ஊரகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊரகம் (Oorakam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊராகும். ஊரகம் மலப்புரத்திற்கும் வேங்கராவிற்கும் நடுவே அமைந்துள்ளது. ஊரகம் தோராயமாக மலப்புரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [1]
Remove ads
மக்கள்தொகையியல்
2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, ஊரகத்தின் மொத்த மக்கள் தொகை 12589 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 6084 என்றும், பெண்களின் எண்ணிக்கை 6505 என்றும் உள்ளது.[1]
போக்குவரத்து
அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் பரப்பனங்காடியில் உள்ளது. ஊரகம் கிராமம் மலப்புரம் மற்றும் வெங்கரா இடையே உள்ளூர் பேருந்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா இடங்கள்
இந்த ஊரானது ஊரகம் மலைத்தொடருக்கும் கடலுண்டி ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ளது. ஊரகம் மலை இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய மலைத்தொடராகும். மினி ஊட்டி என்பது கொண்டோட்டி பகுதியில் அரிம்பிரா கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு மலையாகும், இதற்கு வெங்கராவில் பூலாப்பிஸ் சந்திப்பிலிருந்து மலப்புரம் சாலையில் செல்லலாம். மாநில நெடுஞ்சாலையில் இருந்து மலை உச்சி சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. மலை உச்சியில் 2000 ஆண்டுகள் பழமையான சைனக் கோவில் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads