உரோமானி மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
உரோமானி மக்கள் (Romani people) அல்லது ரோமா மக்கள் என்பவர்கள் தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும்[24]. இவர்கள் பொதுவாக ஜிப்சிகள் என அழைக்கப்படுகின்றனர். ரோமானி மக்கள் உலகெங்கும் பரந்து வாழும் ஓர் இனக்குழுவாகும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவர்கள் செறிந்து வாழ்கின்றனர்[25].
Remove ads
வரலாறு
மரபியல், மற்றும் மொழியியல் ஆய்வுகளின் படி, ரோமா மக்கள் இந்திய உபகண்டத்தில் இருந்து 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் வடமேற்கே இடம்பெயர ஆரம்பித்தவர்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் குறிப்பாக இந்தியத் தலித் மக்களின் சந்ததிகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[26] ஐரோப்பாவில் உள்ள ரோமா மக்களின் மூதாதைகள் இன்றைய பஞ்சாப் பிரதேசத்தில் இருந்து கிபி 1001 இற்கும் 1026 இடைப்பட்ட காலத்தில் தமது சாதியினரின் நிலைகளை உயர்த்தும் பொருட்டு இடம்பெற்ற போர்களினால் மேற்கு நோக்கி முதன் முதலில் நகர்ந்தனர் என் வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். பின்னர் இன்றைய பாக்கித்தான் போன்ற பிரதேசங்களில் இந்து இராச்சியங்களின் வீழ்ச்சியை அடுத்து இடம்பெயர நேர்ந்தது. இந்திய உபகண்டத்தில் இசுலாம் பரவிய காலத்தில் அகதிகளாக வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவுக்கு இவர்கள் இடம்பெயர்ந்தனர்.[27]
Remove ads
குறிப்புகள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads