உலகத் தமிழ்க் களஞ்சியம்
தமிழ், தமிழர், தமிழ்நாடு பறிய ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உலகத் தமிழ்க் களஞ்சியம் என்பது தமிழில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும். இக்கலைக்களஞ்சியம் மூன்று தொகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இத்தொகுதிகள் ஏறத்தாழ 2,300 பக்கங்களைக் கொண்டுள்ளது.
பதிப்பு
இந்தக் கலைக்களஞ்சியமானது மலேசியாவின், கோலாலம்பூர்ரில் உள்ள உமா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் களஞ்சியத்தின் சீராளர்களாக நலங்கிள்ளி, க. ப. அறவாணன், இ. ஜோ. சுந்தர் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
உள்ளடக்கம்
இந்தக் களஞ்சியத்தில் தமிழையும் தமிழர்களையும் முதன்மைப்படுத்தும் விதத்தில் தமிழ்ப் பண்பாடு, கலைகள், இலக்கியங்கள், ஆளுமைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அகராதிகள், அமைப்புகள், இலக்கணம், தாவரவியல் என்று 39 பிரிவுகளில் 16,000-க்கும் மேற்பட்ட செய்திகள் உள்ளன. இதில் 900 இலக்கணக் குறிப்புகளும், 700 தாவரங்களைப் பற்றிய குறிப்புகளும், தமிழகத்தில் ஓடும் 100 ஆறுகளைப் பற்றிய விவரங்களும், 800 இதழ்களைப் பற்றி குறிப்புகளும், காளிதாஸ் தொடங்கி 2016 வரையில் வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலும், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பற்றியும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களைப் பற்றிய குறிப்புகளும், 108 திவ்விய தேசங்கள், 274 பாடல்பெற்ற சைவத் தலங்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் 200 சிற்பங்களைப் பற்றிய தகவல்கள் இக்களஞ்சியத்தில் உள்ளன.[1]
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads