உருசியாவின் சாராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உருசியாவின் சார் ஆட்சி (Tsardom of Russia, Русское царство[2][3] அல்லது கிரேக்க மொழி வடிவத்தில், Российское царство[4][5]), அல்லது மசுகோவி சார் ஆட்சி (Tsardom of Muscovy) உருசியாவை 1547இல் இவான் IV சார் என்ற பட்டப்பெயருடன் முடிசூடியது முதல் 1721இல் ரஷ்யாவின் முதலாம் பீட்டர் உருசியப் பேரரசை நிறுவியது வரை ஆண்ட வல்லாட்சி ஆகும்.
1550 முதல் 1700 வரை உருசியாஆண்டுக்கு 35,000 கிமீ2 விரிவடைந்து வந்தது.[6] இந்தக் காலத்தில் ரூரிக் அரச மரபிலிருந்து உரோமனாவ் அரச மரபிற்கான மாற்றங்கள், போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்துடன் நீண்ட போலந்து-உருசியப் போர், உருசியாவின் சைபீரியக் கைப்பற்றுகை, 1682இல் அரியணை ஏறிய முதலாம் பீட்டரின் ஆட்சி ஆகியன குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். சுவீடன், போலந்து மீதான வெற்றியைத் தொடர்ந்து முதலாம் பீட்டர் உருசியாவை முதன்மையான ஐரோப்பிய அதிகார மையமாக மாற்றினார். பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்ட பீட்டர் 1721இல் உருசியப் பேரரசை நிறுவினார்.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads