உஸ்பெக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உஸ்பெக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (The Islamic Movement of Uzbekistan - IMU) உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஓர் ஆயுதம் தாங்கிய தீவிரவாத இஸ்லாமியக் குழு ஆகும். இக்குழுவானது 1991 ஆம் ஆண்டு தாஹிர் யுல்தஷேவ் (Tahir Yuldashev) மற்றும் ஜூமா நமங்கானி (uma Namangani) ஆகிய இருவரால் தொடங்கப்பட்டதாகும்.[1] இவ்விருவரும் பெர்கானாப் பள்ளத்தாக்கைச் சார்ந்த உஸ்பெக்கிஸ்தானியர்கள் ஆவார். இக்குழுவின் முக்கிய நோக்கம் உஸ்பெக்கித்தானிய அரசை அகற்றிவிட்டு ஷரியா சட்டத்துடன் கூடிய இஸ்லாமிய அரசை அமைக்க வேண்டும் என்பதாகும்.

இக்குழுவானது உஸ்பெக்கிஸ்தானுக்கு வெளியே தஜிகிஸ்தான் மற்றும் வடக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கிவருகிறது. இவ்வமைப்பு கிர்கிஸ்தான் மீது 1999 மற்றும் 2000 ஆண்டுகளில் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிராக போரில் இவ்வியக்கம் பெரும்பான்மையளவு அழிக்கப்பட்டது. இவ்வியக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஜூமா நமங்கானி கொல்லப்பட்டார். மற்றொருவரான தாஹிர் யுல்தஷேவ் பாக்கிஸ்தானின் வாஸிரிஸ்தான் பகுதிக்கு தப்பி ஓடி விட்டார். அதன் பின்னர் இவ்வியக்கத்தின் பயிற்சி மையங்கள் வாஸிரிஸ்தான் பகுதியில் தொடங்கப்பட்டு பாக்கிஸ்தான் அரசை அகற்றப் போராடும் தீவிரவாதக் குழுக்களோடு இணைந்துவிட்டது.[2] மேலும் இக்குழுவிற்கு அல் காயிதாத் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளது.[3] இந்த அமைப்பை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகியவை தடை செய்துள்ளன.[4]

Remove ads

தாக்குதல்

2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தியதி ஆப்கானிஸ்தானின் அமைதி மாகாணமான பாஞ்சீர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு இவ்வியக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.[5] இத்தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் இவ்வியக்கம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டுத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தியது.[6]

Remove ads

தொடர்புடைய கட்டுரைகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads