ஓமான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓமான் அல்லது ஒமான் சுல்தானகம் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ளது. வடமேற்கில் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழகேயும் அரபிக் கடல் அமைந்துள்ளது வடகிழக்கில் ஓமான் குடா அமைந்துள்ளது. ஓமான் தனது பெருநிலப்பரப்புக்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநிலப்பரப்புடன் தொடர்ச்சியற்ற ஒரு சிறிய பிரதேசத்தையும் கொண்டுள்ளது.[1]இதன் தலைநகரம் மஸ்கட் ஆகும்.
Remove ads
ஓமனின் சிறப்புகள்
- ஓமன் நாட்டின் பாஹ்லா என்ற நகரம் மண் பாண்டங்களுக்குப் புகழ் பெற்றது.
- ஓமனை ஆளும் சுல்தான், மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்பவராக இருக்கிறார். 1970 சூலை 23 அன்று தொடங்கிய ஆட்சி தற்போதும் தொடர்கிறது.
- இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதி மீன்கள், பேரீச்சம்பழங்கள் மற்றும் உலோகங்கள்.
- தலைசிறந்த கப்பல் கட்டுமான நிபுணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
- இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஓமனில் அதிகமாக வாழ்கின்றனர்.
- ஓமன் நாட்டில் வருமானவரி வசூலிக்கப்படுவதில்லை.
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads