உலக சதுரங்க வாகை 2018

From Wikipedia, the free encyclopedia

உலக சதுரங்க வாகை 2018
Remove ads

உலக சதுரங்க வாகை 2018 (World Chess Championship 2018) என்பது உலக சதுரங்க வாகையாளரைத் தேர்ந்தெடுக்க, 2013 இல் இருந்து வாகையாளராக இருக்கும் மாக்னசு கார்ல்சனுக்கும், பபியானோ கருவானாவிற்கும் இடையே நடைபெற்ற சுற்றுப் போட்டியாகும். பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு, அதன் வணிகக் கூட்டு பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளினால் நடத்தப்பட்ட 12-ஆட்ட சுற்று இலண்டனில் 2018 நவம்பர் 9 முதல் நவம்பர் 28 வரை இடம்பெற்றது.[1][2]

விரைவான உண்மைகள் 6 (3), மதிப்பெண்கள் ...

மரபுசார் நேரக்கட்டுப்பாட்டுடனான ஆட்டம் 12 அடுத்தடுத்த சமநிலைகளுடன் முடிவடைந்தது. உலக வாகைப் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களும் சமநிலையில் முடிவடைந்தது இதுவே முதல் தடவையாகும்.[3] நவம்பர் 28 இல், சமன்முறியாக விரைவு சதுரங்க ஆட்ட முறை ஆடப்பட்டது. கார்ல்சன் அடுத்தடுத்த மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நான்காவது தடவையாக உலக வாகையாளரானார்.

Remove ads

வேட்பாளர் சுற்றின் முடிவுகள்

நடப்பு வாகையாளர் கார்ல்சனுடன் போட்டியிடுவதற்காக நடத்தப்பட்ட 2018 வேட்பாளர் சுற்றில் கருவானா வெற்றி பெற்றார். இப்போட்டிகள் பெர்லினில் 2018 மார்ச் 10 முதல் 18 வரை எட்டு போட்டியாளர்களுடன் இரட்டை தொடர் சுழல்முறைப் போட்டி முறையில் நடத்தப்பட்டன.[4]

இதன் இறுதி முடிவுகள் வருமாறு:[5][6]

மேலதிகத் தகவல்கள் தரநிலை, ஆட்ட வீரர் ...
மூலம்: ஃபிடே வேட்பாளர்கள் சுற்று 2018
வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள், 2) சம வீரர்களுக்கிடையே நேருக்கு நேர் மதிப்பெண், 3) மொத்த வெற்றிகளின் எண்ணிக்கை, 4) சொன்போர்ன்–பெர்கர் மதிப்பெண், 5) சமன்முறி ஆட்டங்கள்.[5]

குறிப்பு: வெள்ளைப் பின்னணியில் உள்ள கட்டத்தில் உள்ள எண்கள், அந்தந்த எதிராளியை வெள்ளைக் காய்களுடன் விளையாடும் முடிவைக் குறிக்கிறது (கருப்பு பின்னணியில் இருந்தால் கருப்பு துண்டுகள்).

Remove ads

2018 வாகையாளர் இறுதி முடிவுகள்

உலக வாகையாளருக்கான போட்டி மாக்னசு கார்ல்சன், பபியானோ கருவானா ஆகியோருக்கிடையில் இலண்டனில் 2018 நவம்பர் 8 முதல் 28 வரை நடைபெற்றது.

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, ஆட்டங்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads