உருசிய இடைக்கால அரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உருசிய இடைக்கால அரசு (Russian Provisional Government, உருசியம்: Временное правительство России, translit. Vremennoye pravitel'stvo Rossii) சார் மன்னர் நிக்கலாசு II (மார்ச்சு 15, 1917) தமது முடியாட்சியைத் துறந்த பின்னர் உருவான குடியரசின் இடைக்கால அரசு ஆகும். [1][2] இந்த அரசு உருசியப் பேரரசின் அமைச்சரவைக்கு மாற்றாக இயங்கியது. உருசிய அரசமைப்பு மன்றத்திற்கான தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதும் தேர்தல் முறைமைகளை சீரமைப்பதும் இதன் நோக்கங்களாக இருந்தன. அரசு இரண்டு அங்கமுடையதாக இருந்தது. முதலாவது அங்கமாக இளவரசர் ஜார்ஜி இலோவ் தலைமையேற்ற அரசக் கூட்டணியும் மற்றொரு அங்கமாக அலெக்சாண்டர் கெரென்சுகி தலைமையேற்ற சோசலிச கூட்டணியும் இருந்தன. உலகப்போர் நடந்துகொண்டிருந்ததாலும் பல பிரிவினை இயக்கங்களும் பிற அரசியல் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இந்த அரசின் நோக்கமான அரசமைப்பு தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருந்தது.
செப்டம்பர் 14 அன்று நாட்டின் சட்டவாக்க மன்றமான தேசிய டூமா அலுவல்முறையாக கலைக்கப்பட்டது. இதற்கு மாற்றாக உருசிய இயக்குநரகம் ஏற்படுத்தப்பட்டது. சார் மன்னராட்சி கவிழ்ந்த நிலையிலேயே இந்தத் தகுதி பெற்றாலும் நாடும் முறைப்படியாக உருசியக் குடியரசு (உருசியம்: Российская республика, translit. Rossiyskaya respublika) அறிவிக்கப்பட்டது. இடைக்கால அரசு எட்டு மாதங்களே இயங்கியது. அக்டோபர் புரட்சி (அல்லது நவம்பர் 1917)க்குப் பின்னர், போல்செவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இடைக்கால அரசும் முடிவிற்கு வந்தது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads