ஊட்டி ஏரி

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும் From Wikipedia, the free encyclopedia

ஊட்டி ஏரிmap
Remove ads

ஊட்டி ஏரி (Ooty lake) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[3] இந்த ஏரியில் படகு இல்லம் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரி உதகமண்டலத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாகும்.

விரைவான உண்மைகள் ஊட்டி ஏரி, அமைவிடம் ...
Thumb
Thumb
Remove ads

வரலாறு

ஊட்டி ஏரி ஜான் சல்லிவன் என்பவரால் 1824 இல் வெட்டப்பட்ட ஒரு செயற்கை ஏரி ஆகும். மலை ஓடைகள் பாய்ந்து ஊட்டி பள்ளத்தாக்கை அடையும் பாதையில் நீரைத் தேக்கி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் கரை உடைந்து மூன்று சந்தர்ப்பங்களில் நீரின்றிப் போயுள்ளது. ஏரி முதலில் மீன்பிடிக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. என்றாலும் முதன்மையாக ஏரி முழுவதும் படகு பயணம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரியின் அசலான பரப்பளவு குறைந்து போயுள்ளது, காரணம் இந்த ஏரிக்கு உட்பட்ட பகுதியில் தற்போதைய பேருந்து நிலையம், குதிரைப் பந்தய மைதானம், ஏரி பூங்கா ஆகியவற்றை அமைத்து ஏரியின் பரப்பளவு சுருக்கப்பட்டுவிட்டது. ஏரி 1973 இல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வசம் வந்தது.[3]

Remove ads

அம்சங்கள்

இந்த ஏரியைச் சுற்றி யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்தும், இதன் கரையில் தொடர்வண்டிப் பாதையும் செல்கிறது.[2] கோடைக்காலமான மே மாதத்தில் படகுப் போட்டி போன்றவை இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன.[4][5]

Thumb

படகு இல்லம்

ஏரியை ஒட்டி படகு இல்லம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் கட்டப்பட்டது.[2] ஏரியில் படகுகளில் செல்ல பயணிகளுக்கு மிகுந்த ஆர்வமுள்ளது. படகு துறையில் துடுப்பு படகுகள், மிதி படகுகள், மோட்டார் படகுகள் போன்றவை உள்ளன.[6] இங்கு ஒரு பூங்காவும்,[6] அதில் ஒரு சிறிய தொடர்வண்டியும் சுற்றிவருகிறது.[3] பிற குறிப்படத்தக்க அம்சங்களாக சுற்றுலாத்துறையால் இங்கு ஒரு உணவகம் நடத்தப்படுகிறது. மேலும் படகு இல்லம் முன்பு குதிரைவண்டி சவாரி வசதியும் உள்ளது.[2]

பின்னடைவுகள்

ஏரியில் பெரிய பிரச்சனையாக உள்ளது ஆகாயத்தாமரையின் பெருக்கம்தான். பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து இந்தக் களைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.[7] தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஒரு ஆய்வின்படி ஊட்டி ஏரி மாநிலத்தின் மிகவும் மாசுபட்ட ஏரிகளில் ஒன்றாக உள்ளது. மனிதர்கள் குடிக்கவோ அல்லது குளிக்கவோ தகுதியற்றதாக உள்ளதாக உள்ளது.[8]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads