பாரதிதாசன் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Remove ads

பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் கவிஞர் பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக புதியதோர் உலகம் செய்வோம் என்னும் பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2006–07 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...

இப்பல்கலையின் மைய வளாகம் முதலில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்கலைப்பேரூர், திருச்சியில் தொடங்கப்பட்டது. பின்னர் இதன் தெற்கு வளாகம் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் அதனைத் தொடர்ந்து இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கும் முறையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் நகர்ப்புறத்தில் காஜாமலை என்னும் பகுதியில் அமையப்பட்டுள்ளது. இது முன்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருச்சி முதுநிலை மையமாக இயங்கிவந்தது.

இப்பல்கலைக்கழகத்திற்கு பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் "ஏ" கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

Remove ads

கட்டமைப்பு

இதன் நிர்வாகம் சார்ந்தப் பகுதிகளான துணைவேந்தர் செயலகம், பதிவாளர் அலுவலகம், நிதி மற்றும் தேர்வு அலுவலகம், பெரும்பான்மையான துறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் பல்கலையின் மைய வளாகமான பல்கலைப்பேரூரிலேயே அமையப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், அடிப்படை மருத்துவயியல், புவியியல், சமுகவியல், கடலியல் மற்றும் மொழியியற் பள்ளிகளும், மேலும் மைய நூலகம், விடுதி, தகவலியற் மையம், பணியாளர் மனைகள், நலவிடுதி, உணவகம் எனப் பல அமையப்பெற்றுள்ளன.

இதன் நகர வளாகமான காஜாமலையில், பொருளியல்,சமூகப்பணி, கணினியல் மற்றும் தொலையுணர்தல் பள்ளிகளும், கல்விப்பணியாளர் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. இதனைத் தவிர்த்து பாரதிதாசன் தொலைக்கல்வி மையம் பல்கலைப்பேரூரிலும், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருவெரும்பூரிலும் இயங்கி வருகின்றன.

Remove ads

இயக்கம்

இப்பல்கலைக்கழகம் 4 கல்விமுறைத் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டு, 16 பள்ளிகள், 34 துறைகள், 11 ஆய்வு மையங்கள், 195 கல்விப்பணியாளர்கள், 2300 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கிவருகிறது. இப்பலகலையின் துறைகள்/பள்ளிகளில் 177 திட்டங்களுக்குட்பட்ட 40 முதுநிலைத் திட்டமும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனத்தில் திருச்சியை ஒட்டிய 8 மாவட்டங்களில் இருக்கும் 123 கல்லூரிகளில் ஆட்சிச் செலுத்திவருகிறது. அதில் 123 கலை மற்றும் அறிவியற் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரிகளும் அடங்கும். இவற்றுள் 8 அரசுக் கல்லூரியும் 11 அரசு உதவிக்கல்லூரிகளும் தன்னாட்சி நிறுவனங்களாக செயற்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து 8 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளும் நடத்திவருகிறது.

Remove ads

பல்கலைக்கழகத்தின் கீழ் கல்லூரிகள் உள்ள மாவட்டங்கள்

தன்னாட்சிக் கல்லூரிகள்

மேலதிகத் தகவல்கள் வ.எண், கல்லூரியின் பெயர் ...
Remove ads

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

  1. பாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி
  2. தேசியக் கல்லூரி, திருச்சி
  3. அரசினர் கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, துவாக்குடி (முன்னர் நாவலர் நெடுஞ்செழியன் அரசினர் கலைக்கல்லூரி)
  4. அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, முசிறி
  5. அய்மான் மகளிர் கல்லூரி
  6. மாடர்ன் கலை அறிவியல் கல்லூரி
  7. நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி
  8. பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  9. புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி (இது சென்னைப் பல்கலைக்கழகத்தினின்றும் பழமையானதாகும்)
  10. ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  11. உருமு தனலட்சுமி கல்லூரி,காட்டூர்
  12. கலைக்காவிரி கவின்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  13. காவேரி மகளிர் கல்லூரி
  14. கிருத்துராஜ் கல்லூரி
  15. சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி
  16. செட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  17. புனித சிலுவை கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  18. தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி
  19. ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி
  20. தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி
  21. எம். ஐ. இ. டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பெரம்பலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டம்

கரூர் மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்

  • ஆக்ஸிலியம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  • பாரதிதாசன் மாதிாி கலைக் கல்லூாி (அரசுகல்லூாி),அறந்தாங்கி
  • நைனாமுகமது மகளிா் கலை அறிவியல் கல்வியல் கல்லூாி,ராஜேந்திரபுரம்எருக்கலக்கோட்டை
  • அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடி
  • அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை
  • அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, அம்மாபட்டினம்
  • அற்புதா கலை அறிவியல் கல்லூரி
  • ஆக்சிலியம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  • கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலசிவபுரி
  • மேன்மைமிகு மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை
  • ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி
  • மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரி, இலுப்பூர்.
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலங்குடி

தஞ்சாவூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம்

  • அரசினர் கலை அறிவியல் கல்லூரி, நன்னிலம்
  • அன்னை பாத்திமா மகளிர் கல்லூரி, திருத்துறைப்பூண்டி
  • எம்.ஆர்.ஜி அரசினர் கலைக் கல்லூரி, மன்னார்குடி
  • எஸ். கே. கலை அறிவியல் கல்லூரி, மன்னார்குடி
  • சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரி, மஞ்சக்குடி
  • சுல்தானா அப்துல்லா ராவுத்தர் மகளிர் கல்லூரி, கூத்தநல்லூர்
  • செங்கமல தாயார் கலை அறிவியல் கல்லூரி, சுந்தரகோட்டை
  • டி.டி. நரசிம்மன் - சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரி
  • திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி, திருவாரூர்
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி
  • ரபியம்மாள் அகமது மைதீன் மகளிர் கல்லூரி

நாகப்பட்டிணம் மாவட்டம்

  1. டி.ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நாகப்பட்டினம்
  2. A.D.M. மகளிர் கல்லூரி, நாகப்பட்டினம்
  3. A.R.C. விஸ்வநாதன் கல்லூரி, மயிலாடுதுறை
  4. ஏ. வி. சி. கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம்
  5. பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீர்காழி
  6. தர்மபுரம் ஆதினம் கலைக் கல்லூரி, நாகப்பட்டினம்
  7. இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகப்பட்டினம்
  8. பூம்புகார் கல்லூரி, நாகப்பட்டினம்
  9. விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம்

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads