மண்

From Wikipedia, the free encyclopedia

மண்
Remove ads

மண்ணியிலாளர்[1] உலகின் மண்ணினை, அதன் தன்மைகளைக் கொண்டு 12 வகைகளாகப் [2]பிரிக்கின்றனர். இவ்வாறு அமைவதற்குக் காரணிகளாக மழை, வெப்பம், மற்றும் காற்றோட்டம் போன்றவைகள் இருக்கின்றன. இக்காரணிகளால் மண்ணின் தன்மை மற்றும் இயல்புகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

Thumb
மண்ணில் ஏற்படும் மாற்றங்கள்
Thumb
உலக மண்ணமைவுகள்

உலக மண்ணமைவுகள்

இந்திய மண்ணமைவுகள்

உலகின் பரப்பளவில், இந்தியா ஏழாவது இடத்திலிருக்கிறது. இந்திய நாட்டின் பரப்பளவு 32,87,782 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இப்பரப்பளவில் ஏறத்தாழ 45 சதவீதம் வேளாண்மைக்குப் பயனாகிறது. உலகின் பெரும்பாலான பயிர்களை, இந்தியாவில் பயிரிடும் வகையில் இந்திய மண்ணின் தன்மையுள்ளது. ஏறத்தாழ அனைத்து வகை உலக மண்களும், இந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன.

மழை

இந்தியாவின் மழைப் பொழிவுகள் மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இந்தியாவில், உலகிலேயே அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும் சிரபுஞ்சி (வருடத்திற்கு 1000 செ.மீ.வரை) இருக்கிறது. இராஜஸ்தான் பாலைவனத்தில் மிகக் குறைந்த அளவு மழைப்பொழிவு (வருடத்திற்கு 10 செ.மீ.) இருக்கிறது. இவ்விதம் மழைப்பொழிவுகள் வேறுபடுவதால், மண்ணின் வளங்களும் வேறுபடுகின்றன.

வெப்பம்

இந்திய நாட்டின் வெப்பம் பரவலாக 48 டிகிரி சென்டிகிரேடிலிருந்து, -40 டிகிரி சென்டிகிரேடு வரை நிலவுகிறது. இதனாலும், மண்ணின் தன்மையும், ஈரப்பசையும் வேறுபடுகின்றன.

Remove ads

இந்திய மண்ணின் வகைகள்

இந்திய மண்ணை, அதன் வளத்தன்மையின் அடிப்படையில் 8 வகைகளாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;-

  1. செம்மண்
  2. மணற்பாங்கான மண்
  3. மணற்குறு மண்
  4. குறு மண்
  5. களி மண்
  6. கரிசல்மண்
  7. செம்புறை மண்
  8. வண்டல் மண் அல்லது அடை மண்.

தமிழக மண்ணமைவுகள்

சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர். மண்ணின் இயல்புகளைக் கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்தியிருந்தனர்.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 130 இலட்சம் எக்டேர் பரப்பளவு நிலமுள்ளது. இதில் ஏறத்தாழ 63 இலட்சம் வேளாண்மைக்கு ஏற்ற மண்வளத்தினைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 100 செ.மீ. மழை பொழிகிறது. இம்மழையளவில் ஐந்தில் ஒரு பங்கு நீர், மண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது.

உலக வேளாண்மைக்குரிய அனைத்து மண்வகைகளும், தமிழ்நாட்டில் உள்ளதென்று வேளாண் அறிஞர் உரைக்கின்றனர். தமிழகத்தின் மண்வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. செம்மண்
  2. செம்புறை மண்
  3. கரிசல் மண்
  4. வண்டல் மண்
Remove ads

மண்ணின் வளம்

பாறைகளிலிருந்து தோன்றிய மண்ணானது, பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது.[4] மண்பரிசோதனை மூலம் மண் வளத்தினைக் கண்டறியலாம். தாவரத்திற்கு மண்ணிலிருந்து, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம்,இரும்பு, மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம், குளோரின், மாலிப்டினம் போன்றவைகள் சத்துக்களாகக் கிடைக்கிறது.[5]

மண்ணின் குறைகள்

மண்ணின் களர்த்தன்மை மற்றும் உவர்த்தன்மை, மண்ணின் குறைகளாகும். அவற்றின் இயல்புகளை இயற்கை உரமிட்டு, அம்மண்ணின் வளத்தை மாற்றலாம். இரசாயன உரங்களை இடுவதினால், நல்லத் தரமான மண்ணின் இயல்பும் சீர் கெடுகிறது.

மண்ணடி உயிரிகள்

  1. நைட்ரசன் நிலைநிறுத்தும் பாக்டீரியாக்கள்
  2. மண்புழு
  3. கறையான்

இதனையும் காண்க

  1. மண்ணரிப்பு
  2. மண் மாசடைதல்
  3. சூழ்நிலை சீர்கேடு
  4. இயற்கை உரம்
  5. கட்டிடப் பொருள்
  6. மணல்
  7. வேளாண்மை அறிவியல்
  8. வேளாண் இயற்பியல்
  9. புவிப்புறவியல்
  10. மண் விலங்கியல்

மேற்கோள்கள்

உயவுத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads