ஊதுபத்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊதுபத்தி அல்லது அகர்பத்தி என்பது மணம் வீசும் புகையைத் தந்து எரியக்கூடிய ஒரு பொருள். பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும். எரிக்கும் பொது நறுமணப்புகை வெளிப்படுவதற்காக செய்யப்படுவதாகும்.

Remove ads
சமயங்களில் பயன்பாடு
கிறிஸ்தவம்

வாசனைப் பொருட்கள் பல கிறிஸ்தவ சபைகளில் வழிபாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முக்கியமாக உரோமன் கத்தோலிக்கம், கிழக்க்கு மரபுவழித் திருச்சபை அங்கிலிக்கன், லூதரன் திருச்சபைகளில் இப்பயன்பாட்டைக் காணலாம். வாசனை பொருட்கள் நற்கருணை வழிபாட்டின் போதும் வெஸ்பர்ஸ் வழிபாட்டின் போதும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மூடிய சாடியுள் வைத்து வாசனைப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சாடியுள் அனல் காணப்படும் அதனுள் தூள் படுத்திய வாசனைப் பெருளை இடுவதன் மூலம் நறுமணம் பெறப்படுக்கிறது. பின்னர் இச்சாடி பலிப்பீடம் நோக்கியோ வாசனைக் காட்டப்படும் நபர் நோக்கியோ மெதுவாக அசைக்கப்படும்.நேரடியாக எரிக்கப்படும் வாசனைப் பொருட்களை தவிர உயிர்த்த ஞாயிறு மெழுகுவர்த்திகளிலிலும் வாசனைப் பெருட்கள் கலக்கப்பட்டிருக்க்கும். கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சப்பைகளில் வாசனைப் பொருட்களால் எழும் புகை விசுவாசிகளில் செபமாக கொள்ளப்படுகிறது.[1] விவிலியத்தின் கடைசி நூலான வெளிப்படுத்தல் நூலில் புனிதர்களின் செபங்கள் பாரிய பொன் வாசனைப் பொருட்கள் எரிக்கப்படும் பாரிய பொன் பாத்திரத்துக்கு ஒப்பிடப்படுகிறது(வெளி 5:8,வெளி 8:3).
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads