உயிர்சாராக் கூறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உயிரியல், சூழலியல் ஆகிய துறைகளில் உயிர்சாராக் கூறுகள் அல்லது உயிர்சாராக் காரணிகள் என்பன, உயிரினங்கள் மீதும், சூழல்மண்டலத்தின் செயற்பாடுகள் மீதும் தாக்கம் கொண்டுள்ள, சூழலின் உயிரற்ற வேதி மற்றும் இயற்பியப் பகுதிகளைக் குறிக்கும். உயிர்சாராக் காரணிகளும், அவற்றோடு தொடர்புடைய தோற்றப்பாடுகளும், முழு உயிரியலுக்கும் ஆதாரமாக அமைந்துள்ளன.

வளர்ச்சி, பேணுகை, இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பில் உயிரினங்கள் மீது தாக்கம் கொண்டிருக்கக்கூடிய இயற்பிய நிலைமைகள், உயிரற்ற வளங்கள் ஆகியவற்றை உயிர்சாராக் கூறுகள் உள்ளடக்குகின்றன. இங்கே வளங்கள் என்பன, ஒரு உயிரினத்துக்குத் தேவைப்படுவதும், இன்னொரு உயிரினத்தினால் உட்கொள்ளப்படுகின்றதும் அல்லது வேறு வகையில் பயன்பாட்டுக்கு இல்லாமல் ஆக்கப்படுகின்றதுமான, சூழலில் உள்ள பொருட்களைக் குறிக்கும்.[1][2]

Remove ads

எடுத்துக்காட்டுகள்

உயிரியலில், நீர், ஒளி, கதிர்வீச்சு, வெப்பநிலை, ஈரப்பதன், வளிமண்டலம், மண் போன்றவை உயிர்சாராக் காரணிகளுள் அடங்குகின்றன. பேரியற் காலநிலை இவை ஒவ்வொன்றின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது. கடல் சார்ந்த அல்லது நிலக்கீழ்ச் சூழல்களில் அழுத்தம், ஒலி அலைகள் போன்றவற்றையும் உயிர்சாராக் காரணிகளாகக் கொள்ளலாம்.[3]

இந்தக் காரணிகள் வெவ்வேறு உயிரினங்களை வெவ்வேறு வகையில் பாதிக்கின்றன. குறைவான ஒளி இருந்தாலோ அல்லது ஒளி முற்றாகவே இல்லாவிட்டாலோ, ஒளித்தொகுப்பு வட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் தாவரங்கள் வாடி இறந்துவிடுகின்றன. பல ஒரு கல நுண்ணுயிரிகளான ஆர்க்கியேக்களுக்கு மிக உயர்ந்த வெப்பநிலை அல்லது அழுத்தம் அல்லது வழமைக்கு மாறான கந்தகம் போன்ற தனிமங்களின் செறிவு தேவைப்படுகின்றது.

Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads