உளுந்து

From Wikipedia, the free encyclopedia

உளுந்து
Remove ads

உளுந்து அல்லது உழுந்து (Urad bean, Vigna mungo) ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்பு, உளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே[மேற்கோள் தேவை] இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம்(அப்பளம்), முறுக்கு என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இவை கறுப்பு உளுந்து மற்றும் வெள்ளை உளுந்து என இருவகைப்படும்.

விரைவான உண்மைகள் உளுந்து, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

நோய்க்கட்டுபாட்டு முறைகள்

உளுந்து பயிரில் தோன்றும் மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலைப் பராமரிப்பு நோய்களைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழித்து விடவேண்டும். மஞ்சள் பசைப்பொறியை வயல்களில் வைத்து இந்நோயைப் பரப்பும் வெள்ளை ஈ மற்றும் அசுவினி பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கவும், கட்டுப்படுத்தவும் மீதைல்டெமட்டான் 25 இ.சி 200 மிலி ஏக்கர் அல்லது டைமெத்தோயேட்டு 30 எஸ்.சி 200 மிலி ஏக்கர் அல்லது தயோமீத்தாக்சம் 75டபுள்யுடிஜி 40 கிராம் இமிடாக்குளோப்ரிட்டு 17.8 எஸ்.எல்-40 மிலி ஏக்கர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 15 நாட்கள் இடைவேளையில் இருமுறை தெளிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது[1].

Remove ads

சங்க இலக்கியத்தில்

சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.[2][3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads