டு வரை உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது சராசரியாக சுமார் 8%ஆக இருந்தது. 1980களின் போது அண்டை நாடுகள் குறைவான சம்பளம் பெற்ற பணியாளர்களின் மூலம் உற்பத்தியைப் பெருக்கத் தொடங்கியதால் தொடர்ந்து போட்டித் திறனுடன் இருக்கும் பொருட்டு சிலிக்கான் சில்லுகள் தயாரிக்கும் தொழில் துறை போன்ற உயர் தொழில்நுட்ப தொழில் துறைகளை நோக்கி சிங்கப்பூர் நகரத் தொடங்கியது. 1981இல் சாங்கி சர்வதேச விமான நிலையமானது திறக்கப்பட்டது. சிங்கப்பூர் வான்வழி விமான நிறுவனமானது உருவாக்கப்பட்டது.[106] சிங்கப்பூர் துறைமுகமானது உலகின் மிக பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாக உருவானது. இக்காலகட்டத்தின் போது சேவை மற்றும் சுற்றுலா தொழில் துறைகளும் கூட பெருமளவுக்கு வளர்ச்சியடைந்தன.[107][108]

மக்கள் செயல் கட்சியானது சுதந்திரம் பெற்றதில் இருந்து தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. அரசியல் மற்றும் ஊடகச் செயல்பாடுகள் மீதான அரசாங்கத்தின் கண்டிப்பான ஒழுங்கு முறையை சில செயல்பாட்டாளர்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் அரசியல் உரிமைகள் மீதான குறுக்கீடாகக் கண்டனர்.[109] இதற்குப் பதிலாக, எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தோற்கடிக்கப்பட்ட மூன்று போட்டியாளர்கள் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதை அனுமதிக்க 1984இல் நாடாளுமன்றத்தின் தொகுதி சாராத உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியது போன்ற ஏராளமான முக்கிய அரசியல் மாற்றங்களை சிங்கப்பூர் கண்டது. நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்த பல-அமர்வு வாக்காளர் பிரிவுகளை உருவாக்குவதற்காக 1988இல் குழு பிரதிநிதித்துவ தொகுதிகளானவை அறிமுகப்படுத்தப்பட்டன.[110] தேர்ந்தெடுக்கப்படாத நடு நிலையான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்க 1990இல் முன் மொழியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.[111] முந்தைய கையிருப்புகள் மற்றும் சில அரசு அலுவலகங்களில் நியமிப்புகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்த வெட்டதிகாரத்தை உடைய ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கு அதிகாரம் அளிப்பதற்காக 1991இல் அரசியலமைப்பானது திருத்தப்பட்டது.[112]

1990இல் லீ குவான் யூவுக்குப் பிறகு கோ சொக் டொங் சிங்கப்பூரின் பிரதமராகப் பதவிக்கு வந்தார்.[113] சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரானார். கோவின் ஆட்சிக் காலத்தில் இந்நாடானது 1997 ஆசிய நிதி நெருக்கடி மற்றும் 2003ஆம் ஆண்டின் சார்சு நோய்த் தொற்று ஆகியவற்றைக் கண்டது.[114][115] 2004இல் லீ குவான் யூவின் முதல் மகனான லீ சியன் லூங் நாட்டின் மூன்றாவது பிரதமரானார்.[115] லீ சியன் லூங்கின் ஆட்சிக் காலமானது உலகப் பொருளாதார நெருக்கடி 2008-2009, தஞ்சோங் பகர் தொடருந்து நிலையத்தில் நில உரிமை தொடர்பான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு இடையிலான ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது, மரீனா பே சாண்ட்ஸ் மற்றும் ரிசார்ட்சு வேர்ல்டு செந்தோசா ஆகிய இடங்களில் அமைந்திருந்த இரு ஒன்றிணைந்த போக்கிடங்களின் அறிமுகம், மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று ஆகியவற்றைக் கண்டது.[116] மக்கள் செயல் கட்சியானது அதன் மிக மோசமான தேர்தல் முடிவுகளை 2011ஆம் ஆண்டில் பெற்றது. அயல் நாட்டு வேலையாட்கள் அதிகமாக வருவது மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் மீதான விவாதங்களுக்கு மத்தியில் வெறும் 60% வாக்குகளை மட்டுமே பெற்றது.[117] 23 மார்ச்சு 2015 அன்று லீ குவான் யூ இறந்தார். நாடு முழுவதும் ஒரு வார கால பொது துக்கமானது கடைபிடிக்கப்பட்டது.[105] இறுதியாக, மக்கள் செயல் கட்சியானது நாடாளுமன்றத்தில் அதன் ஆதிக்கத்தை செப்டம்பர் பொதுத் தேர்தலின் மூலமாக மீண்டும் பெற்றது. மொத்த வாக்குகளில் 69.9%ஐப் பெற்றது.[118] எனினும், இது 2001ஆம் ஆண்டின் 75.3%[119] மற்றும் 1968இன் 86.7%[120] ஆகியவற்றைக் காட்டிலும் குறைவானதாகவே இருந்தது. சூலையில் நடைபெற்ற 2020ஆம் ஆண்டு தேர்தலானது மக்கள் செயல் கட்சியின் வாக்கு சதவீதமானது 61%க்குக் குறைந்ததைக் கண்டது. அதே நேரத்தில், பாட்டாளிக் கட்சியானது 93 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்களைப் பெற்றது. பிற எந்த ஒரு கட்சியாலும் வெல்லப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் எண்ணிக்கை இதுவாகும்.[121] 15 மே 2024 அன்று லாரன்சு வோங் சிங்கப்பூரின் நான்காவது பிரதமர் ஆனார். சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமர் இவராவார்.[122]

Remove ads

அரசாங்கமும், அரசியலும்

Thumb
அதிபரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடம் மற்றும் அலுவலகமாகவும், மேலும் பிரதமரின் செயல்பாட்டு அலுவலகமாகவும் இசுதானா எனும் இக்கட்டடம் திகழ்கிறது.
Thumb
உச்சநீதிமன்றம் (இடது) மற்றும் சிங்கப்பூர் நாடாளுமன்றம் கூடும் இடமான நாடாளுமன்றக் கட்டடம் (வலது)
Thumb
ஆங் லிம் பூங்காவிலுள்ள பேச்சாளரின் முனையானது ஒரு பொது விளக்கப் பகுதியைக் கொடுக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் வரம்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாளுமன்றக் குடியரசு சிங்கப்பூர் ஆகும். நாட்டின் உச்சபட்ச சட்டமாக சிங்கப்பூரின் அரசியலமைப்பு உள்ளது. நிர்வாகத்தின் அமைப்பு மற்றும் பொறுப்பு ஆகியவற்றை இது நிறுவுகிறது. அதிபர் நாட்டின் தலைவர் ஆவார்.[123][124] சிங்கப்பூரின் நிர்வாகமானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • செயலாட்சி: செயலாட்சியானது பிரதமரால் தலைமை தாங்கப்பட்ட அமைச்சரவை மற்றும் அட்டர்னி ஜெனரலால் தலைமை தாங்கப்பட்ட அட்டர்னி ஜெனரலின் அவை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.[125] அனைத்து அரசாங்கக் கொள்கைகள் மற்றும் அரசின் விவகாரங்களின் அன்றாட நிர்வாகம் ஆகியவற்றுக்கு ஒட்டு மொத்தமாகப் பொறுப்புடையதாக அமைச்சரவை உள்ளது. இது பொதுவாக சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைக் கொண்டதாக உள்ளது. பிரதமர், அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகியோர் அதிபரால் நியமிக்கப்படுகின்றனர். அதிபர் பிரதமரின் ஆலோசனை மற்றும் ஒப்புதலுடன் செயல்படுகிறார். அரசாங்கத்தின் செயலாட்சிப் பிரிவின் செயல் முறைத் தலைவராகப் பிரதமர் திகழ்கிறார்.[123][126]
  • சட்டவாக்க அவை: சிங்கப்பூரின் நாடாளுமன்றமானது ஓரவை முறைமையை உடையதாகும். அதிபருடன் சேர்த்து இது சட்டவாக்க அவையைக் கொண்டுள்ளது.[127] தேர்ந்தெடுக்கப்பட்ட, தொகுதி-சாராத மற்றும் முன்மொழியப்பட்ட உறுப்பினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பொதுத் தேர்தலின் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றுவதற்கு ஒட்டு மொத்த பொறுப்புடையதாக சிங்கப்பூர் நாடாளுமன்றம் திகழ்கிறது.[123] அரசாங்கம் மீது மேற்பார்வையிடுவதில் வரம்புக்குட்பட்ட கட்டாயமல்லாத அதிகாரங்களை அதிபர் கொண்டுள்ளார். அதிபரின் வெட்டதிகாரமும் மேற்கொண்டு நாடாளுமன்றத்தால் மாற்றியமைக்கப்படக் கூடியதாக உள்ளது.[128][129]
  • நீதித்துறை: நீதித்துறையின் பணியானது சுதந்திரமாக நீதி நிர்வாகம் செய்வதாகும். இது தலைமை நீதிபதியால் தலைமை தாங்கப்பட்டுள்ளது. நீதிபதிகளும், நீதித்துறை ஆணையர்களும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் அதிபரால் நியமிக்கப்படுகின்றனர்.[130] நபர்களுக்கு இடையிலான குடிசார் பிரச்சினைகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தல் மற்றும் அதன் அரசியலமைப்புக்குட்பட்டவாறு சட்ட விளக்கங்களை அளித்தல் ஆகிய முடிவுகளை உச்சநீதிமன்றமும், அரசு நீதிமன்றங்களும் எடுக்கின்றன. அரசியலமைப்புக்கு முரணாகத் தோன்றுகின்ற எந்த ஒரு சட்டம் அல்லது சட்டத்தின் ஒரு பிரிவானது உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்படலாம்.[131]

அதிபர் நேரடியாகப் பொது வாக்கெடுப்பின் மூலம் புதுப்பிக்கப்படக் கூடிய 6 ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மக்கள் செயல் கட்சி அரசாங்கத்தால் இயற்றப்பட்ட இப்பதவிக்கான தகுதிகளானவை கடுமையானவையாக உள்ளன. அதிபர் பதவிக்குப் போட்டியிட ஒரு குறைவான அளவு மக்களே தகுதி பெறுகின்றனர் என்ற நிலையில் இது உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[132][133] அதிபர் வேட்பாளர் குறைந்தது 45 வயது உடையவராகவும், அந்நேரத்தில் எந்த ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினராக இல்லாதவராகவும், குறிப்பிட்ட பொதுச் சேவை தலைமைத்துவப் பணிகளில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அரசுப் பதவியை வகித்தவராக அல்லது குறைந்தது 50 கோடி சிங்கப்பூர் வெள்ளி மதிப்புடைய பங்குகளை உடைய ஒரு முழுமையான வருவாய் ஈட்டக் கூடிய தனியார் துறை நிறுவனத்தின் ஒரு தலைமை அதிகாரியாக மூன்று வருட அனுபவத்தைக் கொண்டவராக இருக்க வேண்டும், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் குடிமகனாக இருக்க வேண்டும், குற்றப் பின்புலம் இல்லாதவராகவும், மேற்கொண்ட தகுதிகளை பூர்த்தி செய்தவராகவும் இருக்க வேண்டியது உள்ளிட்டவற்றை இத்தகைய தகுதிகள் கொண்டுள்ளன.[133][134][135] வேட்பாளர்கள் அதிபர் தேர்தல் குழுவிடம் நேர்மையான, நல்ல பண்புள்ள மற்றும் நற்பெயரைப் பெற்ற ஒரு நபர் என்று "திருப்திப்படுத்த" வேண்டியும் கூட உள்ளது.[136]

2017 முதல் ஐந்து மிக சமீபத்திய பதவிக் காலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இனக் குழுவிலிருந்து அதிபர் பதவிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தால் அந்த இன சமூகத்திற்கு அதிபர் தேர்தல்களானவை ஒதுக்கப்பட வேண்டும் என்ற தேவையை அரசியலமைப்பு ஏற்படுத்தியுள்ளது.[137] ஓர் ஒதுக்கப்பட்ட அதிபர் தேர்தலில் அச்சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே வேட்பாளர்களாகத் தகுதி பெற முடியும்.[138] 2017 ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் இத்தகைய கடுமையான தேவைகள் மற்றும் வேட்பாளர் 13% இருக்கும் மலாய் இனக் குழுவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற தேவையையுடைய ஓர் ஒதுக்கப்பட்ட தேர்தல் ஆகியவற்றின் இணைவானது அதிபர் தேர்தல் குழுவானது அதிபர் பதவிக்கு ஓர் ஒற்றை வேட்பாளரை அங்கீகரிக்கும் நிலைக்கு வழி வகுத்தது.[139] இவ்வாறாக மலாய் சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படும் அலிமா யாக்கோபு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகவும் கூட இவர் ஆனார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் (அல்லது அதை விட சீக்கிரமாக ஒரு திட்டமிடப்படாத தேர்தலின் மூலம்) தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 14-ஆவது மற்றும் தற்போதைய நாடாளுமன்றமானது 103 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் 93 உறுப்பினர்கள் 31 தொகுதிகளிலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒன்பது உறுப்பினர்கள் அதிபரால் நியமிக்கப்பட்ட கட்சி சாராத முன் மொழியப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். மூன்று தொகுதி சாராத உறுப்பினர்கள் எதிர்க் கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முந்தைய பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாத, ஆனால் எதிர்க் கட்சியின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டவர்கள் ஆவர். குழு பிரதிநிதித்துவத் தொகுதிகளில் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் குழுக்களை ஒருங்கிணைக்கின்றன. ஒரு குழு பிரதிநிதித்துவத் தொகுதியில் குறைந்தது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சிறுபான்மையின பின் புலத்தைக் கொண்டவராக இருக்க வேண்டும். அனைத்துத் தேர்தல்களும் பிரித்தானிய பாணி வாக்களிப்பு முறையைப் பின்பற்றி நடத்தப்படுகின்றன.[140] நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரம் தோறும் "மக்களைச் சந்திக்கும் நேரங்கள்" என்றழைக்கப்படும் அரசியல் சந்திப்புகளை நடத்துகின்றனர். அந்நேரத்தில் வீட்டு வசதி, நிதி ஆதரவு மற்றும் குடியேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வாக்காளர்களுக்கு இருக்கும் தனி நபர் பிரச்சினைகளைச் சரி செய்ய அவர்கள் உதவுவர்.[141]

சிங்கப்பூரின் அரசியலில் ஓர் ஆதிக்க நிலையை மக்கள் செயல் கட்சியானது கொண்டுள்ளது. 1959-இல் சுயாட்சி அளிக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் பெருமளவு நாடாளுமன்ற பெரும்பான்மையை இக்கட்சி வென்றுள்ளது. நடைமுறை மெய்ம்மையைச் சார்ந்ததாக தன்னைத் தானே விளக்கும் மக்கள் செயல் கட்சியானது கட்டற்ற-சந்தைக் கொள்கைகள், குடிசார் தேசியவாதம் மற்றும் நலத்திட்டம் ஆகியவற்றை ஒன்றிணைத்த ஒரு கலவையான சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது.[142][143][144] குடிசார் சுதந்திரங்கள் மீது கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தாலும் மக்கள் செயல் கட்சியின் கீழ் சிங்கப்பூர் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் நிலைத் தன்மையைக் கண்டுள்ளது.[145] அதிக பிரதிநிதித்துவமுடைய மற்றும் பிரபலமான எதிர்க் கட்சியாக மைய-இடதுசாரிக் கட்சியான பாட்டாளிக் கட்சி திகழ்கிறது. இக்கட்சி நாடாளுமன்றத்தில் எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[121]

மக்கள் செயல் கட்சியின் நீண்ட கால ஆதிக்கமானது கல்வியாளர்களால் சிங்கப்பூரானது தாராளமயமற்ற சனநாயகம்[146][147][148][149] அல்லது ஒரு மென்மையான-ஆதிக்கப் போக்குடைய அரசு என்று வரையறுக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது. இதில் மக்கள் செயல் கட்சியானது இந்நாட்டில் அதன் ஆட்சிக்கு சிறிதளவு முதல் எந்த ஓர் எதிர்ப்பற்ற அரசியல் போட்டியை எதிர் கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது.[150][151][152][153] பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஒழுங்கு ஆகியவற்றின் மீதான அரசின் கவனக் குவியத்துடன் ஒப்பிடப்படும் போது சிங்கப்பூரின் பல கட்சி சனநாயக செயல் முறையானது "குறைவான அளவாக உள்ளது" என வரையறுக்கப்படுகிறது.[154] கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியரான கார்டன் பி. மீன்சு ஒரு முழுமையான சனநாயகமாக உருவாக்கப்படாமல் சிங்கப்பூரானது "நலந்தரு அரசியலை" ஆனால் பிரித்தானியவிடம் இருந்து பெற்ற "உயர் ஆதிக்கப் போக்குடைய" குடியேற்ற கால அரசாங்க அமைப்பை மறு உருவாக்கம் செய்துள்ளது என்கிறார். "ஆசிய விழுமியங்களின்" ஒரு பழமை வாத சித்தாந்தமானது பிரித்தானிய ஆட்சியை இடமாற்றம் செய்வதற்காக சிங்கப்பூரில் பரிணாமம் அடைந்துள்ளது என்கிறார். "சமூக விசுவாசம், அரசு மீதான நம்பிக்கையின்மை மற்றும் பரவலான பொது மக்கள் சார்பான விவகாரங்களுக்கு தனி நபரின் அல்லது ஒட்டு மொத்தமாக அனைவரின் பொறுப்பைத் தவிர்ப்பது" ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இது அமைந்துள்ளது. தொடக்க கால மேற்குலக அமைப்புடன் ஒப்பிடும் போது மனித உரிமைக்குக் குறைவான முக்கியத்துவமே இங்கு கொடுக்கப்படுகிறது.[155] பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுபாடுடைய வர்க்கக் கவனக் குவியம் கொண்ட படிநிலை அமைப்பால் ஆதிக்கம் பெற்றுள்ளதன் படி "பொது மக்களோ அல்லது மேல் வகுப்பினரோ சனநாயகத்துடன் எந்த வித அனுபவத்தையும் கொண்டிருக்கவில்லை" என்ற உண்மையானது சிங்கப்பூரின் அரசியல் பண்பாட்டை உருவாக்க உதவியுள்ளது.[151] ஆசிய விழுமியங்களின் மரபு மற்றும் சிங்கப்பூருக்குள் வரம்புக்குட்பட்ட அரசியல் பண்பாடு ஆகியவை "மென்மையான ஆதிக்க அரசுக்கான செவ்வியல் விளக்கமான ஒரு நாடு"[154] மற்றும் "ஆழ்ந்த தாராளமயமற்ற நாடு" என்று இந்நாடு வரையறுக்கப்படுவதற்கு வழி வகுத்துள்ளது.[156]

நீதித்துறை அமைப்பானது ஆங்கிலேய பொது சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். பிரித்தானிய ஆட்சிக் காலத்தின் போது நிறுவப்பட்ட சட்டப் பாரம்பரியத்தை உள்ளூர் அளவிலான குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் இந்த அமைப்பு தொடர்கிறது. உண்மையில் பிரித்தானிய இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாக இந்நாட்டின் குற்றவியல் சட்டம் உள்ளது. சிங்கப்பூர் அந்நேரத்தில் பிரித்தானியாவின் குடியேற்றமாக இருந்ததால் சிங்கப்பூரில் இருந்த பிரித்தானிய குடியேற்ற அமைப்புகளால் இது பின்பற்றப்பட்டது. இது அமல்படுத்தப்பட்டதில் இருந்து கொண்டு வரப்பட்ட வெகு சில விதி விலக்குகள், திருத்தங்கள் மற்றும் இரத்துக்களுடன் நாட்டில் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையாக இது தொடர்கிறது.[157] அறங்கூறாயத்தால் நடத்தப்படும் குற்ற விசாரணையானது 1970-ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.[158] குற்றம் குறித்த இதன் கடுமையான சட்டங்கள் மற்றும் பழமை வாத நிலைப்பாடுகளுக்குக்காக சிங்கப்பூர் அறியப்படுகிறது. உடல் சார்ந்த தண்டனையாகிய குச்சிகள் மூலம் அடிப்பது[159][160] மற்றும் மரண தண்டனையாகிய தூக்கு மூலம் அளிக்கப்படுவது ஆகியவை இந்த சட்ட அமைப்பில் தக்க வைக்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியான தண்டனைகளாக பொதுவாக இவை பயன்படுத்தப்படுகின்றன.[161]

பேச்சு சுதந்திர உரிமை மற்றும் அதனுடன் தொடர்புடைய உரிமைகளானவை சிங்கப்பூரின் அரசியல் அமைப்பின் பிரிவு 14(1)-இன் கீழ் உறுதிப்படுத்தப்படுகின்றன. இதைத் தொடர்ந்த துணைப் பிரிவில் அதை ஒழுங்குபடுத்துவதற்கான பத்திகள் இருந்தாலும் இவ்வாறான உறுதிப்படுத்தல் உள்ளது.[162] அரசாங்கமானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரம், மேலும் சில குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளை வரம்புக்குட்படுத்தப்பட்டதாக ஆக்கியுள்ளது.[163] 2023-இல் உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டெண்ணில் எல்லைகளற்ற செய்தியாளர்களால் 180 நாடுகளில் 129-ஆவது இடத்தை சிங்கப்பூர் பெற்றது.[164] பிரீடம் ஹவுஸ் அமைப்பானது தன்னுடைய பிரீடம் இன் த வேர்ல்ட் அறிக்கையில் சிங்கப்பூரை "பகுதியளவு சுதந்திரமான நாடு" என தரப்படுத்தியுள்ளது.[145][165] பொருளாதார உளவியல் பிரிவு அமைப்பானது சிங்கப்பூரை "குறைபாடுடைய சனநாயகம்" எனக் குறிப்பிட்டுள்ளது தன்னுடைய சனநாயக சுட்டெண்ணில் நான்கு தரநிலைகளில் இரண்டாவது மிக சுதந்திரமான தரநிலையை இந்நாட்டிற்குக் கொடுத்துள்ளது.[166][167] ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அனைத்து பொது மக்கள் கூடும் நிகழ்வுகளும் காவல் துறையினரின் அனுமதியைப் பெற வேண்டிய தேவையுள்ளது. போராட்டங்களானவை சட்டரீதியாக பேச்சாளரின் முனை என்று அழைக்கப்படும் இடத்தில் மட்டுமே இந்நாட்டில் நடத்தப்படலாம்.[168]

"பொதுத் துறை இலஞ்ச, ஊழலின் உணர்ந்தறியப்பட்ட நிலைகளின்" அடிப்படையில் நாடுகளை தரப்படுத்தும் ஊழல் மலிவுச் சுட்டெண்ணானது உலகில் மிகவும் குறைவான இலஞ்ச, ஊழல் உடைய நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரை தொடர்ந்து தரப்படுத்தப்படுகிறது. தாராண்மையற்ற நாடாகக் கருதப்பட்டாலும் இந்த இடத்தை சிங்கப்பூர் பெறுகிறது.[169] தகுதி அடிப்படைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு வலிமையான, மென்மையான ஆதிக்கப் போக்குடைய அரசாங்கத்தை உடைய சிங்கப்பூரின் தனித்துவமான கலவையானது "சிங்கப்பூர் மாதிரி" என்று அறியப்படுகிறது. சிங்கப்பூரின் அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்திசைவான சமூக ஒழுங்கு ஆகியவற்றுக்கு பின்புலமாக இருக்கும் ஒரு முக்கியமான காரணியாக இது கருதப்படுகிறது.[170][171][172][173] 2021-இல் உலக நீதித்துறை திட்டத்தின் "சட்டத்தின் ஆட்சி சுட்டெண்ணானது" சிங்கப்பூரை சட்ட ஆட்சிக்கு ஆதரவளித்ததற்காக உலகின் 193 நாடுகளில் ஒட்டு மொத்தமாக 17-ஆவது இடத்தை சிங்கப்பூருக்கு கொடுத்தது. ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு (#3), இலஞ்ச, ஊழலற்ற நிலை (#3), ஒழுங்குமுறையை அமல்படுத்துதல் (#4), குடிசார் நீதி (#8), குற்றவியல் நீதி (#7) ஆகிய காரணிகளில் உயர்ந்த தரநிலையையும், வெளிப்படையான அரசாங்கம் (#34), அரசாங்க அதிகாரங்களுக்கான இடர்ப்பாடுகள் (#32), மற்றும் அடிப்படை உரிமைகள் (#38) ஆகிய காரணிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தாழ்ந்த தரநிலையையும் சிங்கப்பூர் பெறுகிறது.[174]

அயல் நாட்டு உறவுகள்

Thumb
செருமனியில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டின் ஜி-20 கூட்டத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங். 2010-ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் வழக்கமாக ஜி-20 கூட்டங்களில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறது.

தென்கிழக்காசியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவது சிங்கப்பூரின் குறிப்பிடப்பட்ட அயல்நாட்டுக் கொள்கை முக்கியத்துவம் ஆகும். இதன் மறைமுகமான பொருளாக இப்பகுதியில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை திகழ்கிறது.[175] 180-க்கும் மேற்பட்ட இறையாண்மையுடைய அரசுகளுடன் தூதரக உறவுகளை இந்நாடு கொண்டுள்ளது.[176]

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பைத் தோற்றுவித்த ஐந்து உறுப்பினர்களில் ஒரு நாடாக[177] "ஆசியான் கட்டற்ற வணிகப் பகுதி" (ஆங்கிலம்: ASEAN Free Trade Area (AFTA)) மற்றும் "ஆசியான் முதலீட்டுப் பகுதி" (ஆங்கிலம்: ASEAN Investment Area (AIA)) ஆகியவற்றுக்கான வலிமையான ஆதரவாளராக சிங்கப்பூர் திகழ்கிறது. ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (ஆங்கிலம்: APEC) தலைமைச் செயலகத்தையும் கூட இந்நாடு கொண்டுள்ளது.[178] ஐக்கிய நாடுகள் அவையில் ஒரு தன்னார்வ மற்றும் அலுவல் சாராத குழுவான "சிறிய அரசுகளின் மன்றத்தை" (ஆங்கிலம்: The Forum of Small States (FOSS)) நிறுவிய ஓர் உறுப்பினராகவும் கூட சிங்கப்பூர் திகழ்கிறது.[179]

ஆசியா-ஐரோப்பா சந்திப்பு (ஆங்கிலம்: Asia–Europe Meeting), கிழக்கு ஆசியா-இலத்தீன் அமெரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (ஆங்கிலம்: Forum for East Asia-Latin American Cooperation), இந்தியப் பெருங்கடல் வளைய அமைப்பு (ஆங்கிலம்: Indian Ocean Rim Association) மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு போன்ற பிற பிராந்திய அமைப்புகளிலும் சிங்கப்பூர் உறுப்பினராக உள்ளது.[175] கூட்டுசேரா இயக்கம்,[180] ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பொதுநலவாயம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் கூட இந்நாடு உள்ளது.[181][182] ஜி-20 அமைப்பின் ஓர் அலுவல் பூர்வமான உறுப்பினராக சிங்கப்பூர் இல்லாத போதும் 2010-ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாலான ஆண்டுகளில் ஜி-20 சந்திப்புகளில் பங்கெடுக்க இந்நாடு அழைக்கப்பட்டுள்ளது.[183] பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தின் (ஆங்கிலம்: Pacific Economic Cooperation Council (PECC)) தலைமைச் செயலகத்தின் அமைவிடமாகவும் கூட சிங்கப்பூர் திகழ்கிறது.[184]

பொதுவாக, பிற ஆசியான் உறுப்பினர் நாடுகளுடனான சிங்கப்பூரின் இரு தரப்பு உறவுகளை வலிமையாக உள்ளன. எனினும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளன.[185] அண்டை நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேசியாவுடனான உறவு முறைகளானவை சில நேரங்களில் மோசமடைந்துள்ளன.[186] சிங்கப்பூருக்கு நன்னீர் வழங்குதல்[187] மற்றும் மலேசிய வான்வெளியை சிங்கப்பூரின் ஆயுதமேந்திய படைகள் பயன்படுத்துதல்[186] ஆகியவை குறித்து மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கு மலேசியா மற்றும் இந்தோனேசியாவுடன் எல்லைப் பிரச்சினைகள் உள்ளன. கடல் பகுதியில் நிலத்தை சிங்கப்பூர் உருவாக்குவது குறித்து ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிங்கப்பூருக்கு கடல்சார் மணலை விற்பதற்கு இந்த இரு நாடுகளும் தடை விதித்துள்ளன.[188] பெத்ரா பிரான்கா சிறு தீவுகள் மீதான இறையாண்மை குறித்த பிரச்சினை போன்ற சில முந்தைய பிரச்சினைகளானவை அனைத்துலக நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளன.[189] மலாக்கா நீரிணையில் கடற்கொள்ளையானது இந்த மூன்று நாடுகளுக்குமே ஒரு கவலையை ஏற்படுத்தும் பிரச்சினையாக உள்ளது.[187] புரூணையுடன் சிங்கப்பூர் நெருக்கமான பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளது. இரு நாடுகளிலும் புரூணை டாலர் மற்றும் சிங்கப்பூர் வெள்ளி பணத் தாள்கள் மற்றும் நாணயங்களை பொதுவான பணமாக ஆக்கும் இரு நாடுகளுக்கு இடைப்பட்ட ஒரு பணப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலமாக ஓர் இணைக்கப்பட்ட பண மதிப்பை இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டுள்ளன.[190][191]

சீனாவுடனான முதல் தூதரகத் தொடர்பானது 1970-களில் ஏற்பட்டது. 1990-களில் முழுமையான தூதரக உறவு முறைகளானவை நிறுவப்பட்டன. மலேசியாவை முந்தியதற்குப் பிறகு 2013-ஆம் ஆண்டில் இருந்து சீனா சிங்கப்பூரின் மிகப் பெரிய வணிகக் கூட்டாளியாக உள்ளது.[192][193][194][195][196] சிங்கப்பூரும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஒரு நீண்ட கால நெருக்கமான உறவு முறைகளை, குறிப்பாக தற்காப்பு, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் கொண்டுள்ளன. பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராகச் சண்டையிடுதல் ஆகியவற்றுக்காக ஆசியான் நாடுகள் மற்றும் சீனாவுக்கும் கூட அதிகரித்து வந்த ஒத்துழைப்பை சிங்கப்பூர் கொடுத்து வந்துள்ளது. 2018-இல் சீனாவுடனான ஆசியான் நாடுகளின் முதல் இணைந்த கடற்போர் ஒத்திகையில் சிங்கப்பூர் பங்கெடுத்தது.[197] தீவிரவாதத்துக்கு எதிராகச் சண்டையிடும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணிக்கும் கூட இந்நாடு ஆதரவளித்துள்ளது. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் ஆயுதப் பரவல் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் இணைந்த இராணுவப் பயிற்சிகள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பு இந்நாடுகளுக்கு இடையில் உள்ளது.[185]

ஐக்கிய அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுடனும் சிங்கப்பூர் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளதால் இரு நாடுகளுடனும் உறவு முறைகளைக் கொண்ட வெகு சில நாடுகளில் ஒன்றாக உள்ளது.[198] சூன் 2018-இல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் ஆகியோருக்கு இடையிலான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டை சிங்கப்பூர் நடத்தியது. இரு நாடுகளின் பதவியில் இருக்கும் தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.[199][200] 2015-இல் தைவான் அதிபர் மா யிங் சியேவு மற்றும் சீன அதிபர் சீ சின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பையும் கூட இந்நாடு நடத்தியது. 1950-இல் சீன உள்நாட்டுப் போரின் முடிவிலிருந்து தைவான் நீரிணையின் இரு பக்கங்களிலும் உள்ள அரசியல் தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாக இருந்தது.[201][202][203]

இராணுவம்

Thumb
2007-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் ஆப்கானித்தானில் பன்னாட்டு கூட்டணியின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட்டனர்.

விவாதத்திற்குரியதாக இருந்தாலும் தென்கிழக்கு ஆசியாவில் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட இராணுவமான சிங்கப்பூர் இராணுவமானது[204] தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும், எண்ம மற்றும் உளவு சேவை (ஆங்கிலம்: Digital and Intelligence Service) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். நாட்டின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும்,[205] சிங்கப்பூர் பண்பாடாக மாறக் கூடியதாகவும், நாட்டின் தற்காப்பில் அனைத்து குடிமக்களை ஈடுபடுத்தக் கூடியதாகவும் இது கருதப்படுகிறது.[206] 2024-ஆம் ஆண்டு இராணுவத்திற்காக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7%-ஐ சிங்கப்பூர் அரசாங்கமானது செலவிட்டது. இப்பகுதியில் ஒரு நாட்டின் மிக அதிக அளவு செலவீனம் இதுவாகும்.[207]

இந்நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு பிரித்தானிய அதிகாரிகளால் தலைமை தாங்கப்பட்ட இரு காலாட் படை பிரிவுகளை மட்டுமே சிங்கப்பூர் கொண்டிருந்தது. புதிய நாட்டிற்கு செயலாற்றல் மிக்க பாதுகாப்பை வழங்க இது மிகவும் சிறியதாகக் கருதப்பட்டதால் இதன் இராணுவப் படைகளை உருவாக்குவது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.[208] மேலும், அக்டோபர் 1971-இல் பிரித்தானியா சிங்கப்பூரில் இருந்து அதன் இராணுவத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது. இராணுவ இருப்பை ஓர் அடையாளமாகக் காட்டுவதற்காக மட்டும் ஒரு சிறிய பிரித்தானிய, ஆத்திரேலிய மற்றும் நியூசிலாந்து படை மட்டுமே விட்டுச் செல்லப்பட்டது.[209] சிங்கப்பூர் இராணுவத்திற்கு தொடக்க ஆதரவில் பெருமளவானது இசுரேலிடமிருந்து கிடைத்தது.[208] சிங்கப்பூரின் அண்டை நாடுகளான முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேசியாவால் அங்கீகரிக்கப்படாத ஒரு நாடாக இசுரேல் திகழ்ந்தது.[210][211] சிங்கப்பூர் ஆயுதப் படைகளை அடிமட்டத்தில் இருந்து உருவாக்க சிங்கப்பூர் அரசாங்கத்தால் இசுரேலிய பாதுகாப்புப் படை தளபதிகளுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது. சிங்கப்பூர் இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இசுரேலிய ஆலோசகர்கள் கொண்டு வரப்பட்டனர். இசுரேலிய பாதுகாப்புப் படையின் முறைப்படி இராணுவ பாடங்கள் நடத்தப்பட்டன. இசுரேலிய மாதிரியை அடிப்படையாகக் கொண்ட கட்டாய இராணுவ சேர்ப்பு மற்றும் கையிருப்பு வீரர் சேவையின் ஓர் அமைப்பை சிங்கப்பூர் பின்பற்றத் தொடங்கியது.[208] இசுரேலுடன் இன்றும் ஒரு வலிமையான பாதுகாப்பு உறவு முறைகளை சிங்கப்பூர் பேணி வருகிறது. இசுரேலிய ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை மிகப் பெரிய அளவில் வாங்கும் நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது.[212] பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான மட்டடோர் இத்தகைய சமீபத்திய எடுத்துக்காட்டில் ஒன்றாகும்.[213]

மரபு வழி மற்றும் மரபுசாராப் போர் முறைகளில் காணப்படும் பரவலான விவகாரங்களுக்குப் பதில் அளிக்க கூடியதாக சிங்கபூர் இராணுவமானது மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்காப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமையானது இராணுவத்திற்காக ஆதாரங்களைத் திரட்டுவதற்குப் பொறுப்பேற்றுள்ளது.[214] புவியியல் ரீதியாக வரம்புக்குட்பட்டதாக சிங்கப்பூர் திகழ்வதன் காரணமாக எந்த ஒரு தாக்குதலையும் முழுவதுமாக முறியடிக்க இராணுவம் திட்டமிட வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில், பின்வாங்கி மீண்டும் ஒருங்கிணைய அவர்களால் இப்புவியியலில் இயலாது. இராணுவம் வடிவமைக்கப்பட்டதன் மீதும் கூட இந்நாட்டின் மிகச் சிறிய மக்கள் தொகையானது பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. பணியில் உள்ள ஒரு சிறிய படையினர் மற்றும் ஒரு பெரிய கையிருப்பு வீரர்களின் எண்ணிக்கையை இந்நாடு கொண்டுள்ளது.[206]

Thumb
சிங்கப்பூர் குடியரசின் விமானப் படையின் கருப்பு நைட் வீரர்கள் எனும் விமானங்கள் சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் சாகசம் செய்கின்றன.

உடல் தகுதி உள்ள அனைத்து ஆண்களும் 18 வயதில் கட்டாயமாக இராணுவ சேவையாற்ற வேண்டும் என்ற தேவை சிங்கப்பூரில் உள்ளது. குற்றப் பின்புலம் உள்ளவர்கள் அல்லது அவர்கள் இறந்தால் அது அவர்களது குடும்பத்தின் பொருளாதார நிலையை மோசமாக்கும் என்று நிரூபிக்கக் கூடியவர்கள் தவிர அனைவரும் இராணுவத்தில் கட்டாய சேவை ஆற்ற வேண்டியுள்ளது. கல்லூரி கல்விக்கு முந்தைய படிப்பை இன்னும் முடிக்காத ஆண்கள் பொது சேவை ஆணையத்தின் கல்வி உதவித் தொகையை பெறுகின்றனர். அவர்களோ அல்லது ஓர் உள்ளூர் மருத்துவப் படிப்பை படிப்பவர்களோ இதில் இருந்து விலக்குப் பெற முடியும்.[215][216] இராணுவ சேவையை ஆற்ற வேண்டிய தேவை இல்லாது இருந்தாலும் சிங்கப்பூரின் இராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. 1989-ஆம் ஆண்டிலிருந்து முன்னர் ஆண்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இராணுவ இடங்களை நிரப்ப பெண்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இராணுவத்தின் ஆயுதப் படையின் ஒரு குறிப்பிட்ட பிரிவில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்கள் அடிப்படை இராணுவப் பயிற்சியை குறைந்தது ஒன்பது வாரங்களுக்குப் பயில வேண்டியுள்ளது.[217]

சிங்கப்பூரின் முதன்மைத் தீவில் திறந்த வெளி நிலத்துக்கான பற்றாக்குறை இருப்பதன் காரணமாக நேரடி துப்பாக்கிச் சுடும் பயிற்சி மற்றும் நிலநீர் போர் முறை போன்ற செயல்பாடுகளைக் கொண்ட பயிற்சியானது சிறிய தீவுகளில் பொதுவாக நடத்தப்படுகிறது. இத்தீவுகள் பொதுவாக குடிமக்கள் அணுக தடை செய்யப்பட்டவையாக உள்ளன. எனினும், நாட்டில் நடத்த மிகவும் ஆபத்தானது என கருதப்படும் பெரிய அளவிலான பயிற்சிகளானவை புரூணை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் நடத்தப்படுகின்றன. பொதுவாக இராணுவப் பயிற்சிகளானவை அயல்நாட்டுப் படைகளுடன் ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை நடத்தப்படுகின்றன.[206] வான்வெளி மற்றும் நிலப் பற்றாக்குறை காரணமாக சிங்கப்பூர் குடியரசின் விமானப் படையானது ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரான்சு போன்ற நாடுகளில் அயல் நாட்டு இராணுவ தளங்களை ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பேணி வருகிறது. சிங்கப்பூர் விமானப் படையின் 130-ஆவது படைப் பிரிவானது மேற்கு ஆத்திரேலியாவின் "வேத்தியல் ஆத்திரேலிய பியர்சு விமானப்படை தளத்தை" அடிப்படையாகக் கொண்டுள்ளது.[218] இதன் 126-ஆவது படைப் பிரிவானது குயின்ஸ்லாந்தின் ஓக்கே இராணுவ விமான மையத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[219] 150-ஆவது படைப் பிரிவானது தெற்கு பிரான்சின் சசௌக்சு விமான தளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[220] அரிசோனாவிலுள்ள லியூக் விமானப் படைத்தளம், அரிசோனாவிலுள்ள மரானா, ஐடஹோவிலுள்ள மவுண்டைன் ஹோம் விமானப் படைத்தளம் மற்றும் குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப் படைத்தளம் ஆகியவை ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சிங்கப்பூர் குடியரசின் விமானப்படையின் அயல் நாட்டு படைப்பிரிவுகள் ஆகும்.[221][222][223]

சிங்கப்பூர் ஆயுதப் படையானது ஈராக்கு,[224] ஆப்கானித்தான்[225][226] போன்ற இந்நாட்டுக்கு வெளியே உள்ள பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளில் உதவுவதற்காக படைகளை அனுப்பியுள்ளது. இது இராணுவ மற்றும் குடிசார் ஆகிய இருவிதமான பங்கையும் ஆற்றியுள்ளது. இப்பகுதியில் கிழக்கு திமோரில்[227] அமைதி திரும்ப இவை உதவி புரிந்துள்ளன. 2004-ஆம் ஆண்டின் இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலையைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் அச்சேவில் நிவாரண உதவியை இவை வழங்கியுள்ளன.[228] 2009-ஆம் ஆண்டிலிருந்து பன்னாட்டு படை குழுவான "பொறுப்புப் படை 151-இன்" (ஆங்கிலம்: Task Force 151) ஒரு பகுதியாக கடல் கொள்ளையர்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுவதற்காக ஏடன் வளைகுடாவில் கப்பல்களை சிங்கப்பூர் குடியரசின் கடற்படையானது நிறுத்தியது.[229] சூறாவளி கத்ரீனா[230] மற்றும் சூறாவளி ஹையான்[231] ஆகியவற்றின் போது நிவாரண முயற்சிகளிலும் கூட இந்நாட்டின் ஆயுதப் படையானது உதவி புரிந்துள்ளது. சிங்கப்பூர் "ஐந்து நாட்டு தற்காப்பு முன்னேற்பாடுகள்" (ஆங்கிலம்: Five Power Defence Arrangements (FPDA)) என்ற அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. ஆத்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுடனான ஓர் இராணுவக் கூட்டணி இதுவாகும்.[206] 2024-ஆம் ஆண்டு உலக அமைதிச் சுட்டெண்ணின் படி உலகில் ஐந்தாவது மிக அமைதியான நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.[232]

மனித உரிமைகள்

சிங்கப்பூரில் மரண தண்டனையானது ஒரு சட்ட ரீதியாக முறைமை வாய்ந்த மற்றும் அமல்படுத்தப்படும் தண்டனையாக உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், சப்பான் மற்றும் தைவானுடன் சேர்த்து மரண தண்டனையை இன்னும் கொண்டிருக்கும் நான்கு வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இந்நாடு திகழ்கிறது. குறிப்பாக போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக மரண தண்டனை பயன்படுத்தப்படுகிறது என்பது பன்னாட்டு மன்னிப்பு அவை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அரசு சாரா அமைப்புகளுடன் பிரச்சினைக்கான ஓர் ஆதாரமாக உள்ளது.[233][234] இது ஒரு சரியான கொள்கை என்பதில் "எந்த ஒரு ஐயமும் இல்லை" என சிங்கப்பூர் அரசாங்கம் இதற்குப் பதில் அளித்தது. கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான "தெளிவான ஆதாரம்" இதில் உள்ளதாகக் குறிப்பிட்டது. "உயிர்களை காப்பாற்றும்", குறிப்பாக, குடிமக்களைக் காப்பாற்றும் பரவலான பார்வையின் வழியாகவே இச்சட்டமானது பார்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டது.[235] 2004-இல் "குற்றம் நிரூபிக்கப்படாதவரை ஒருவர் அப்பாவியாகக் கருதப்பட வேண்டும் என்ற உரிமையுடன்" மரண தண்டனைக்கான சிங்கப்பூர் சட்ட அமைப்பின் சில சட்டப் பிரிவுகளானவை முரண்படுவதாக பன்னாட்டு மன்னிப்பு அவையானது குறிப்பிட்டது.[236] அரசாங்கம் இதை மறுத்தது. "பன்னாட்டு அளவில் மரண தண்டனையை நீக்குவது குறித்த அரசாங்கத்தின் நிலையானது எதிர்க்கப்படாமல் இல்லை" எனவும், பன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையானது "கடுமையான, தவறான உண்மைகள் மற்றும் தவறான பிரதிநிதித்துவங்களைக் கொண்டுள்ளதாக" குறிப்பிட்டது.[237]

Remove ads

பொருளாதாரம்

Thumb
சிங்கப்பூரின் நகர நடுவத்தின் வானுயர்க் கட்டடங்கள்

சிங்கப்பூர் ஒரு நன்றாக வளர்ச்சியடைந்த சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. விரிவடைந்த வணிக மையத்தின் வணிகத்தை வரலாற்று ரீதியாக இது அடிப்படையாகக் கொண்டதாகும். ஆங்காங், தென் கொரியா, மற்றும் தைவானுடன் சேர்த்து நான்கு ஆசியப் புலிகளில் ஒன்றாக சிங்கப்பூர் குறிப்பிடப்படுகிறது. இதன் சக நாடுகளை சராசரி தனிநபர் வருமானத்தில் சிங்கப்பூர் முந்தியுள்ளது. 1965 மற்றும் 1995-க்கு இடையில் வளர்ச்சி வீதங்களானவை ஆண்டுக்கு சராசரியாக சுமார் 6%-ஆக இருந்தன. மக்களின் வாழ்க்கை தரத்தை இவ்வளர்ச்சியானது மாற்றியமைத்தது.[238]

சிங்கப்பூரின் பொருளாதாரமானது கட்டற்ற,[239] புதுமைகளைப் புகுத்தும்,[240] இயக்கம் உடைய[241] மற்றும் வணிகத்துக்கு-ஆதரவான[242] பொருளாதாரமாகக் கருதப்படுகிறது. "பெரும் மூன்று தர நிலைகளை வழங்கும் முகமைகளிடம்" இருந்து மூன்று ஏ (AAA) தரத்தைப் பெற்ற சில நாடுகளில் ஒன்றாக இது பல ஆண்டுகளுக்கு திகழ்ந்தது.[243] இந்த தரநிலையை அடைந்த ஒரே ஒரு ஆசிய நாடாகவும் திகழ்ந்தது.[244] இதன் அமைவிடம், திறனுடைய பணியாளர்கள், குறைவான வரி வீதங்கள், முன்னேற்றமடைந்த உட்கட்டமைப்பு மற்றும் இலஞ்ச, ஊழலுக்கு எதிரான சகிப்புத் தன்மையற்ற நிலை ஆகியவற்றின் விளைவாக ஒரு பெருமளவிலான அயல்நாட்டு முதலீட்டை சிங்கப்பூர் ஈர்க்கிறது.[245] 2023-இல் மேலாண்மை மேம்பாட்டுக்கான பன்னாட்டு அமைப்பால் 64 நாடுகளில் நடத்தப்பட்ட உலக போட்டித் திறன் தரநிலையின் படி உலகின் 4-ஆவது மிகவும் போட்டித் திறனுடைய பொருளாதாரமாக சிங்கப்பூர் தர நிலைப்படுத்தப்பட்டது.[246] அந்நாடுகளிலேயே மிக உயர்ந்த சராசரி வருமானத்தையும் இது கொண்டிருந்தது.[247][248][249] சிங்கப்பூரின் பணியாட்களில் தோராயமாக 44% பேர் அயல் நாட்டவர்கள் ஆவர்.[250] கட்டற்ற சந்தையைக் கொண்டிருந்தாலும் பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை சிங்கப்பூரின் அரசாங்கத்தின் செயல்பாடுகளானவை ஏற்படுத்துகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22%-க்கு இவை பங்களிக்கின்றன.[251] கலந்தாய்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பிரபலமான இடமாக இந்நகரமானது திகழ்கிறது.[252]

Thumb
2015-ஆம் ஆண்டு இந்நாட்டின் பொன் விழா ஆண்டையொட்டி இந்நாட்டின் முதன்மையான விமான நிறுவனமான சிங்கப்பூர் வான்வழியானது அதன் ஏர்பஸ் ஏ380 விமானத்தில் சிங்கப்பூரின் கொடி பொறிக்கப்பட்டதுடன் கொண்டாடியது.

சிங்கப்பூரின் பணமானது சிங்கப்பூர் வெள்ளி ஆகும். சிங்கப்பூர் நாணய அமைப்பால் இது வெளியிடப்படுகிறது.[253] 1967-ஆம் ஆண்டிலிருந்து புரூணை டாலருடன் அதே மதிப்பில் பரிமாற்றம் செய்யப்படக் கூடியதாக இது திகழ்கிறது.[254] சிங்கப்பூர் நாணய அமைப்பானது ஒரு வெளியிடப்படாத வணிக அளவுகளுக்குள் சிங்கப்பூர் வெள்ளியின் நாணய மாற்று வீதத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அனுமதிப்பதன் மூலம் அதன் பணவியல் கொள்கையைப் பேணி வருகிறது. இது பெரும்பாலான நடுவண் வங்கிகளிலிருந்து வேறுபட்டதாகும். பிற நடுவண் வங்கிகள் பணவியல் கொள்கையைப் பேணுவதற்காக வட்டி வீதங்களைப் பயன்படுத்துகின்றன.[255] உலகின் 11-ஆவது மிகப் பெரிய அந்நியச் செலாவணிக் கையிருப்பை சிங்கப்பூர் கொண்டுள்ளது.[256] தனி நபர் வீதத்திற்கு மிக உயர்ந்த நிகர பன்னாட்டு முதலீட்டு நிலைகளில் ஒன்றை சிங்கப்பூர் கொண்டுள்ளது.[257][258]

சிங்கப்பூர் செல்வந்தர்களுக்கான ஒரு வரி காப்பிடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.[259] இதற்குக் காரணம் தனிநபர் வருமானம் மீதான இந்நாட்டின் குறைவான வரி வீதங்கள் மற்றும் அயல் நாட்டை அடிப்படையாகக் கொண்ட வருமானம் மற்றும் மூலதன வருவாய்கள் மீதான வரி விலக்குகள் ஆகியவை ஆகும். ஆத்திரேலிய மில்லியனரான சில்லரை வணிகர் பிரெட் பிளன்டி மற்றும் பில்லியனரான முகநூலை இணைந்து தோற்றுவித்த எதுவார்தோ சவேரின் ஆகியோர் சிங்கப்பூரில் குடியமர்ந்த செல்வந்தர்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் ஆவர்.[260] 2009-ஆம் ஆண்டு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் வரி காப்பிடங்களுக்கான பட்டியலில் இருந்து சிங்கப்பூர் நீக்கப்பட்டது.[261] டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க் எனும் அமைப்பின் 2015-ஆம் ஆண்டு உலகின் அயல்நாட்டு நிதி சேவை வழங்குபவர்களின் நிதி இரகசிய சுட்டெண்ணில் நான்காவது இடத்தை இந்நாடு பெற்றது. உலகில் அயல்நாட்டில் முதலீடு செய்யப்படும் மூலதனத்தில் எட்டில் ஒரு பங்கை இந்நாடு கொண்டுள்ளது. அதே நேரத்தில், "ஏராளமான வரி தவிர்ப்பு மற்றும் ஏய்ப்பு வாய்ப்புகளை வழங்குகிறது".[262] ஆகத்து 2016-இல் த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையானது மூலதனத்தை வரி விதிக்கும் தளத்திற்குள் கொண்டு வருவதற்காக இந்தோனேசியா சிங்கப்பூருக்கு அருகில் இரு தீவுகளில் வரி காப்பிடங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டது.[263] அக்டோபர் 2016-இல் சிங்கப்பூரின் நாணயவியல் அதிகார அமைப்பானது யூபிஎஸ் ஏஜி மற்றும் டி. பி. எஸ். வங்கி ஆகிய இரு வங்கிகளையும் கடிந்துரைத்து அபராதம் விதித்தது. பால்கன் தனியார் வங்கியின் வங்கி உரிமத்தை மலேசிய அரசின் மூலதன நிதி மோசடியில் ஆதாரம் இல்லாவிட்டாலும் குற்றம் சாட்டப்பட்ட அவர்களின் பங்கிற்காக திரும்பப் பெற்றுக் கொண்டது.[264][265]

2016-ஆம் ஆண்டில் பொருளாதார உளவியல் பிரிவு எனும் அமைப்பால் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக உலகின் வாழ்வதற்கு மிகவும் செலவீனம் பிடிக்கும் நகரமாக சிங்கப்பூர் குறிப்பிடப்பட்டது.[266][267] 2018-ஆம் ஆண்டிலும் இந்நிலை இருந்தது.[268] சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தின் வழியாக வீடற்றோர் மற்றும் தேவைப்படுவோருக்கு அரசாங்கமானது ஏராளமான உதவித் திட்டங்களை வழங்குகிறது. எனவே, கடுமையான ஏழ்மை என்பது இங்கு அரிதாகவே உள்ளது. தேவைப்படும் வீடுகளுக்கு நிதியுதவி அளித்தல், அரசாங்க மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை வழங்குதல் மற்றும் குழந்தைகளின் பாடப் பயிற்சிக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்டவை இத்தகைய சில திட்டங்கள் ஆகும்.[269][270][271] உடற்பயிற்சி செய்ய குடி மக்களை ஊக்குவிப்பதற்காக உடற்பயிற்சிக்கூட கட்டணங்களுக்கு இழப்பீடு வழங்குதல்,[272] ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு குழந்தைக்கு உதவித் தொகையாக 1,66,000 சிங்கப்பூர் வெள்ளிகள் வரையில் வழங்குதல்,[273] கடுமையாக மானியம் பெறும் சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி, ஏழை மாணவர்களுக்கு குறைந்த விலை மடிக் கணினிகளை வழங்குதல்,[274] பொதுப் போக்குவரத்து[275] மற்றும் பிற பொதுப் பயன்பாட்டு கட்டணச் சீட்டுகளுக்கு தள்ளுபடிகள் ஆகியவை பிற நலத்திட்டங்கள் ஆகும்.[276][277] 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி உலகில் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் அடிப்படையில் ஒன்பதாவது இடத்தை சிங்கப்பூர் பெறுகிறது. இந்நாட்டின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் மதிப்பானது 0.935 ஆகும்.[278]

Remove ads

புவியியல்

Thumb
சிங்கப்பூர், அதைச் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நீர் வழிகளின் ஒரு மேலோட்டமான வரைபடம்

உஜோங் எனும் முதன்மையான தீவு உள்ளிட்ட 63 தீவுகளை சிங்கப்பூர் கொண்டுள்ளது.[279] மலேசியாவின் ஜொகூருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட இரு போக்குவரத்து தொடர்புகள் உள்ளன. அவை வடக்கிலுள்ள மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் மற்றும் மேற்கிலுள்ள துவாசு இரண்டாவது பாலம் ஆகியவையாகும். சிங்கப்பூரின் சிறிய தீவுகளில் மிகப் பெரியவையாக சுரோங், தெக்கோங் , உபின் மற்றும் செந்தோசா ஆகிய தீவுகள் உள்ளன. சிங்கப்பூரின் மிக உயர்ந்த இயற்கையான புள்ளியானது புக்கித் தீமா ஆகும்.[280] இது 163.63 மீட்டர் உயரத்தில் உள்ளது. பிரித்தானிய ஆட்சியின் கீழ் கிறித்துமசு தீவு மற்றும் கொக்கோசு தீவுகள் ஆகியவை சிங்கப்பூரின் பகுதியாக இருந்தன. 1957-ஆம் ஆண்டு இந்த இரு தீவுகளும் ஆத்திரேலியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.[281][282][283] பெத்ரா பிராங்கா தீவானது இந்நாட்டின் கிழக்குக் கோடி புள்ளியாக உள்ளது.[284]

கடலில் நிலத்தை உருவாக்கும் திட்டங்களானவை சிங்கப்பூரின் நிலப் பரப்பளவை 1960-களில் 580 சதுர கிலோமீட்டர் என்பதிலிருந்து 2015 வாக்கில் 710 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளன. இது சுமார் 22% அதிகரிப்பாகும்.[285] மேற்கொண்ட 56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மீண்டும் கடலில் உருவாக்க இந்நாடு திட்டமிட்டுள்ளது.[286] சிறிய தீவுகளை இணைக்கப்பட்டு பெரிய தீவை உருவாக்குவதற்காக கடலில் மணலானது கொட்டப்படுகிறது. இவை அதிக செயல்பாடுடைய மற்றும் குடியிருக்கத் தகுந்த தீவுகளாக மாறுகின்றன. சுரோங் தீவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.[287] நிலத்தை கடலில் உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் மணலின் வகையானது ஆறுகள் மற்றும் கடற்கரைகளில் காணப்படுபவையாக உள்ளன. பாலைவனங்களில் காணப்படும் மணல்கள் இங்கு பயன்படுத்தப்படுவதில்லை. உலகம் முழுவதும் இத்தகைய மணலுக்கு ஏராளமான தேவை உள்ளது. 2010-இல் இத்தகைய திட்டங்களுக்காக கிட்டத்தட்ட 1.5 கோடி டன்கள் மணலை சிங்கப்பூர் இறக்குமதி செய்தது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் சிங்கப்பூருக்கு மணல் ஏற்றுமதிக்கு வரம்புகள் வைத்தல் அல்லது முழுவதுமாக தடை செய்தல் போன்ற நிலைக்கு செயல்படும் அளவுக்கு இந்த மணல் தேவை அதிகமாக காணப்படுகிறது. இதன் விளைவாக 2016-இல் கடலில் நிலத்தை உருவாக்குவதற்கு சுவர் அமைப்புகளைப் பயன்படுத்தும் முறைக்கு சிங்கப்பூர் மாறியது. இம்முறையில் ஒரு பகுதியைச் சுற்றிலும் சுவர் உருவாக்கப்பட்டு அப்பகுதிக்குள் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.[288]

இயற்கை

Thumb
சிங்கப்பூர் தாவரவியல் தோட்டங்களானவை ஓர் உலகப் பாரம்பரியக் களமாகும். உலகப் பாரம்பரியக் களமாக இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட உலகிலேயே மூன்று தோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். வெப்ப மண்டலப் பகுதியில் காணப்படும் இவ்வாறான ஒரே ஒரு தோட்டமும் இதுவாகும்.

சிங்கப்பூர் நகரமயமாக்கப்பட்டதன் காரணமாக இதன் வரலாற்று ரீதியான காடுகளில் 95%-ஐ இழந்து விட்டது.[289] தற்போது சிங்கப்பூரில் இயற்கையாகக் காணப்படும் விலங்குகள் மற்றும் தாவரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை புக்கித் தீமா இயற்கைக் காப்பிடம் மற்றும் சுங்கேய் புலோ சதுப்புநிலக் காப்பிடம் போன்ற இயற்கைக் காப்பிடங்களில் காணப்படுகின்றன. இவை சிங்கப்பூரின் நிலப்பரப்பில் வெறும் 0.25%-ஐ மட்டுமே உள்ளடக்கியுள்ளன.[289] 1967-இல் இயற்கை நிலப்பரப்பு இவ்வாறு குறைவதைத் தடுப்பதற்காக சிங்கப்பூரை ஒரு "தோட்ட நகரமாக" மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.[290] இதன் குறிக்கோளானது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும்.[291] அன்றிலிருந்து சிங்கப்பூரின் நிலப் பரப்பில் கிட்டத்தட்ட 10%-ஆனது பூங்காக்கள் மற்றும் இயற்கைக் காப்பிடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[292] இந்நாட்டின் எஞ்சிய காட்டுயிர்களைக் காப்பதற்காக அரசாங்கம் திட்டங்களை உருவாக்கியுள்ளது.[293] சிங்கப்பூரில் நன்றாக அறியப்பட்ட தோட்டங்களில் சிங்கப்பூர் தாவரவியல் தோட்டமும் ஒன்றாகும். வெப்ப மண்டலப் பகுதியில் காணப்படும் 165 ஆண்டுகள் பழமையான ஒரு தோட்டம் இதுவாகும். சிங்கப்பூரின் முதல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமும் இதுவாகும்.[294]

காலநிலை

Thumb
விரிகுடா பகுதியில் தோட்டங்கள்

சிங்கப்பூர் ஒரு வெப்ப மண்டல மழைக்காட்டு காலநிலையைக் (கோப்பென்: Af) கொண்டுள்ளது. இதற்கு தனித்துவமான பருவங்கள் கிடையாது. சீரான வெப்பநிலை மற்றும் அழுத்தம், அதிக ஈரப்பதம் மற்றும் ஏராளமான மழைப் பொழிவு இங்கு காணப்படுகிறது.[295][296] வெப்பநிலைகளானவை பொதுவாக 23 முதல் 32 °C (73 முதல் 90 °F) வரை வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆண்டு முழுவதும் வெப்பநிலை பெருமளவுக்கு வேறுபடாமல் இருக்கும் அதே நேரத்தில் நவம்பர் முதல் பெப்ரவரி வரையில் பருவப் பெயர்ச்சிக் காற்றால் உருவாகும் ஓர் ஈரப்பதமான மழைக்காலம் இந்நாட்டில் காணப்படுகிறது.[297]

சூலை முதல் அக்டோபர் வரை அண்டை நாடான இந்தோனேசியாவில் காட்டுத்தீக்களால் உருவாகும் தூசுப் பனிமூட்டம் காணப்படுகிறது. இவை பொதுவாக சுமாத்திரா தீவிலிருந்து உருவாகின்றன.[298] சிங்கப்பூர் "கிரீன்விச் இடைநிலை நேரம்+8ஐப்" பின்பற்றுகிறது. இந்நாட்டின் புவியியல் அமைவிடத்திற்குப் பொதுவான நேரத்தை விட இது ஒரு மணி நேரம் அதிகமாகும்.[299] பெப்ரவரியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தாமதமாக சூரியன் உதிப்பதற்கும், மறைவதற்கும் இது காரணமாகிறது. அந்நேரத்தில் சூரியன் காலை 7:15 க்கு உதித்து, மாலை 7:20 க்கு மறைகிறது. சூலை மாதத்தின் போது சூரியனானது மாலை 7:15 க்கு மறைகிறது. சீக்கிரமாக சூரியன் உதிப்பதும், மறைவதும் பிந்தைய அக்டோபர் மற்றும் தொடக்க நவம்பரில் நடைபெறுகிறது. அப்போது சூரியன் காலை 6:46 க்கு உதித்து மாலை 6:50 க்கு மறைகிறது.[300]

தன் தாழ்வான கடற்கரைக்கு காலநிலை மாற்றம் மற்றும் உயர்ந்து வரும் கடல்நீர் மட்டங்களானவை எதிர் வரும் தசாப்தங்களில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் என சிங்கப்பூர் அறிந்துள்ளது. இப்பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக அடுத்த நூற்றாண்டு முழுவதும் ஐஅ$100 பில்லியன் (7,15,160 கோடி)களைs செலவழிக்க வேண்டிய தேவையுள்ளது என இந்நாடு மதிப்பிட்டுள்ளது. தன் 2020 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையில் அரசாங்கமானது ஒரு கடற்கரை மற்றும் வெள்ளப் பாதுகாப்பு நிதிக்காக தொடக்கமாக ஐஅ$5 பில்லியன் (35,758 கோடி)களை ஒதுக்கியுள்ளது.[301][302] ஆண்டுக்கு 25,000 டன்களுக்கு மேலான கரியமில வாயுவை உற்பத்தி செய்யும் இதன் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு ஒரு கரிம வரியை விதிக்கும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள முதல் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்நாடு டன்னுக்கு ஐஅ$5 (357.6) வரி விதிக்கிறது.[303]

புதை படிவ எரிபொருள் மீதான நாட்டின் சார்பைக் குறைப்பதற்காக கட்டடங்களின் மேற்பகுதிகள் மற்றும் சமமான தளங்கள் மீது சூரிய மின்சக்தி கண்ணாடி துண்டுகளை பதிப்பதை இந்நாடு முடுக்கிவிட்டுள்ளது. துவாசுவில் தெங்கே நீர்த்தேக்கத்தில் உலகின் மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி பண்ணைகளில் ஒன்றைக் கட்டமைப்பது போன்ற பிற முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.[304]

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், சிங்கப்பூர் (1991–2020 இயல்பானவை, மட்டுமீறியவை 1929–1941 மற்றும் 1948–தற்போது), மாதம் ...

குடிநீர் விநியோகம்

சிங்கப்பூர் குடிநீரை ஒரு தேசியப் பாதுகாப்பு விவகாரமாகக் கருதுகிறது. குடிநீரைச் சேமிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க அரசாங்கம் விரும்புகிறது.[308] 2040 ஆம் ஆண்டு வாக்கில் இந்நாடு குறிப்பிடத்தக்க அளவுக்கு குடிநீர் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், நீரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அனைவரும் பெறுகின்றனர் மற்றும் இந்நாட்டில் நீரானது உயர் தரம் உடையதாக உள்ளது.[309][310] இப்பிரச்சினையைச் சமாளிப்பதற்காக பொதுப் பயன்பாட்டு வாரியம் எனும் அரசு அமைப்பானது "நான்கு தேசிய வடிமுனைகள்" உத்தியை அமல்படுத்தியுள்ளது. அவை அண்டை நாடான மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீர், நகர்ப்புற மழைநீர் சேகரிப்புகள், சுத்திகரிக்கப்பட்ட நீர் (என். இ. வாட்டர்) மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆகியவை ஆகும்.[311] சிங்கப்பூரின் அணுகுமுறையானது உட்கட்டமைப்பை மட்டும் சார்ந்திருக்கவில்லை. சரியான சட்டங்கள் மற்றும் அமல்படுத்தல், நீருக்கு விலை நிர்ணயித்தல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும், ஆய்வு மற்றும் விருத்தி ஆகியவை மீதும் கூட கவனம் செலுத்துகிறது.[312] மலேசியாவுடனான இதன் 1961 ஆம் ஆண்டு நீண்டகால குடிநீர் விநியோக ஒப்பந்தமானது 2061 ஆம் ஆண்டு காலாவதியாகும் நேரத்தில் நீரில் தன்னிறைவடைந்ததாக சிங்கப்பூர் இருக்கும் என இந்நாடு அறிவித்துள்ளது. எனினும், அலுவல்பூர்வ முன்னறிவிப்புகளின் படி, 2010 மற்றும் 2060 க்கு இடையில் சிங்கப்பூரில் குடிநீர் தேவையானது ஒரு நாளைக்கு 1.4 முதல் 2.8 பில்லியன் லிட்டர்கள் (1.4 முதல் 2.8 மில்லியன் கன சதுர மீட்டர்கள்; 370 முதல் 740 மில்லியன் அமெரிக்க கலன்கள்) ஆக இரு மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பானது முதன்மையாக வீடு சாரா குடிநீர் பயன்பாட்டில் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பயன்பாடானது 2010 இல் மொத்த குடிநீர் தேவையில் 55% ஆக இருந்தது. 2060 இல் மொத்த குடிநீர் தேவையில் 70% ஆக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நேரம் வாக்கில் சுத்திகரிக்கப்பட்ட நீர் 50%, கடல் நீர் சுத்திகரிப்பு 30%, மழைநீர் சேகரிப்பு வெறும் 20% என பெறப்படும் பங்களிப்பால் குடிநீர் தேவையானது பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[313][314]

இதன் சுத்திகரிக்கும் அமைப்பை சிங்கப்பூர் விரிவாக்கி வருகிறது. நீர் சுத்திகரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாடுகளில் ஐஅ$7.4 பில்லியன் (52,921.8 கோடி)யைச் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளது.[315] முழுமையாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் மேம்படுத்தப்பட்ட பயன்படுத்தப்பட்ட-நீரைச் சுத்திகரிக்கும் செயல்பாடுகளை சோதனை செய்வதற்காக உலு பந்தன் நீர் சுத்திகரிப்பு நிலையமானது இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பாரீசில் 2018 ஆம் ஆண்டின் உலகளாவிய நீர்சார் விருதுகளில் அந்த ஆண்டுக்கான நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீர் திட்டத்துக்கான விருதை இந்நிலையம் வென்றது.[316] இது 2017 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.[317]

கணினி வழிக்காட்சி சிங்கப்பூர்

கணினி வழிக்காட்சி சிங்கப்பூர் என்பது சிங்கப்பூரின் ஒரு முப்பரிமாண நேர் பகர்ப்பு ஆகும். இது சிங்கப்பூர் அரசு, சிங்கப்பூர் நில அதிகார அமைப்பு, மற்றும் தொழில்துறை மாற்றங்களுக்காக திட்டமிடுவதற்காக பல மேற்கொண்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இது பேரிடர் மேலாண்மைக்காகவும் கூட பயன்படுத்தப்படுகிறது.[318]

Remove ads

போக்குவரத்து

தரை

Thumb
யூனுஸ் தொடருந்து நிலையத்தை நெருங்கும் ஒரு துரிதக் கடவு தொடருந்து
Thumb
சிங்கப்பூரில் ஒரு பேருந்து

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து இணைய அமைப்பானது தொடருந்துகள் (சிங்கப்பூர் துரிதக் கடவு தொடருந்து மற்றும் இலகு ரக கடவு தொடருந்து அமைப்புகள் உள்ளிட்ட), பேருந்துகள் மற்றும் வாடகை சிற்றுந்துகளால் வடிவம் பெற்றுள்ளது. தற்போது ஆறு துரிதக் கடவு தொடருந்து வழித்தடங்களும் (வடக்கு தெற்கு வழித்தடம், கிழக்கு மேற்கு வழித்தடம், வடக்கு கிழக்கு வழித்தடம், வட்டப்பாதை வழித்தடம், டவ்ன்டவுன் துரிதக் கடவு தொடருந்து வழித்தடம் மற்றும் தாம்சன்-கிழக்குக் கடற்கரை துரிதக் கடவு தொடருந்து வழித்தடம்), புக்கிட் பஞ்சாங் மற்றும் சோவா சு காங் (புக்கிட் பஞ்சாங் இலகு ரக கடவு தொடருந்து வழித்தடம்), செங்காங் (செங்காங் இலகு ரக கடவு தொடருந்து வழித்தடம்) மற்றும் பொங்கோல் (புங்கோல் இலகு ரக கடவு தொடருந்து வழித்தடம்),[319] ஆகிய புறநகர் பகுதிகளுக்கு சேவையாற்றுகிற மூன்று இலகு ரக கடவு தொடருந்து வழித்தடங்களும் இந்நாடில் உள்ளன. இவை தோராயமாக 241 கிலோமீட்டர் தூரத்திற்குச் சேவையாற்றுகிறது. 300 க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்கள் இந்நாட்டில் செயல்பாட்டில் உள்ளன.[320] பல பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது வாடகை சிற்றுந்து கட்டணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதால் ஒரு பிரபலமான போக்குவரத்து வடிவமாக வாடகை சிற்றுந்துகள் உள்ளன. அதே நேரத்தில், சிங்கப்பூரில் சிற்றுந்துகளை சொந்தமாக வைத்திருப்பது என்பது உலகத்திலேயே மிகவும் செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது.[321]

சிங்கப்பூர் 3,356 கிலோமீட்டர்கள் நீள ஒரு சாலை அமைப்பைக் கொண்டுள்ளது. 161 கிலோமீட்டர்கள் நீள விரைவுச் சாலைகளும் இதில் அடங்கும்.[322][323] 1975 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சிங்கப்பூர் பகுதி உரிமத் திட்டமானது உலகின் முதல் போக்குவரத்து நெரிசல் விலை நிர்ணயத் திட்டமாக உருவானது. கடுமையான சிற்றுந்து உரிமை வைத்திருக்கும் பங்கீட்டு அளவுகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் மேம்பாடுகள் போன்ற பிற குறை தீர்ப்பு நடவடிக்கைகளையும் இது உள்ளடக்கியுள்ளது.[324][325] 1998 ஆம் ஆண்டு இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு மின்னணு சாலைக் கட்டணம் என பெயர் மாற்றப்பட்டது. இந்த அமைப்பானது மின்னணு சுங்கச்சாவடி வரி வசூலிப்பு, மின்னணு முறையில் சிற்றுந்தை அடையாளம் காணுதல் மற்றும் காணொளி அணுக்கக் கண்காணிப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிமுகம் செய்தது.[326] 2002 ஆம் ஆண்டு வாக்கில் சாலைகளில் உள்ள சாலை அறிவிப்புகளைத் தாங்கும் பாலம் வடிவிலான உயரமான உலோகச் சட்டங்களுக்குப் பதிலாக செயற்கைக் கோளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அமைப்பானது கொண்டுவரப்பட உள்ளது. ஆனால், அரைக் கடத்திகளின் விநியோகத்தில் உலகளாவிய பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக 2026 ஆம் ஆண்டு வரை இத்திட்டம் தாமதமடைந்துள்ளது.[327] சிங்கப்பூரானது ஒரு சிறிய தீவாக அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளதால் காற்று மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக சாலைகளில் ஓடும் தனியார் சிற்றுந்துகளின் எண்ணிக்கையானது முன்னரே அனுமதிக்கப்பட்ட சிற்றுந்து எண்ணிக்கை பங்கீட்டு அளவின் மூலம் வரம்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் வெளிச் சந்தை மதிப்பில் 100%, 140%, 180% அல்லது 220% போன்ற மேற்கொண்ட பதிவுக் கட்டண சுங்க வரிகளை சிற்றுந்து வாங்குபவர்கள் கட்டாயம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு சிங்கப்பூர் உரிமைச் சான்றிதழுக்கும் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் (பதிவிடப்படும் அல்லது பதிவு நீக்கப்படும் சிற்றுந்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு மாதத்திற்கு இரு முறை என விநியோகத்தில் இந்தச் சான்றுகள் வேறுபடுகின்றன). இச்சான்றிதழானது சிற்றுந்தானது சாலையில் அதிகபட்ச காலமாக 10 ஆண்டுகளுக்கு இயக்கப்படுவதற்கான அனுமதியை அளிக்கிறது. பிற ஆங்கிலம் பேசும் நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூரில் சிற்றுந்து விலைகளானவை பொதுவாகவே குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக உள்ளன.[328] பெரும்பாலான பொதுநலவாய நாடுகளில் உள்ளதைப் போலவே சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் தெருக்களில் நடக்கும் மக்கள் இடது புறமாகவே பயணிக்கின்றனர் (இடது புற போக்குவரத்து).[329]

மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் தான் உலகிலேயே மிக பரபரப்பான பன்னாட்டு நில எல்லைக் கடப்பு ஆகும் (இது மலேசியாவின் ஜொகூர் பாரு நகரத்துடன் சிங்கப்பூரை இணைக்கிறது). உட்லாண்ட்ஸ் சோதனைச்சாவடி மற்றும் சுல்தான் இசுகந்தர் கட்டிடம் ஆகிய இரு எல்லை சோதனைச் சாவடிகளையுமே தினமும் தோராயமாக 3.50 இலட்சம் பயணிகள் கடக்கின்றனர் (ஆண்டுக்கு ஒட்டு மொத்தமாக 12.8 கோடி பயணிகள் கடக்கின்றனர்).[330] தரைப் போக்குவரத்து அமைப்பானது சிங்கப்பூரில் தரைப் போக்குவரத்து தொடர்பான உட்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் அனைத்திற்கும் பொறுப்பானதாக உள்ளது.

வான்

Thumb
சிவேல் சங்கி விமான நிலையத்தில் மழைக்கான நீர்ச் சுழி அமைப்பு

ஆசியாவில் ஒரு முதன்மையான பன்னாட்டு போக்குவரத்து மையம் சிங்கப்பூர் ஆகும். மிக பரபரப்பான கடல் மற்றும் வான் வணிக வழிகளில் சிலவற்றுக்கு இது சேவையாற்றுகிறது. சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையமானது தென்கிழக்கு ஆசியாவுக்கான ஒரு விமான போக்குவரத்து மையம் ஆகும். சிட்னி மற்றும் லண்டன் ஆகிய நகரங்களுக்கு இடையிலான குவாண்டாசுவின் கங்காரு வழித் தடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுத்தம் இந்நகரம் ஆகும்.[331] சாங்கி விமான நிலையம் மற்றும் சேலேதர் விமான நிலையம் என சிங்கப்பூரில் இரு குடிமக்கள் பயன்பாட்டுக்கான விமான நிலையங்கள் உள்ளன.[332][333] சிங்கப்பூரை உலகளவில் சுமார் 70 நாடுகள் மற்றும் நிலப்பரப்புகளில் உள்ள சுமார் 300 நகரங்களுடன் இணைக்கும் 100 க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களின் ஓர் இணைய அமைப்பை சாங்கி விமான நிலையமானது கொண்டுள்ளது.[334] பன்னாட்டு பயண பருவ இதழ்களால் மிகச் சிறந்த பன்னாட்டு விமான நிலையங்களில் ஒன்றாக இந்த விமான நிலையம் குறிப்பிடப்படுகிறது. விமான நிறுவன மற்றும் விமான நிலையங்களைத் தரமிடும் இசுகைதிராக்சு என்ற இணையதளத்தால் 2006 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக இந்த விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[335] 2023 இல் உலகின் பத்து மிக பரபரப்பான பன்னாட்டு வான் வழித் தடங்களில் மூன்றை இந்நாடு கொண்டிருந்தது. அவை மிக பரபரப்பான கோலாலம்பூர்-சிங்கப்பூர் வழித்தடம், ஏழாவது மிக பரபரப்பான ஜகார்த்தா-சிங்கப்பூர் வழித்தடம் மற்றும் ஒன்பதாவது மிக பரபரப்பான பேங்காக் சுவர்ணபூமி-சிங்கப்பூர் வழித்தடம் ஆகியவை ஆகும்.[336]

சிங்கப்பூர் வான்வழி என்பது சிங்கப்பூர் அரசின் முதன்மையான விமான நிறுவனம் ஆகும்.[337] இசுகைதிராக்சு இணைய தளத்தால் ஒரு 5-நட்சத்திர விமான நிறுவனமாக இது குறிப்பிடப்படுகிறது.[338] பல தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு உலகின் முதல் 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது.[339] 2023 இல் இசுகைதிராக்சு இணைய தளம் உலகின் மிகச் சிறந்த விமான நிறுவனம் என்ற பட்டத்தை இதற்குக் கொடுத்தது. இந்த விமான நிறுவனம் 12 முறை இந்த பட்டத்தை வென்றுள்ளது. இதன் மையமான சாங்கி சர்வதேச விமான நிலையமும் கூட 2013 முதல் 2020 வரை உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக தரப்படுத்தப்பட்டது. இடையில் தோகாவின் ஹமாத் பன்னாட்டு வானூர்தி நிலையமானது இப்பட்டத்தைப் பெற்றது.[340] சாங்கி விமான நிலையமானது 2023 இல் இப்பட்டத்தை மீண்டும் பெற்றது.[341] 2024 ஆம் ஆண்டு பிறகு மீண்டும் ஒரு முறை இப்பட்டத்தை இழந்தது.[342]

கடல்

Thumb
உயரமான பகுதியில் இருந்து சிங்கப்பூர் துறைமுகத்தின் ஒரு காட்சி, ஆண்டு 2015.

சிங்கப்பூர் துறைமுக அமைப்பு மற்றும் சுரோங் துறைமுகம் ஆகிய துறைமுக சேவை அமைப்புகளால் இயக்கப்படும் ஒரு துறைமுகம் சிங்கப்பூர் துறைமுகம் ஆகும். 285 கோடி மொத்த டன்கள் கையாளப்பட்டதால் கையாளப்பட்ட எடையின் அடிப்படையிலும், இருபது அடிக்கு சமமான அலகுகளையுடைய 3.72 கோடி சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டதால் சரக்குப் பெட்டகங்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் உலகின் இரண்டாவது மிக பரபரப்பான துறைமுகமாக 2019 ஆம் ஆண்டில் இது திகழ்ந்தது.[343] 62.6 கோடி டன்கள் சரக்குகள் கையாளப்பட்டதால் சாங்காய்க்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக பரபரப்பான துறைமுகமும் கூட இது தான். மேலும், கப்பல்களுக்கு இடையில் சரக்குகளை மாற்றும் செயல்பாட்டில் உலகின் மிக பரப்பான துறைமுகமாக இது உள்ளது. கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் உலகின் மிகப் பெரிய மையம் சிங்கப்பூர் துறைமுகம் தான்.[344]

Remove ads

தொழில்துறைப் பிரிவுகள்

உலகின் 3-ஆவது மிகப் பெரிய அன்னிய நாட்டுப் பண பரிமாற்ற மையம், 6-ஆவது மிகப் பெரிய நிதி மையம்,[345] 2-ஆவது மிகப் பெரிய சூதாட்ட சந்தை,[346] 3-ஆவது மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் வணிக மையம், உலகின் மிகப் பெரிய கடலடியிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கான சாதனங்களுடன் கூடிய பெரிய மேடையமைப்புகளின் உற்பத்தியாளர், கப்பல் பழுது பார்க்கும் சேவைகளுக்கான மையம்,[347][348][349] மற்றும் மிகப் பெரிய போக்குவரத்து உபகரண மையம் சிங்கப்பூர் ஆகும்.[350] இந்நாட்டின் பொருளாதாரமானது வேறுபட்ட பிரிவுகளைக் கொண்டுள்ளது. நிதி சேவைகள், உற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆகியவை பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் முதன்மையான துறைகளாக உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம், தொகுசுற்றுக்கள் மற்றும் கணினிகள் ஆகியவை இதன் முதன்மையான ஏற்றுமதிகள் ஆகும்.[351] 2010-ஆம் ஆண்டு இவை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27%-க்குப் பங்களித்தன. மின்னணுப் பொருட்கள், வேதிப் பொருட்கள், எந்திரப் பொறியியல் மற்றும் உயிரி மருத்துவ அறிவியல்கள் உள்ளிட்டவை பிற முக்கியமான பிரிவுகளாக உள்ளன. 2024-ஆம் ஆண்டு உலகளாவிய புத்தாக்க அட்டவணையில் 4-ஆவது இடத்தைப் சிங்கப்பூர் பெற்றது. 2022-ஆம் ஆண்டு 7-ஆவது இடத்தில் இருந்தது.[352][353][354][355][356] 2019-இல் சிங்கப்பூரில் 60 க்கும் மேற்பட்ட அரைக்கடத்தி தயாரிக்கும் நிறுவனங்கள் இருந்தன. உலகளாவிய சந்தையில் இந்நிறுவனங்கள் சேர்ந்து 11% மதிப்பைக் கொண்டிருந்தன. அரைக்கடத்தி தொழில்துறை மட்டுமே சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சுமார் 7% பங்கை அளிக்கிறது.[357]

சிங்கப்பூரின் மிகப் பெரிய நிறுவனங்களானவை தொலைத்தொடர்புகள், வங்கியியல், போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறைகளில் செயல்படுகின்றன. இதில் பெரும்பாலானவை அரசால் இயக்கப்பட்ட நிறுவனங்களாகத் தொடங்கப்பட்டன. அதற்குப் பிறகு சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களில் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன்ஸ், சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் எஞ்சினியரிங், கெப்பல் கார்ப்பரேஷன், ஓவர்சீஸ்-சைனீஸ் பேங்கிங் கார்ப்பரேஷன் (ஓ. சி. பி. சி.), டி. பி. எஸ். வங்கி (டி. பி. எஸ்.) மற்றும் யுனட்டெட் ஓவர்சீஸ் பேங்க் (யூ. ஓ. பி.) ஆகியவை அடங்கும். 2008-2009 ஆம் ஆண்டின் உலக பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு 2011-இல் ஓ. சி. பி. சி., டி. பி .எஸ்., மற்றும் யூ. ஓ. பி. ஆகிய வங்கிகள் புளூம்பெர்க் பிசினஸ் வீக் வார இதழால் முறையே உலகின் 1-ஆவது, 5-ஆவது மற்றும் 6-ஆவது வலிமையான வங்கிகள் என உலக அளவில் தரப்படுத்தப்பட்டன.[358] பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் உள்ள நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் தங்களது தலைமையகத்தை சிங்கப்பூரில் கொண்டுள்ளன. இப்பகுதியில் இது மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும்.[359]

சிங்கப்பூர் வான்வழி, சாங்கி சர்வதேச விமான நிலையம், மற்றும் சிங்கப்பூர் துறைமுகம் ஆகியவை இந்நாட்டின் உலக அளவில் மிகவும் நன்றாக அறியப்பட்ட நிறுவனங்கள் ஆகும். தத்தமது துறைகளில் முக்கிய விருதுகளை பெற்றவையாக இவை திகழ்கின்றன. ஆசியாவில் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக சிங்கப்பூர் வான்வழியானது தரநிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஃபார்ச்சூன் இதழின் வருடாந்திர "உலகின் 50 மிக மதிக்கப்படும் நிறுவனங்களின்" தொழில்துறை சுற்றாய்வுகளில் 2015-இல் உலகின் 19-ஆவது மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக சிங்கப்பூர் வான்வழி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட டிராவல் + லெசரின் மிகச் சிறந்த பன்னாட்டு விமான நிறுவன விருது உள்ளிட்டவை இந்நிறுவனம் பெற்ற பிற விருதுகளாகும். இந்த விருதை இந்நிறுவனம் 20 தொடர்ச்சியான ஆண்டுகளாக வென்றுள்ளது.[360][361] சாங்கி விமான நிலையமானது 100 விமான நிறுவனங்களின் விமானங்களைக் கொண்டு 300-க்கும் மேற்பட்ட நகரங்களை இணைக்கிறது. 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி உலகின் மிகச் சிறந்த விமான நிலைய விருதுகளில் 480-க்கும் மேற்பட்ட விருதுகளை இந்த உத்தி ரீதியிலான பன்னாட்டு விமான மையமானது பெற்றுள்ளது.[362] பத்துக்கும் மேற்பட்ட கட்டற்ற வணிக ஒப்பந்தங்களானவை பிற நாடுகள் மற்றும் பகுதிகளுடன் சிங்கப்பூரால் கையொப்பமிடப்பட்டுள்ளன.[185] இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய அயல்நாட்டு முதலீட்டாளர் சிங்கப்பூர் ஆகும்.[363] உலகின் 14-ஆவது மிகப் பெரிய ஏற்றுமதியாளர் மற்றும் 15-ஆவது மிகப் பெரிய இறக்குமதியாளர் சிங்கப்பூர் ஆகும்.[364][365]

சுற்றுலாத்துறை

Thumb
சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ சின்னமாகிய மெர்லயன்

சுற்றுலாத் துறையானது சிங்கப்பூரின் ஒரு முதன்மையான தொழில் துறையாகவும், சிங்கப்பூர் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்கை அளிப்பதாகவும் திகழ்கிறது. 2023-ஆம் ஆண்டு 1.36 கோடி பன்னாட்டு பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ளனர். சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையை விட இது இரு மடங்குக்கும் அதிகமானதாகும்.[366] சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சுமார் 3%-ஐ சுற்றுலாத்துறையானது நேரடியாகப் பங்களித்தது. கோவிட்-19 பெருந்தொற்று ஆண்டுகள் தவிர்த்து 2023-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் சராசரியாக இந்த 3% பங்களிப்பைக் கொடுத்துள்ளது.[367] ஒட்டு மொத்தமாக சுற்றுலாத் துறையானது 2016-இல் சிங்கப்பூரில் 8.6% வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.[368]

2015-இல் லோன்லி பிளாணட் இதழ் மற்றும் த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஆகியவை சிங்கப்பூரை முறையே அவற்றின் முதல் மற்றும் 6-ஆவது மிகச் சிறந்த உலகளாவிய சுற்றுலா இடமாகப் பட்டியலிட்டுள்ளன.[369] மெர்லயன்,[370] எசபிளானடு,[371] மரீனா பே சாண்ட்ஸ்,[372] விரிகுடா தோட்டங்கள்,[373] சிவேல் சாங்கி விமான நிலையம்,[374] சிச்மேசு,[371] சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம்,[371] சிங்கப்பூர் பிளையர்,[371] ஆர்ச்சர்டு சாலை கடை பட்டைப் பகுதி,[375] சுற்றுலா தீவான செந்தோசா,[376] மற்றும் சிங்கப்பூரின் முதல் உலகப் பாரம்பரியக் களமான சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம்[377] உள்ளிட்டவை நன்றாக அறியப்பட்ட இடங்கள் ஆகும். இவை அனைத்துமே தெற்கு மற்றும் கிழக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ளன.

Thumb
விக்டோரியா திரையரங்கு

சிங்கப்பூர் சுற்றுலா வாரியமானது வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழான ஒரு சட்டப்படியான வாரியம் ஆகும். நாட்டின் சுற்றுலா தொழில் துறையை பிரபலப்படுத்தும் பொறுப்பு இதற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகத்து 2017 இல் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் மற்றும் பொருளாதார வளர்ச்சி வாரியம் ஆகியவை ஒன்றிணைந்து "சிங்கப்பூர் - சாத்தியமாக்கப்பட்ட பற்றார்வம்" எனும் வணிகக் குறியீட்டை வெளியிட்டன. சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக சிங்கப்பூரை பன்னாட்டு அளவில் சந்தைப்படுத்துவதற்காக இதை வெளியிட்டன.[378] பல அடுக்கு மாடி வணிக வளாகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளைக் கொண்டுள்ள ஆர்ச்சர்டு சாலை மாவட்டமானது சிங்கப்பூரில் விற்பனை மற்றும் சுற்றுலா மையமாகக் கருதப்படுகிறது.[375] சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை, ரிவர் வொண்டர்ஸ், பேர்டு பேரடைஸ், மற்றும் நைட் சபாரி (வடக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ளது) உள்ளிட்டவை பிற பிரபலமான சுற்றுலா இடங்கள் ஆகும். சிங்கப்பூர் விலங்குக் காட்சிச் சாலையானது திறந்த விலங்குக் காட்சிச்சாலை என்ற கருத்துருவைப் பின்பற்றி நடத்தப்படுகிறது. இங்கு கூண்டுக்குள் அடைக்கப்படுவதற்கு மாறாக விலங்குகள் பார்வையாளர்களிடமிருந்து உலர்ந்த அல்லது ஈரமான அகழிகளின் மூலம் பிரிக்கப்பட்ட தடுப்புப் பகுதிகளில் வைக்கப்படுகின்றன. ரிவர் வொண்டர்சானது 300 வகை விலங்குகளைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான அழிவாய்ப்பு நிலையில் உள்ள உயிரினங்களும் அடங்கும்.[379] சிங்கப்பூர் தன்னைத் தானே ஒரு மருத்துவ சுற்றுலா மையமாக விளம்பரப்படுத்துகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 இலட்சம் அயல் நாட்டவர்கள் மருத்துவ சேவைக்காக வருகின்றனர். சிங்கப்பூர் மருத்துவ சேவைகளானவை ஆண்டு தோறும் குறைந்தது 10 இலட்சம் அயல்நாட்டு நோயாளிகளுக்கு சேவையாற்றி ஐஅ$3 பில்லியனை வருவாயாக ஈட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.[380]

Remove ads

மக்கள் தொகையியல்

Thumb
சிங்கப்பூரில் அண்.1890 இல் சீன (கிழக்காசியர்), மலாய் (தென்கிழக்கு ஆசியர்), மற்றும் இந்தியப் (தெற்காசியர்) பெண்கள். மூன்று இனங்களுக்கு மத்தியில் இன நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு தனித்துவமான இன நல்லிணக்க நாளானது ஒவ்வொரு ஆண்டும் 21 சூலை அன்று கொண்டாடப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதி நிலவரப்படி சிங்கப்பூரின் மதிப்பிடப்பட்ட மொத்த மக்கள் தொகையானது 59,17,600 பேர் ஆவர். இதில் 36,10,700 (61.6%) பேர் குடிமக்கள் ஆவர். எஞ்சிய 23,06,900 (38.4%) பேரில் நிரந்தர வாசிகள் (5,22,300) மற்றும் அயல்நாட்டு மாணவர்கள், அயல்நாட்டுத் தொழிலாளிகள் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் (16,44,500) ஆவர்.[381] முந்தைய ஆண்டிலிருந்து ஒட்டுமொத்த மக்கள் தொகையானது 5% வளர்ச்சியடைந்திருந்தது.[382] இதற்குப் பெரும் பகுதி காரணம் அயல்நாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகும். 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து இந்த தகவுப் பொருத்த அளவானது பெரும்பாலும் மாறாமல் உள்ளது.[383][384]

மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது குடியிருப்புவாசிகளில் சுமார் 74.3% பேர் சீன வழித்தோன்றல்களாகவும், 13.5% பேர் மலாய் வழித்தோன்றல்களாகவும், 9% பேர் இந்திய வழித்தோன்றல்களாகவும் மற்றும் 3.2% பேர் பிற வழித்தோன்றல்களாகவும் (ஐரோவாசியர் போன்றோர்) இருந்தனர் என்று குறிப்பிட்டது. 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் இந்த தகவுப் பொருத்த அளவானது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. சீனர் மற்றும் மலாய் (முறையே 0.2% மற்றும் 0.1%) மக்களிடையே சிறிதளவு அதிகரிப்புடனும், இந்தியர் மற்றும் பிறர் (முறையே 0.2% மற்றும் 0.1%) இடையே சிறிதளவு குறைவுடனும் காணப்பட்டது.[383][385] 2010 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒவ்வொரு தனிநபரும் ஒரே ஓர் இனத்தின் உறுப்பினராக மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. பொதுவாக அவர்களது தந்தையின் இனமாக இது இருந்தது. இவ்வாறாக அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் அவர்களின் தந்தையின் இனத்தின் கீழே கலப்பு இன நபர்கள் குறிப்பிடப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு முதல் ஒரு பல இன வகையைப் பயன்படுத்தி மக்கள் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உருவானது. இதில் அவர்கள் ஒரு முதன்மையான இனம் மற்றும் ஓர் இரண்டாம் நிலை இனத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், இரண்டுக்கு மேற்பட்ட இனங்களைத் தேர்ந்தெடுக்க இயலாது.[386]

ஆசியாவில் உள்ள பிற வளர்ந்த நாடுகளைப் போலவே சிங்கப்பூர் 1980 களில் தொடங்கி கருவள வீதத்தில் ஒரு துரித வீழ்ச்சியைக் கண்டுள்ளது.[387] 2010 ஆம் ஆண்டிலிருந்து இந்நாட்டின் கருவள வீதமானது பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு 1.1 குழந்தைகள் என்று நிலையை அடைந்துள்ளது. உலகின் மிகக் குறைவான அளவுகளில் ஒன்று இதுவாகும். மக்கள் தொகையை இடமாற்றம் செய்யத் தேவையான 2.1 என்ற அளவுக்குக் கீழ் இது உள்ளது.[388] இதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் குடியிருப்பு வாசிகளின் இடைமதிப்பு வயதானது உலகிலேயே மிக அதிக அளவுகளில் ஒன்றாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முந்தைய 39.6 ஆண்டுகள் என்ற அளவுடன் ஒப்பிடப்படும் போது 2022 இல் 42.8 ஆண்டுகளாக இது இருந்தது.[389] 2001 இல் தொடங்கி அரசாங்கமானது குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்க ஒரு தொடர்ச்சியான திட்டங்களை அறிமுகப்படுத்தியது. தாய்க்கான சம்பளம் வழங்கப்பட்ட விடுமுறை, குழந்தைகளை வளர்ப்பதற்கான மானியங்கள், வரி விலக்கு மற்றும் இழப்பீடு வழங்குதல், ஒற்றை-முறை பணப் பரிசுகள் மற்றும் இலகுவான பணி முறைகளை அமல்படுத்தும் நிறுவனங்களுக்கான நிதி நல்கைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.[387] இருந்த போதிலும் குழந்தைப் பிறப்பு வீதமானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு ஒரு பெரும் வீழ்ச்சியை இது அடைந்தது.[390] இந்த வீழ்ச்சியை மட்டுப்படுத்தவும், இந்நாட்டின் பணி செய்யும் வயதுள்ள மக்கள் தொகையைப் பேணுவதற்கும் என்று சிங்கப்பூரின் குடியேற்றக் கொள்கையானது வடிவமைக்கப்பட்டுள்ளது.[391][392][393]

91% குடியிருப்பு குடும்பங்கள் (ஒரு சிங்கப்பூர் குடிமகன் அல்லது நிரந்தர குடியிருப்புவாசியால் தலைமை தாங்கப்பட்ட குடும்பங்கள்) அவர்கள் வாழும் வீடுகளை உடைமையாகக் கொண்டுள்ளன. ஒரு குடும்பத்தின் சராசரி அளவானது 3.43 நபர்களாக உள்ளது (குடிமக்களாகவோ அல்லது நிரந்தரக் குடியிருப்புவாசிகளாகவோ இல்லாத சார்பாளர்களையும் இது உள்ளடக்கியுள்ளது).[394][395] எனினும், நிலப் பற்றாக்குறை காரணமாக 78.7% குடியிருப்பு குடும்பங்கள் மானியம் பெற்ற, வானுயர், பொது வீட்டு வசதிக் கட்டடங்களில் குடியிருக்கின்றன. இந்தக் கட்டடங்கள் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி வாரியத்தால் உருவாக்கப்பட்டவையாகும். மேலும், 75.9% குடியிருப்பு குடும்பங்கள் ஒரு நான்கு அறை அடுக்குமாடி வீட்டுக்குச் சமமான அல்லது அதை விடப் பெரிய உடைமைகளில் அல்லது தனியார் வீடுகளில் வாழ்கின்றன.[396][397] சிங்கப்பூர் வாசிகளின் வீடுகளில் வாழும் அயல்நாட்டைச் சேர்ந்த வீட்டு வேலைப் பணியாளர்கள் சிங்கப்பூரில் மிகவும் பொதுவானவர்களாக உள்ளனர். திசம்பர் 2013 ஆம் மாத நிலவரப்படி சுமார் 2,24,500 அயல்நாட்டைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர்.[398]

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, பகுதி ...

சமயம்

மேலதிகத் தகவல்கள் சிங்கப்பூரில் சமயம், 2020 ...

பெரும்பாலான முதன்மையான சமயப் பிரிவுகள் சிங்கப்பூரில் பின்பற்றப்படுகின்றன. இந்த நகர அரசில் 10 முதன்மையான சமயங்களை சிங்கப்பூரின் சமயங்களுக்கிடையிலான அமைப்பானது அடையாளம் கண்டுள்ளது.[399] பியூ ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்ட ஒரு 2014 ஆம் ஆண்டு ஆய்வானது சமய ரீதியாக உலகின் மிக வேற்றுமைகளை உடைய நாடாக சிங்கப்பூரை கண்டுபிடித்தது. இங்கு எந்த ஓர் ஒற்றை சமயமும் பெரும்பான்மையாக இல்லை.[400]

இந்நாட்டில் மிகப் பரவலாக பின்பற்றப்படும் சமயம் பௌத்தம் ஆகும். 2020 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 31% குடியிருப்புவாசிகள் தங்களைத் தாமே பௌத்தத்தை பின்பற்றுபவர்களாக குறிப்பிட்டனர். இங்கு இரண்டாவது மிகப் பெரிய சமயமாக கிறித்தவம் 18.9% பேருடன் உள்ளது. இதற்குப் பிறகு இசுலாம் (15.6%), தாவோயியம் மற்றும் சீன பாரம்பரிய நம்பிக்கைகள் (8.8%) மற்றும் இந்து சமயம் (5.0%) ஆகியவை உள்ளன. ஐந்தில் ஒரு பங்கு மக்கள் எந்த சமயத்தையும் சாராதவர்களாக உள்ளனர். கிறித்தவர்கள், முசுலிம்கள் மற்றும் சமயம் சாராதோரின் தகவுப் பொருத்த அளவானது 2010 மற்றும் 2020 க்கு இடையில் சற்றே அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பௌத்தர்கள் மற்றும் தாவோயியத்தைப் பின்பற்றுவோரின் தகவுப் பொருத்த அளவானது சிறிதளவு குறைந்துள்ளது. இந்து சமயமும், பிற நம்பிக்கைகளும் மக்கள் தொகையில் தங்களது பங்கில் பெருமளவுக்கு மாற்றமின்றி நிலையாக உள்ளன.[401][சான்று தேவை]

பௌத்தத்தின் அனைத்து மூன்று முதன்மையான பாரம்பரியங்களான தேரவாத பௌத்தம், மகாயான பௌத்தம், மற்றும் வச்சிரயான பௌத்தம் ஆகியவற்றைச் சேர்ந்த மடாலயங்கள் மற்றும் தரும மையங்களை சிங்கப்பூர் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பௌத்தர்கள் சீனர்கள் ஆவர். இவர்கள் மகாயான பாரம்பரியத்தைப் பின்பற்றுவர்கள் ஆவர்.[402] சீனாவிலிருந்து சமயப் பரப்புரை செயல்பாடுகள் தசாப்தங்களாக நடைபெற்றது இதற்குக் காரணம் ஆகும். எனினும், கடைசி தசாப்தத்தின் போது மக்கள் மத்தியில் (சீனர்கள் மத்தியில் மட்டுமல்லாது) தாய்லாந்தின் தேரவாத பௌத்தமானது அதிகரித்து வந்த பிரபலத்தன்மையைக் கண்டுள்ளது. ஒரு சப்பானிய பௌத்த அமைப்பான "சோகா கக்கை பன்னாட்டு" அமைப்பானது சிங்கப்பூரில் பலரால் பின்பற்றப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சீன வழித்தோன்றல்களாக உள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் இந்நாட்டிற்குள் திபெத்திய பௌத்தமும் கூட மெதுவாகப் பரவி வருகிறது.[403]

மொழிகள்

மேலதிகத் தகவல்கள் சிங்கப்பூரில் வீடுகளில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழி ...

சிங்கப்பூர் ஆங்கிலம், மலாய், மாண்டரின் மற்றும் தமிழ் என நான்கு அலுவல்பூர்வ மொழிகளைக் கொண்டுள்ளது.[404]

இணைப்பு மொழியாகவும்,[405][406][407][408] வணிகம், அரசாங்கம், சட்டம் மற்றும் கல்வியில் பயன்படுத்தப்படும் முதன்மையான மொழியாகவும் ஆங்கிலம் திகழ்கிறது.[409][410] சிங்கப்பூரின் அரசியலமைப்பு மற்றும் அனைத்து அரசாங்கச் சட்டங்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் நீதி மன்றங்களில் ஆங்கிலத்தைத் தவிர மற்றொரு மொழி பயன்படுத்தப்பட்டால் மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது.[411][412] சட்டப்படியான அரசு நிறுவனங்கள் தங்களது வணிகச் செயல்பாடுகளை ஆங்கிலத்திலேயே நடத்துகின்றன. அதே நேரத்தில், மலாய், மாண்டரின் அல்லது தமிழ் போன்ற ஓர் ஆங்கிலமல்லாத அலுவல்பூர்வ மொழியில் மொழியில் எழுதப்பட்ட எந்த ஒரு அலுவல்பூர்வ ஆவணங்களும் பொதுவாகப் பயன்பாட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்படுகின்றன.[406][413][414]

பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றதற்குப் பிறகு 1960 களில் சிங்கப்பூரின் மலாய் மொழி பேசும் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேசியாவிடம் இருந்து சச்சரவுகளைத் தவிர்ப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்தால் மலாயானது தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது.[172] செயல்பாட்டு ரீதியில் இல்லாமல் அடையாள ரீதியில் மட்டும் மலாய் மொழியின் நிலை உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[404][415][416] முன்னேறட்டும் சிங்கப்பூர் எனும் சிங்கப்பூரின் தேசிய கீதம்,[417] சிங்கப்பூர் விருதுகள் மற்றும் இராணுவக் கட்டளைகளைக் குறிப்பிட மலாய் மொழி பயன்படுத்தப்படுகிறது.[418][419] சிங்கப்பூரைச் சேர்ந்த மலாயர்கள் சிலர் அரபியை அடிப்படையாகக் கொண்ட சாவி எழுத்து முறையையும் கூட கற்றாலும் சிங்கப்பூரின் மலாய் மொழியானது அலுவல்பூர்வமாக லத்தீனை அடிப்படையாகக் கொண்ட ருமி எழுத்து முறையிலேயே எழுதப்படுகிறது.[420] சிங்கப்பூரின் அடையாள அட்டைகள் பயன்பாட்டுக்கான ஓர் இன எழுத்து முறையாக சாவி கருதப்படுகிறது.[421]

சிங்கப்பூரர் பொதுவாக இரு மொழிகளை அறிந்தவர்களாக உள்ளனர். ஒரு தனி நபரின் இன அடையாளம் மற்றும் விழுமியங்களைத் தக்க வைக்கும் பொருட்டு பள்ளிகளில் பொதுவாக ஆங்கிலமானது அவர்களது பொது மொழியாகவும், அவர்களது தாய் மொழியானது இரண்டாவது மொழியாகவும் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆங்கிலமானது வீடுகளில் மிக அதிகமாக பேசப்படும் மொழியாக இருந்தது. 48.3% பேர் இதைப் பயன்படுத்தினர். மாண்டரின் அடுத்த இடத்தில் 29.9% உடன் இருந்தது.[419][422] கிட்டத் தட்ட 5 இலட்சம் பேர் சீன மொழியின் பிற மூதாதையர் மரபு தெற்கு மொழிகளைப் பேசுகின்றனர். இதில் முதன்மையாக ஒக்கியேன், தியோச்சீவ் மற்றும் கண்டோனீயம் ஆகியவற்றை தங்களது வீடுகளில் பயன்படுத்துகின்றனர். மாண்டரின் அல்லது ஆங்கிலத்திற்காக முன்னர் குறிப்பிட்ட மொழிகளின் பயன்பாடு குறைந்து வந்தாலும் இவ்வாறு பயன்படுத்துகின்றனர்.[423] சிங்கப்பூரில் சீன எழுத்துக்களானவை எளிமையாக்கப்பட்ட சீன எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன.[424]

சிங்கப்பூர் ஆங்கிலமானது பெரும்பாலும் பிரித்தானிய ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். பிரித்தானியாவின் ஒரு முந்தைய குடியேற்றப் பகுதியாக இந்நாட்டின் நிலையே இதற்குக் காரணமாகும்.[425][426] எனினும், சிங்கப்பூரில் பேசப்படும் ஆங்கிலத்தின் வடிவங்களானவை தரப்படுத்தப்பட்ட சிங்கப்பூர் ஆங்கிலம் முதல் சிங்கிலீசு சென்று அறியப்படும் ஒரு பேச்சு வழக்கு மொழி வரை வேறுபட்டுக் காணப்படுகின்றன. அரசாங்கத்தால் சிங்கிலீசானது ஊக்குவிக்கப்படவில்லை. ஏனெனில், சிங்கப்பூரரை இடர்ப்படுத்தும் ஒரு தரமற்ற ஆங்கில கிரியோல் மொழியாக இதை அரசாங்கம் குறிப்பிடுகிறது. தரப்படுத்தப்பட்ட ஆங்கிலத்தைக் கற்பதற்கு ஒரு தடங்கலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடுகிறது. மற்றொரு சிங்கிலீசு பேசுபவரைத் தவிர்த்து யாருடனும் இம்மொழியைப் பேசுபவரைப் புரிந்து கொள்ள இயலாதவராக இது ஆக்குகிறது.[427] பெரும்பாலான ஆங்கிலம் பேசும் மக்கள் சிங்கிலீசைப் புரிந்து கொள்ளாத முடியாத அதே நேரத்தில் தரப்படுத்தப்பட்ட சிங்கப்பூர் ஆங்கிலமானது அனைத்து தரப்படுத்தப்பட்ட ஆங்கில மொழி பேசுபவர்களாலும் முழுவதுமாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இருந்த போதிலும் சிங்கப்பூரர் சிங்கிலீசுடன் ஒரு வலிமையான அடையாள மற்றும் தொடர்பு உணர்வைக் கொண்டுள்ளனர். இதன்படி சிங்கிலீசு மொழி உள்ளதானது பல சிங்கப்பூரர்களுக்கு ஒரு தனித்துவமான பண்பாட்டுக் குறியீடாக அங்கீகரிக்கப்படுகிறது.[428] இவ்வாறாக சமீபத்திய காலங்களில் அரசாங்கமானது சிங்கிலீசு மற்றும் தரப்படுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளின் இரட்டை வழக்குகளையும் சகித்துக் கொண்டுள்ளது (இரு மொழிகளிலும் சரளமாகப் பேசத் தெரிந்தவர்களை மட்டும்). அதே நேரத்தில் சிங்கிலீசை (பிற ஆங்கில மொழி பேசும் நாடுகளின் தரப்படுத்தப்பட்ட ஆங்கிலத்துடன் இது புரிந்து கொள்ள இயலாததாக உள்ளது) மட்டும் பேசுபவர்கள் மத்தியில் தரப்படுத்தப்பட்ட ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது.[428]

Remove ads

கல்வி

Thumb
இந்நகர அரசில் உள்ள ஆறு சுயாட்சிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்.

தொடக்க நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைகளுக்கான கல்வியானது பெரும்பாலும் அரசால் ஆதரவளிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் ஆகிய அனைத்து கல்வி நிலையங்களும் கல்வி அமைச்சகத்துடன் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.[429] அனைத்து பொது பள்ளிகளிலும் கற்பிக்கப்படும் பாடத் திட்டமானது ஆங்கில மொழியில் உள்ளது.[430] அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்பட்டு, தேர்வு எழுத வைக்கப்படுகின்றன. இதற்கு விதி விலக்கு "தாய் மொழிப்" பாடம் மட்டுமே ஆகும்.[431] பன்னாட்டு அளவில் "தாய் மொழி" என்ற சொல்லானது பொதுவாக முதல் மொழியைக் குறிக்கும் அதே நேரத்தில் சிங்கப்பூரின் கல்வி அமைப்பில் ஆங்கிலம் முதல் மொழியாக இருப்பதால் தாய் மொழி என்ற சொல்லானது இரண்டாவது மொழியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[432][433] வெளி நாடுகளில் குறிப்பிட்ட காலத்திற்கு இருந்தவர்கள் அல்லது தங்களது தாய் மொழியில் இடர்ப்பாடு கொண்டவர்கள் ஓர் எளிமையான பாடத் திட்டத்தை எடுத்துக் கொள்ள அல்லது தாய் மொழிப் பாடத்தை நீக்கிவிட அனுமதிக்கப்படுகின்றனர்.[434][435]

கல்வியானது மூன்று நிலைகளில் கற்பிக்கப்படுகிறது. அவை தொடக்க நிலை, இரண்டாம் நிலை மற்றும் கல்லூரிக்கு முந்தைய நிலை ஆகியவையாகும். இதில் தொடக்கக் கல்வியானது கட்டாயமானதாகும். மாணவர்கள் 6 ஆண்டு கால தொடக்கக் கல்வியுடன் தங்களது கல்வியைத் தொடங்குகின்றனர். ஒரு நான்காண்டு அடிப்படைப் பாடத் தொகுதி மற்றும் இரண்டாண்டு திசைப்படுத்தும் பாடத் தொகுதியை தொடக்கக் கல்வியானது கொண்டுள்ளது. பாடத் திட்டமானது ஆங்கிலம், தாய் மொழி, கணிதம் மற்றும் அறிவியலைக் கற்பிப்பதை கவனக் குவியமாகக் கொண்டுள்ளது.[436][437] இரண்டாம் நிலைக் கல்வியானது 4 முதல் 5 ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் விரைவு, சாதாரண (கல்விசார்) மற்றும் சாதாரண (தொழில்நுட்பம்சார்) என்று ஒரு மாணவரின் திறமை நிலையைச் சார்ந்து இரண்டாம் நிலைக் கல்வியானது பிரித்துக் கொள்ளப்படுகிறது.[438] எனினும், வகுப்புகளானவை குறிப்பிட்ட பாடத்திட்டங்களில் கவனம் செலுத்தினாலும், அடிப்படைப் பாடத் திட்டப் பிரிவுகளானவை தொடக்கக் கல்வியைப் போலவே தான் இங்கும் உள்ளன.[439] கல்லூரிக்கு முந்தைய கல்வியானது 21 இளையோர் கல்லூரிகள் அல்லது மில்லேனியா கல்வி நிலையத்தில் முறையே இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் காலத்திற்குக் கற்பிக்கப்படுகிறது.[440] எனினும், கல்லூரிக்கு முந்தைய கல்விக்கு மாற்றாக 5 பல்தொழில்நுட்பப் பயிலகங்கள் மற்றும் 3 தொழில்நுட்பப் பயிலகக் கல்லூரிகள் உள்ளிட்ட இரண்டாம் நிலை கல்விக்குப் பிந்தைய பிற கல்வி நிலையங்களில் கல்வி வழங்கப்படுகிறது. சிங்கப்பூர் ஆறு பொதுப் பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது.[441] இதில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் உலகின் முதல் 20 பல்கலைக்கழகங்களுக்குள் வருகின்றன.[442]

தேசியத் தேர்வுகள் தரப்படுத்தப்பட்ட நிலையானது அனைத்து பள்ளிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. ஒவ்வொரு நிலைக்குப் பிறகும் ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. முதல் ஆறு ஆண்டு கல்விக்குப் பிறகு மாணவர்கள் தொடக்கப் பள்ளியிலிருந்து விலகும் தேர்வை எழுதுகின்றனர்.[436] இரண்டாம் நிலைப் பள்ளியில் அவர்களது இடத்தை இது முடிவு செய்கிறது. இரண்டாம் நிலைப் பள்ளியின் முடிவில் ஓ-நிலை (பொதுவான) அல்லது என்-நிலை (இயல்பான) தேர்வுகள் நடைபெறுகின்றன.[443] இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு முந்தைய நிலையின் முடிவில் "கல்விக்கான பொதுச் சான்றிதழ் ஏ-நிலைத் தேர்வுகள்" நடைபெறுகின்றன.[444] இரண்டாம் நிலைக் கல்வி மற்றும் அதற்கு மேற்பட்ட பள்ளிகளில் சில பள்ளிகள் தங்களது பாடத்திட்டத்தை அமைத்துக் கொள்வதில் ஓரளவுக்கு சுதந்திரம் பெற்றுள்ளன. இவை தன்னாட்சிப் பள்ளிகள் என்று அறியப்படுகின்றன.[438]

சிங்கப்பூர் ஒரு கல்வி மையம் ஆகும். 2006 இல் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு மாணவர்கள் இங்கு கல்வி பயின்றனர்.[445] 5,000 மலேசிய மாணவர்கள் தினமும் மலேசியா-சிங்கப்பூர் தரைப் பாலத்தைக் கடந்து சிங்கப்பூரில் பள்ளிகளுக்கு வருகின்றனர்.[446] 2009 இல் சிங்கப்பூரின் பல்கலைக்கழகங்களில் இருந்த ஒட்டு மொத்த மாணவர்களில் 20% பேர் பன்னாட்டு மாணவர்களாக இருந்தனர். 20% என்பது அதிகபட்சமாக அனுமதி வழங்கப்பட்ட அளவு ஆகும். இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தென்கிழக்காசிய நாடுகள், சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வந்தவர்களாவர்.[447]

கணிதம், அறிவியல் மற்றும் கற்றல் சார்ந்த பல உலகக் கல்வித் திறன் மதிப்பீடுகளில் சிங்கப்பூர் மாணவர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். 2015 இல் 76 நாடுகளில் நடத்தப்பட்ட "பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்" உலகளாவிய பள்ளி செயல்பாட்டு தரநிலைகளில் முதல் நிலையை இந்நாட்டின் தொடக்க மற்றும் இரண்டாம் நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகிய இரு பிரிவினருமே பெற்றனர். கல்வித் தரங்களுக்கான மிகவும் அகல் விரிவான வரைபடமாக இந்த தரநிலை குறிப்பிடப்படுகிறது.[448][449] 2016 இல் சிங்கப்பூர் மாணவர்கள் "பன்னாட்டு மாணவர் மதிப்பீட்டுக்கான திட்டம்"[450][451][452][453] மற்றும் "பன்னாட்டு கணிதங்கள் மற்றும் அறிவியல் கல்விக்கான போக்குகள்"[454][455][456] ஆகிய இரண்டிலுமே முதல் நிலையைப் பெற்றனர். 2016 இல் 72 நாடுகளில் எடுக்கப்பட்ட இஎப் ஆங்கில சரள சுட்டெண்ணில் சிங்கப்பூர் 6 ஆவது இடத்தைப் பெற்றது. முதல் 10 இடங்களில் வந்த ஒரே ஒரு ஆசிய நாடாகவும் திகழ்ந்தது.[457][458][459][460]

Remove ads

சுகாதாரம்

Thumb
இந்நகரத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய மருத்துவமனையாக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை உள்ளது. ஆண்டுக்கு 10 இலட்சம் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.

வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவான சுகாதார செலவீனங்களைக் கொண்டிருந்தாலும் கூட சிங்கப்பூர் பொதுவாகவே ஓர் ஆற்றல் வாய்ந்த சுகாதார அமைப்பைக் கொண்டுள்ளது.[461] உலக சுகாதார அமைப்பின் உலக சுகாதார அறிக்கையில் சிங்கப்பூரின் சுகாதார அமைப்பானது ஒட்டு மொத்தமாக உலகின் 6 ஆவது இடத்தைப் பெற்றது.[462] கடந்த இரு தசாப்தங்களில் சிங்கப்பூர் பிறக்கும் போது ஏற்படும் குழந்தை இறப்பு வீதங்களில் உலகின் மிகக் குறைவான அளவைக் கொண்டுள்ளது.[463] 2019 இல் எந்த ஒரு நாட்டையும் விட மிக நீண்ட ஆயுட்கால எதிர்பார்ப்பாக 84.8 ஆண்டுகளை சிங்கப்பூரர்கள் கொண்டிருந்தனர். 75.8 ஆண்டுகள் வரையிலும் நல்ல ஆரோக்கியத்துடன் சராசரியாக 87.6 ஆண்டு கால ஆயுட்கால எதிர்பார்ப்பை இந்நாட்டுப் பெண்கள் கொண்டுள்ளனர். சராசரிகளானவை ஆண்களுக்குக் குறைவானவையாக உள்ளன.[464] உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் சிங்கப்பூர் முதலாம் இடத்தைப் பெற்றது.[465]

வயது வந்தோருக்கான உடல் பருமனானது 10% க்கும் குறைவாக உள்ளது.[466] நோய்த் தடுப்பானது இந்நாட்டில் உயர் நிலையில் காணப்படுகிறது.[467] 2013 இல் "பொருளாதார உளவியல் பிரிவு அமைப்பானது" ஆசியாவிலேயே முதலாம் மற்றும் உலகிலேயே ஒட்டு மொத்தமாக ஆறாவது இடத்தைப் பெற்ற மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளதாக சிங்கப்பூரை தரப்படுத்தியது.[468]

அரசாங்கத்தின் சுகாதார அமைப்பானது "3எம்" அமைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இதில் மெடிஃபண்ட், மெடிசேவ் மற்றும் மெடிசீல்டு ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. மெடிஃபண்டானது சுகாதார சேவைகளைப் பெற இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வளையத்தை வழங்குகிறது. மெடிசேவ் என்பது சுமார் 85% மக்களைக் கொண்டுள்ள ஒரு கட்டாய தேசிய மருத்துவ சேமிப்பு கணக்கு அமைப்பு ஆகும். மெடிசீல்டு என்பது அரசாங்கத்தால் நிதியுதவி பெறும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமாகும். சிங்கப்பூரில் உள்ள பொது மருத்துவமனைகள் தங்களது மேலாண்மை முடிவுகள், நோயாளிகளுக்காக கருத்தியலாகப் போட்டியிடுதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சுதந்திரத்தைக் கொண்டுள்ளன. ஆனால், தொடர்ந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.[469] குறைவான வருமானத்தையுடையவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த ஒரு மானியத் திட்டம் இந்நாட்டில் உள்ளது.[470] 2008 இல் 32% சுகாதார நிதியானது அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தோராயமாக 3.5% பங்களிப்பை சுகாதாரத் துறை அளிக்கிறது.[471]

Remove ads

பண்பாடு

Thumb
சிங்கப்பூரின் சைனாடவுன் மாவட்டத்தில் 1827 ஆம் ஆண்டிலிருந்து அமைந்துள்ள சிங்கப்பூரின் மிகப் பழமையான இந்துக் கோயிலான சிறீ மாரியம்மன் கோயிலில் உள்ள நுணுக்கமான அமைப்புகள்.

இந்நாட்டின் அளவு சிறியதாக உள்ள போதிலும் சிங்கப்பூர் ஒரு பல்வேறுபட்ட மொழிகள், சமயங்கள் மற்றும் பண்பாடுகளைக் கொண்டுள்ளது.[472] சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர்களான லீ குவான் யூ மற்றும் கோ சோக் தோங் ஆகியோர் ஒரு நாடு என்ற பாரம்பரிய வரையறைக்குள் சிங்கப்பூர் அடங்குவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மாற்றமடைந்து கொண்டிருக்கும் ஒரு சமூகம் என்று அவர்கள் இந்நாட்டை அழைத்தனர். சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசுவதில்லை, ஒரே சமயத்தைப் பின்பற்றுவதில்லை அல்லது ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பதில்லை என்ற உண்மையை இதற்குக் காரணமாக சுட்டிக் காட்டினர்.[472][473] ஆங்கிலத்தைத் தங்களது பூர்விக மொழியாகப் பேசம் சிங்கப்பூரர் மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றுகின்றனர் (கிறித்தவப் பண்பாடு அல்லது சமயச் சார்பின்மையை இதனுடன் சேர்த்து பின்பற்றுகின்றனர்).[474] அதே நேரத்தில், மாண்டரினை தங்களது பூர்விக மொழியாகப் பேசுபவர்கள் சீனப் பண்பாட்டைப் பின்பற்றுகின்றனர். சீனப் பண்பாடானது சீன நாட்டுப்புற சமயம், பௌத்தம், தாவோயியம் மற்றும் கன்பூசியம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. மலாய் மொழி பேசும் சிங்கப்பூரர் பெரும்பாலும் மலாய் பண்பாட்டைப் பின்பற்றுகின்றனர். மலாய் பண்பாடும் இசுலாமியப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது.[475][476] தமிழ் பேசும் சிங்கப்பூரர் பெரும்பாலும் தமிழர் பண்பாட்டைப் பின்பற்றுகின்றனர். தமிழர் பண்பாடும் பெரும்பாலும் இந்து பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. இன மற்றும் சமய ஒருமைப்பாடானது சிங்கப்பூரின் வெற்றியில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது. ஒரு சிங்கப்பூரிய அடையாளத்தை உருவாக்குவதில் இது பங்காற்றியுள்ளது.[477][478]

1963 இல் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது பெரும்பாலான சிங்கப்பூர் குடிமக்கள் குறுகிய கால தொழிலாளர்களாக இருந்தனர். இப்பகுதியில் நிரந்தரமாகத் தங்குவதற்கு அவர்களுக்கு எண்ணம் இருக்கவில்லை.[479] நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, உள்ளூரில் பிறந்த ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிறுபான்மையினரும் இங்கு காணப்படுகின்றனர். இவர்கள் பெரனகர் அல்லது பாபா-நியோன்யா என்று அறியப்படுகின்றனர். 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டு சீனக் குடியேறிகளின் வழித்தோன்றல்கள் இவர்கள் ஆவர். சிங்கப்பூருக்குத் தங்களது விசுவாசத்தை உறுதியளித்த பெரனகர் தவிர்த்து பெரும்பாலான தொழிலாளர்களின் விசுவாசங்களானவை தத்தமது தாயகங்களான மலாயா, சீனா மற்றும் இந்தியாவுடனேயே உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு தனித்துவமான சிங்கப்பூரின் அடையாளம் மற்றும் பண்பாட்டை உருவாக்க ஒரு வேண்டுமென்ற செயல்பாட்டை அரசாங்கமானது தொடங்கியது.[479] தனி நபர் தேர்ந்தெடுப்புகளுக்குள் தலையிடும் வகையில் குடிமக்கள் மீது அளவுக்கு மீறி அக்கறை காட்டும் ஒரு செவிலித்தாய் அரசாகவும் சிங்கப்பூர் பெயர் பெற்றுள்ளது.[480][481] தகுதி அடிப்படைக்கு ஒரு கடுமையான முக்கியத்துவத்தை இந்த அரசாங்கம் கொடுக்கிறது. திறனை அடிப்படையாகக் கொண்டே ஒருவர் இந்நாட்டில் மதிப்பிடப்படுகிறார்.[482]

சிங்கப்பூரின் தேசிய மலர் வாண்டா "மிஸ் ஜோக்கிம்" என்று அழைக்கப்படும் ஒரு கலப்பின ஆர்க்கிட் ஆகும். சிங்கப்பூரில் பிறந்த ஓர் அமெரிக்கப் பெண்மணியின் நினைவாக இது இப்பெயரைப் பெற்றது. 1893 இல் அப்பெண்மணி தஞ்சோங் பகர் என்ற இடத்தில் தனது தோட்டத்தில் மலர்களைக் கலப்பினம் செய்தார்.[483] சிங்கப்பூர் சிங்க நகரம் என்று அறியப்படுகிறது. அரசின் சின்னம் மற்றும் சிங்கத் தலைக் குறியீடு போன்ற பல தேசியச் சின்னங்கள் இந்நாட்டில் சிங்கத்தைப் பயன்படுத்துகின்றன. முதன்மையான சமய விழாக்களுக்கு இங்கு பொது விடுமுறைகள் அளிக்கப்படுகின்றன.[484]

கலைகள்

Thumb
சிங்கப்பூரிய மற்றும் தென்கிழக்காசிய கலைகள் குறித்த உலகின் மிகப் பெரிய பொது தொகுப்பை சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகமானது கொண்டுள்ளது.

1990 களின் போது காட்சி மற்றும் இலக்கிய கலை வடிவங்களுடன் சேர்த்து மேடைக் கலைகளின் வளர்ச்சிக்கும் தலைமை தாங்க "தேசியக் கலைகள் மன்றமானது" உருவாக்கப்பட்டது.[485] சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகமானது நாட்டின் முதன்மையான அருங்காட்சியகம் ஆகும். சிங்கப்பூரிய மற்றும் பிற தென் கிழக்காசியக் கலைஞர்களின் சுமார் 8,000 வேலைப்பாடுகள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. சிங்கப்பூர் கலை அருங்காட்சியகமானது ஒரு தென் கிழக்காசியப் பார்வையில் சமகால கலை மீது கவனக் குவியத்தைக் கொண்டுள்ளது.[486] "சிவப்புப் புள்ளி வடிவமைப்பு அருங்காட்சியகமானது" அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மிகச் சிறந்த கலை மற்றும் வடிவத்தைக் கொண்டாடுகிறது. இது 50 நாடுகளைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டுள்ளது. கலையுடன் அறிவியலை இணைக்கும் சுற்றுலாக் கண்காட்சிகளை தாமரை வடிவத்தையுடைய கலை அறிவியல் அருங்காட்சியகமானது கொண்டுள்ளது. ஆசிய நாகரிகங்களின் அருங்காட்சியகம், பெரனகர் அருங்காட்சியகம் மற்றும் த ஆர்ட்ஸ் ஹவுஸ் உள்ளிட்டவை பிற முக்கியமான அருங்காட்சியங்கள் ஆகும்.[487] த எசபிளானடு என்பது மேடைக் கலைகளுக்கான சிங்கப்பூரின் மிகப் பெரிய மையம் ஆகும். 2016 இல் மட்டும் 5,900 கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளுக்கு இது தளமாக விளங்கியது.[488][489]

சிங்கப்பூரின் இலக்கியம் அல்லது "சிங்க்லிட்" எனப்படுவது ஆங்கிலம், மலாய், மாண்டரின் மற்றும் தமிழ் ஆகிய நாட்டின் நான்கு அலுவல்பூர்வ மொழிகளில், முதன்மையாக சிங்கப்பூரர்களால் எழுதப்பட்ட இலக்கியங்கள் ஆகும். அதிகரித்து வந்த நிலையாக ஒன்று என்பதற்கு மாறாக நான்கு துணை இலக்கியங்களைக் (நான்கு மொழிகளுக்கும்) கொண்டுள்ளதாக சிங்கப்பூர் கருதப்படுகிறது. பல முக்கியமான நூல்களானவை மொழிபெயர்க்கப்பட்டு பதிப்புகளில் காட்டப்பட்டுள்ளன. எட்வின் தும்பூ மற்றும் கோக் பக் சாங் உள்ளிட்ட 1980 கள் மற்றும் 1990 களில் பதிப்பிக்கப்பட்ட இலக்கிய இதழான சிங்கா, மேலும் ரிதம்ஸ்: ஏ சிங்கப்பூரியன் மில்லேனியல் ஆந்தாலஜி ஆப் பொயட்ரி (2000) போன்ற பல மொழி தொகை நூல்களிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கடைசியாகக் குறிப்பிட்ட நூலில் அனைத்து கவிதைகளும் மூன்று முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தான் சிவே இயான் மற்றும் குவோ பாவோ குன் போன்ற ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிங்கப்பூர் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பங்களித்துள்ளனர்.[490][491]

பாப் மற்றும் ராக் இசை முதல் நாட்டுப்புற மற்றும் செவ்வியல் இசை வரை வேறுபட்ட ஓர் இசைப் பண்பாட்டை சிங்கப்பூர் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் பண்பாட்டு வாழ்வில் ஒரு முக்கியமான பங்கை மேற்கத்திய செவ்வியல் இசையானது ஆற்றுகிறது. 1979 ஆம் ஆண்டு "சிங்கப்பூர் ஒருங்கிசை இசைக் கச்சேரி" அமைப்பானது தொடங்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய இளைஞர் இசைக் கச்சேரி குழு[492] மற்றும் சமூக-அடிப்படையிலான பிராடெல் ஹைட்ஸ் ஒருங்கிசை இசைக் கச்சேரி குழு[493] உள்ளிட்டவை சிங்கப்பூரின் பிற குறிப்பிடத்தக்க மேற்கத்திய இசைக் கச்சேரி குழுக்களாகும். பல இசைக் கச்சேரி குழுக்களானவை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் இளையோர் கல்லூரிகளிலும் கூட காணப்படுகின்றன. சீன, மலாய, இந்திய மற்றும் ஐரோவாசிய என பல சமூகங்கள் தங்களது சொந்த தனித்துவமான இன இசைப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ளன. தங்களது பாரம்பரிய இசை வடிவங்கள் மற்றும் பல்வேறு நவீன இசை பாணிகளுடன் வேறுபட்ட வடிவங்களின் கலப்பானது இந்நாட்டில் இசையின் பன்முகத் தன்மைக்குக் காரணமாகிறது.[494] நாட்டின் உயிரோட்டமுடைய நகர்ப்புற இசைப் பண்பாடானது இப்பகுதியில் பன்னாட்டு இசை விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு மையமாக இந்நாட்டை ஆக்கியுள்ளது. இசுடெபனி சன், ஜேஜே லின், லியாங்க் வெர்ன் பூக், தௌபிக் பதிசா, மற்றும் டிக் லீ உள்ளிட்டோர் சிங்கப்பூரின் நன்றாக அறியப்பட்ட பாடகர்களில் சிலராவர். ஹோம் உள்ளிட்ட தேசிய நாள் கருத்துப் பாடல்களை இசையமைத்ததற்காக டிக் லீ பிரபலமானவராக உள்ளார்.[495][496]

சமையல் பாணி

Thumb
நிதி மாவட்டத்தில் உள்ள லா பா சாட் உணவுச் சந்தை மையம். சூரியனின் மறைவிற்குப் பிறகு ஒரு வீதியின் பக்கவாட்டில் வண்டி-கடைகளில் சாத்தே உணவு வகைகள் விற்கப்படுகின்றன.

இந்நாட்டுக்கு வருவதற்கு ஒரு காரணமாக சிங்கப்பூரின் வேறுபட்ட உணவு வகைகளானவை குறிப்பிடப்படுகின்றன. வசதி, வகை, தரம் மற்றும் விலையின் ஒரு கலவை காரணமாக இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.[497] உள்ளூர் உணவு வகைகளானவை பொதுவாக சீனர், மலாய் மற்றும் இந்தியர் போன்ற ஒரு குறிப்பிட்ட இனத்துடன் தொடர்புடையதாக உள்ளன. வேறுபட்ட வகைகளைக் கலப்பதன் மூலம் உணவு வகைகளின் பல்வகைமையானது மேற்கொண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக பெரனகர் உணவு வகைகள், சீன மற்றும் மலாய் உணவுகளின் ஒரு கலவை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். உணவுச் சந்தை மையங்களில் பாரம்பரியமாக மலாய் உணவுகளை விற்கும் சிறு கடைகள் தமிழ் உணவுகளையும் கூட விற்பதன் மூலம் பண்பாட்டுப் பரவலானது எடுத்துக்காட்டப்படுகிறது. ஐனானிய உணவான வென்சங் சிக்கனை அடிப்படையாகக் கொண்ட ஐனானிய சிக்கன் ரைஸானது சிங்கப்பூரின் தேசிய உணவாகக் கருதப்படுகிறது.[498][499]

இந்த நகரமானது ஹாவ்க்கர் மையங்கள் (வெட்டவெளி) எனப்படும் வண்டி-கடை மையங்கள், உணவுக் கோட்டங்கள் (குளிர்பதனம் செய்யப்பட்டவை), காபி கடைகள் (ஒரு 12 ஹாவ்க்கர் கடைகள் வரையிலும் வெட்டவெளியில் உள்ளது), காபேக்கள், துரித உணவுக் கடைகள், எளிமையான சமையலறை உணவகங்கள், வழக்கமான உணவகங்கள், புகழ் பெற்ற மற்றும் உயர் தர உணவகங்கள் வரை செழித்திருக்கும் உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன.[500] உணவை எடுத்துச் செல்லுதலையும், உணவை வழங்குதலையும் மட்டும் கொண்ட குலௌட் சேவைகள் மற்றும் உணவு விநியோகமானவையும் கூட அதிகரித்து வந்துள்ளன. சிங்கப்பூரின் குடியிருப்புவாசிகளில் 70% பேர் ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது உணவு விநியோகிக்கும் செயலிகளின் மூலம் உணவுகளை வாங்குகின்றனர்.[501][502] ஒன்றிணைந்த விடுமுறைப் போக்கிடங்களுக்குள் பல பன்னாட்டு புகழ் பெற்ற சமையல்காரர்களின் உணவகங்கள் உள்ளன.[503] முசுலிம்கள் பன்றி மாமிசத்தை உண்ணாதது மற்றும் இந்துக்கள் மாட்டு மாமிசத்தை உண்ணாதது போன்ற சமயம் சார் உணவு கட்டுப்பாடுகளும் இங்கு உள்ளன. ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சைவ உணவு உண்பவர்களும் கூட இங்கு உள்ளனர். சிங்கப்பூரின் உணவு வகைகளைக் கொண்டாடும் சிங்கப்பூர் உணவு விழாவானது ஆண்டு தோறும் சூலை மாதத்தில் நடத்தப்படுகிறது.[504]

1980 களுக்கு முன்னர் சாலையோர உணவகங்களானவை முதன்மையாக சீனா, இந்தியா மற்றும் மலேசியாவிலிருந்து வந்த புலம் பெயர்ந்தவர்களால் ஒரு நன்கு தெரிந்த ருசியை வேண்டிய பிற புலம் பெயர்ந்தவர்களுக்கு விற்கப்பட்டன. சாலையோர உணவானது வெட்டவெளி இருக்கைப் பகுதிகளுடன் கூடிய ஹாவ்க்கர் மையங்களுடன் நீண்ட காலமாக சிங்கப்பூரில் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த மையங்கள் ஒரு சில தசமம் முதல் நூற்றுக்கணக்கான வரையில் சிறு உணவுக் கடைகளைக் கொண்டிருக்கும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்புடைய உணவுகளில் இந்த ஒவ்வொரு சிறு கடையும் தனித்துவமிக்கதாக இருக்கும்.[500][505] சாலையோர உணவானது பல நாடுகளில் காணப்படும் அதே நேரத்தில், சிங்கப்பூரில் பாரம்பரிய சாலையோர உணவை வழங்கும் மையப்படுத்தப்பட்ட ஹாவ்க்கர் மையங்களின் வேறுபட்ட உணவுகள் மற்றும் அவற்றின் பிரபலத்தன்மையானது தனித்துவமானதாக உள்ளது.[506] 2018 இல் நகர மையம் மற்றும் மைய வீட்டு வசதிப் பகுதிகள் முழுவதும் 114 ஹாவ்க்கர் மையங்கள் பரவியிருந்தன. இவை தேசிய சுற்றுச்சூழல் முகமையால் பேணப்படுகின்றன. இந்த முகமையானது ஒவ்வொரு சிறு கடையையும் அதன் தூய்மையை அடிப்படையாகக் கொண்டு தர நிலைப்படுத்துகிறது. சிங்கப்பூரின் மிகப் பெரிய ஹாவ்க்கர் மையமானது சைனாடவுன் வளாகத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது. அது 200 க்கும் மேற்பட்ட சிறு கடைகளைக் கொண்டுள்ளது.[506] இந்த வளாகமானது உலகின் மிக மலிவான மிச்செலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவுக்குத் தாயமாகவும் கூட உள்ளது. அந்த உணவானது ஒரு தட்டு சோயா சுவைச்சாறு சிக்கன் ரைஸ் அல்லது நூடுல்ஸ் (விலை 2 சிங்கப்பூர் வெள்ளிகள் அல்லது ஐஅ$1.5 (107.3)) ஆகும். உலகில் முதன் முதலாக ஒரு மிச்சலின் நட்சத்திரத்தைப் பெற்ற இரு சாலையோர சிறு உணவுக் கடைகள் இந்நகரத்தில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஓர் ஒற்றை நட்சத்திரத்தைப் பெற்றுள்ளன.[507]

விளையாட்டும், பொழுதுபோக்கும்

Thumb
ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டுகளில் 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் பிரிவில் தங்கம் வென்றவரும், ஒலிம்பிக் சாதனை படைத்தவருமான யோசேப் ஸ்கூலிங்.[508]

தனியார் விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்கு மன்றங்களின் உருவாக்கமானது 19 ஆம் நூற்றாண்டின் குடியேற்ற கால சிங்கப்பூரில் தொடங்கியது. மட்டைப்பந்து மன்றம், சிங்கப்பூர் பொழுதுபோக்கு மன்றம், சிங்கப்பூர் நீச்சல் மன்றம், மற்றும் ஆலந்சே மன்றம் உள்ளிட்டவை இக்காலகட்டத்தின் போது தொடங்கப்பட்ட மன்றங்கள் ஆகும்.[509] பளு தூக்கும் வீரரான தன் கோவே லியாங் சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றவர் ஆவார். இவர் 1960 ஆம் ஆண்டின் ரோம் ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.[510] 2010 ஆம் ஆண்டில் முதல் முறையாக நடத்தப்பட்ட கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் போட்டியை சிங்கப்பூர் நடத்தியது. இதில் 204 நாடுகளைச் சேர்ந்த 3,600 விளையாட்டு வீரர்கள் 26 விளையாட்டுக்களில் போட்டியிட்டனர்.[511]

உள் அரங்க மற்றும் நீர் சார்ந்த விளையாட்டுக்களானவை சிங்கப்பூரில் மிக பிரபலமான விளையாட்டுகளில் சிலவாகும். 2016 ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் யோசேப் ஸ்கூலிங் சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றார். 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் ஒரு புதிய ஒலிம்பிக் சாதனை நேரமாக 50:39 வினாடிகளில் வென்றார்.[508] சிங்கப்பூர் மாலுமிகள் பன்னாட்டு அளவில் வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இவர்களது ஒரு சிறிய, ஒற்றைக் கையால் இயக்கப்படும் பாய்மர தோணி குழுவானது உலகின் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[512][513] இந்நாட்டின் அளவு சிறியதாக உள்ள போதிலும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் நீச்சல் போட்டிகளில் இந்நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நாட்டின் நீர் போலோவுக்கான ஆண்கள் அணியானது தென்கிழக்கு ஆசியப் போட்டிகளில் 2017 ஆம் ஆண்டு 27 ஆவது தடவையாக தங்கப் பதக்கத்தை வென்றது. இவ்விளையாட்டில் சிங்கப்பூரின் மிக நீண்ட தொடர் வெற்றியைத் தொடர்ந்தது.[514] 2024 ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மேக்ஸ் மேதர் சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை படகு செலுத்துதலில் வென்றார். தேசிய நாள் அன்று ஆண்கள் பார்முலா கைட் போட்டியில் (படகு) வெண்கலப் பதக்கத்தை வென்றார். 17 வயதில் சிங்கப்பூரின் மிக இளைய ஒலிம்பிக் பதக்கத்தை வென்றவராகவும் கூட இவர் திகழ்கிறார்.[515]

சிங்கப்பூரின் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணியானது 2008 ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.[516][517] உருசியாவில் 2010 ஆம் ஆண்டு நடந்த உலக டேபிள் டென்னிஸ் குழு போட்டிகளில் சீனாவை இவர்கள் தோற்கடித்து உலக வெற்றியாளர்களாக உருவாயினர். 19 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சீனாவின் சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 2021 இல் சிங்கப்பூரின் லோ கீன் யூ அந்த ஆண்டின் பி. டபுள்யூ. எப். உலகப் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப் பந்தாட்டத்தில் தங்கத்தை வென்ற போது ஓர் "உலக வெற்றியாளர்" என்ற நிலையை அடைந்தார்.[518] கோடைக்கால ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டப் போட்டிகளுடன் சேர்த்து மிக மதிப்புமிக்க இறகுப் பந்தாட்டப் போட்டிகளில் இப்போட்டியும் ஒன்றாகும்.[519]

சிங்கப்பூரின் கால்பந்தாட்ட லீக் போட்டியான சிங்கப்பூர் பிரீமியர் லீக்கானது 1996 ஆம் ஆண்டு "எஸ். லீக்" என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஓர் அயல்நாட்டு அணி உள்ளிட்ட எட்டு அணிகளை இது கொண்டுள்ளது.[520][521] அக்டோபர் 2009 இல் தொடங்கப்பட்ட தென்கிழக்காசிய கூடைப்பந்து லீக்கில் தொடக்க அணிகளில் ஒன்றாக சிங்கப்பூர் சிலிங்கர்சு திகழ்ந்தது.[522] சிங்கப்பூரின் குதிரைப் பந்தய மன்றமான சிங்கப்பூர் டர்ப் கிளப்பால் கிராஞ்சி குதிரைப் பந்தயமானது நடத்தப்படுகிறது.. ஒரு வாரத்திற்கு பல போட்டிகளை இது நடத்துகிறது. இதில் பன்னாட்டு பந்தயங்களும் அடங்கும். இப்பந்தயத்தில் குறிப்பாக சிங்கப்பூர் வான்வழி பன்னாட்டு கோப்பையைக் குறிப்பிடலாம்.[523]

பார்முலா 1 சீருந்து பந்தயங்களின் ஒரு சுற்றை சிங்கப்பூர் 2008 ஆம் ஆண்டில் மெரினா பே வீதி சுற்றுப்பாதையில் சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் என்ற பெயரில் நடத்தத் தொடங்கியது. முதன் முதலில் இரவில் நடத்தப்பட்ட எப் 1 சீருந்து பந்தயம் இதுவாகும்.[524] ஆசியாவின் முதல் எப் 1 வீதிப் பந்தயமும் இதுவாகும்.[525] வாடிக்கையாக நடத்தப்படும் எப் 1 பந்தயங்களிலேயே ஒரு தனித்துவமான நிகழ்வாக இது கருதப்படுகிறது.[526] ஆசியாவின் ஒரு முதன்மையான கலப்பு சண்டைக்கலைப் போட்டிகளில் ஒன்றான "ஒன் சாம்பியன்ஷிப்பானது" சிங்கப்பூரில் தொடங்கப்பட்டதாகும்.[527]

ஊடகம்

Thumb
தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் கலைகளின் வளர்ச்சியை "தொடர்புகள் மற்றும் தகவல் அமைச்சகமானது" மேற்பார்வையிடுகிறது.

சிங்கப்பூரின் பெரும்பாலான உள் நாட்டு ஊடகங்களை அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன.[528] சிங்கப்பூரில் இலவசமான தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பெரும்பாலானவற்றை மீடியாகார்ப் நடத்துகிறது. மீடியாகார்ப்பால் மொத்தமாக ஆறு தொலைக்காட்சி அலைவரிசைகள் வழங்கப்படுகின்றன.[529] உலகம் முழுவதும் உள்ள அலைவரிசைகளில் இருந்து இணைய நெறிமுறைத் தொலைக்காட்சிகளையும் கூட ஸ்டார்ஹப் டிவி மற்றும் சிங்டெல் டிவி ஆகியவை வழங்குகின்றன.[530][531] எஸ். பி. எச். மீடியா டிரஸ்ட் என்பது அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளையுடைய ஓர் அமைப்பாகும். சிங்கப்பூரின் பத்திரிக்கைத் துறையில் பெரும்பாலானவற்றை இது கட்டுப்படுத்துகிறது.[532]

பிரீடம் ஹவுஸ் போன்ற மனித உரிமை அமைப்புகளால் சிங்கப்பூரின் ஊடகத்துறையானது சில நேரங்களில் அதிகப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டும், சுதந்திரம் அற்றும் இருப்பதன் காரணமாக விமர்சிக்கப்படுகிறது.[528] பத்திரிகையாளர்கள் மத்தியில் சுய-தணிக்கையானது பொதுவானதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.[532] 2023 இல் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பால் பதிப்பிக்கப்பட்ட பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் சிங்கப்பூர் 129 ஆவது இடத்தைப் பெற்றது. முந்தைய ஆண்டில் பெற்ற 139 ஆவது இடத்திலிருந்து இது ஓர் அதிகரிப்பாகும்.[533] ஊடக வளர்ச்சி அமைப்பானது சிங்கப்பூரிய ஊடகங்களை ஒழுங்குபடுத்துகிறது. தவறான மற்றும் தீயவற்றுக்கு எதிராக தேர்வு மற்றும் பாதுகாப்பின் தேவையை சமநிலைப்படுத்துவதாக இந்த அமைப்பு குறிப்பிடுகிறது.[534] தொலைக்காட்சி அலைவரிசைகளுக்காக பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் தட்டுகளை தனிநபர்கள் உடைமையாகக் கொண்டிருப்பது என்பது இந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.[532]

சிங்கப்பூரில் இணைய சேவையானது அரசாங்க நிறுவனமான சிங்டெல்லால் வழங்கப்படுகிறது. பகுதியளவுக்கு அரசாங்கத்தால் உடைமையாகக் கொள்ளப்பட்டுள்ள ஸ்டார்ஹப் மற்றும் எம் 1 லிமிடெட், மேலும் சில பிற வணிக ரீதியான இணைய சேவை வழங்கிகளாலும் இச்சேவை வழங்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டின் இளவேனிற்கால நிலவரப்படி ஒரு நொடிக்கு 2 கிகாபிட் வரையிலான வேகங்களை வழங்கக் கூடிய நிலையான இணைய சேவை திட்டங்களை இந்நிறுவனங்கள் வழங்குகின்றன.[535] ஈக்கியுனிக்சு (332 பங்கெடுப்பாளர்கள்) மற்றும் சிங்கப்பூர் இணைய பரிமாற்றம் (70 பங்கெடுப்பாளர்கள்) ஆகிய இணையப் பரிமாற்ற புள்ளிகள் இந்நாட்டில் உள்ளன. இங்கு இணைய சேவை வழங்கிகளும், உள்ளடக்க வழங்கும் இணையங்களும் தங்களது இணையங்களுக்கு (தன்னாட்சி அமைப்புகள்) இடையில் இணைய நெரிசலை சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் பரிமாறிக் கொள்கின்றன.[536][537] 1980 களின் நடுப்பகுதி முதல் 1990 கள் வரை ஒருவருடன் மற்றொருவர் தொடர்பு கொள்ள சிங்கப்பூரர் "சிங்கப்பூர் டெலிவியூ" என்ற உள் நாட்டை அடிப்படையாகக் கொண்ட காணொளி செய்தி சேவையையும் கூட பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்தது.[538] இணையத்துடன் இத்தீவு நாட்டின் தொடக்க கால தொடர்பை குறிப்பிடுவதற்காக 1990 களில் கூர்மதியுடைய தீவு என்ற சொற்றொடர் உருவானது.[538][539]

2016 இல் சிங்கப்பூரில் 47 இலட்சம் இணையப் பயன்பாட்டாளர்கள் இருந்தனர் என மதிப்பிடப்பட்டது. மக்கள் தொகையில் இது 82.5% ஆகும்.[540] இணையத்தைப் பெருமளவுக்கு தணிக்கை செய்வதில் சிங்கப்பூர் அரசாங்கம் ஈடுபடுவதில்லை.[541] ஆனால், ஒரு நூறு இணைய தளங்களின் ஒரு பட்டியலை இது பேணி வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை ஆபாச இணையதளங்கள் ஆகும். "இணையத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் மற்றும் விரும்பத்தகாத உள்ளடக்கங்கள் மீதான சிங்கப்பூரிய சமூகத்தின் நிலையின் அடையாள ரீதியான ஓர் அறிக்கையாக" வீடுகளில் வழங்கப்படும் இணைய அனுமதியில் இருந்து இந்த இணையதளங்களை இது தடை செய்கிறது.[542][543] உலகின் மிக அதிக திறன்பேசி ஊடுருவல் வீதத்தை சிங்கப்பூர் கொண்டுள்ளது. டெலாய்ட்[544][545] மற்றும் கூகுள் கன்சுமர் பாரோமீட்டர் எனும் அமைப்பால் நடத்தப்பட்ட சுற்றாய்வுகளில் முறையே 89% மற்றும் 85% ஆக இந்த வீதங்கள் 2014 ஆம் ஆண்டில் இருந்தன.[546] 100 பேருக்கு 148 கைபேசி சந்தாதாரர்கள் என ஒட்டு மொத்தமான கைபேசி ஊடுருவல் வீதமானது உள்ளது.[547]

Remove ads

குறிப்புகள்

    1. Singapore has no official distinct capital city as it is a நகர அரசு.[1]
    2. In Singapore, proportions of ethnic groups publicly released are based only on the resident population, which comprises Singaporean citizens (SC) and permanent residents (PR).[3]
    3. In Singapore, proportions of religious denominations publicly released are based only on the resident population, which comprises Singaporean citizens (SC) and permanent residents (PR).[3]
    4. Singaporean citizen (SC) population is 3,640,000, Permanent resident (PR) population is 544,900, Non-citizen/resident population is 1,860,000.[5]
    5. See Date and time notation in Asia.
    6. The breakdown of British Empire losses included 38,496 United Kingdom, 18,490 Australian, 67,340 Indian and 14,382 local volunteer troops. Total Australian casualties included 1,789 killed and 1,306 wounded.[58]

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads