உழவாரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உழவாரக் குருவி அல்லது உழவாரன் (Swift) பறவையானது அபோடிஎட் (Apodidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பறவை பார்ப்பதற்கு தகைவிலான் குருவி போன்று காணப்படும். ஆனால் இவை இரணுட்மு மிகுந்த வேறுபாடுடையவை. உழவாரக் குருவிகளின் இறக்கைகள் முக நீளமானவை. கால் விரல்கள் முன்னோக்கி வளைந்திருக்க காணலாம். பார்ப்பதற்குக் கொஞ்சம் ரீங்காரப்பறவை போன்று காணப்பட்டாலும் ஹெமபிரிசிடி (Hemiprocnidae) என்ற ஒரு தனிக்குடும்பத்தச் சேர்ந்தது.
இப்பறவை தனது உணவைப் பிடிக்கச் செல்லும்போது கீழ்நோக்கி விமானம் போல் சென்று சிறு பூச்சிகளை இலாவகமாகப் பிடித்து உண்ணுகிறது. குடும்பப் பெயர், அபோடிடே, ἄπους (ápous) கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இது "கால் இல்லாத" என்று பொருள்படும், இது வான்வழி பறவைகளில் மிகவும் சிறிய, பலவீனமான கால்களைக் குறிக்கிறது.[1][2] இந்தப் பறவை இனங்களில் சிலவகைகள் விமானத்தைப்போல் வேகமாகப் பறக்கும் தன்மை கொண்டது ஆகும்.
Remove ads
விளக்கம்
உழவாரன்கள் எப்போதும் விரைவாக இறக்கையடித்துச் சுற்றிச் சுற்றிப் பறந்தபடி உருப்பவை. விரைவாக பறக்கக்கூடிய இவை சில மணி நேரங்களில் பல நூறு கிலோ மீட்டர்களை கடந்து சென்றுவிடக்கூடியவை. வெள்ளை-தொண்டை ஊசி வால் உழவாரன் (Hirundapus caudacutus) போன்ற பெரிய இனங்கள் மணிக்கு 169 கி.மீ. (105 மைல்) வேகத்தில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது.[3] சாதா உழவாரன் கூட அதிகபட்சமாக வினாடிக்கு 31 மீட்டர் (112 km/h; 70 mph) வேகத்தில் பயணிக்க முடியும். ஒரு ஆண்டில் சாதா உழவாரன் குறைந்தது 200,000 கி.மீ. தொலைவு பயணிக்கும்.[4] மேலும் வாழ்நாளில் சுமார் இரண்டு மில்லியன் கிலோமீட்டர்களை கடக்கும்; அது சந்திரனுக்குப் பறந்து சென்று ஐந்து முறை திரும்பிச் செல்லுவதற்கு இணையானது.[5]
உழவாரன்களானது கோபுரங்கள், பெரிய கோயில்கள், மலைக்குகைகள், பறை இடுக்குகள் ஆகிய இடங்களில் பெரும் கூட்டமாக தொங்கும் கூடுகளை உமிழ் நீரைப் பயன்படுத்தி அமைத்துக் கொண்டு வாழ்கின்றன. பல்லாயிரக் கணக்கில் வௌவால்கள் வாழும் குகைளில் மாலையில் அவை குகைகளில் இருந்து வெளியேறியவுடன் உழவாரன்கள் அங்கு சென்று தங்குகின்றன.
Remove ads
மேற்கோள்
புத்தக விபரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads