எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா

2021 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா (Engada Iruthinga Ivvalavu Naala) என்பது 2021 ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும், அறிமுக இயக்குநர் கெவின் எழுதி இயக்கியுள்ளார்.[1] இப்படத்தை டி என் 75 கே கே கிரேஷன்ஸ் நிலா புரமோட்டர்ஸ், ஆர்ட்ஸ் லைன், துரை சுதாகர், திருமுருகன், இணைந்து தயாரித்தள்ளனர் படம் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அகில், இஷாரா நாயர், நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2]

விரைவான உண்மைகள் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா, இயக்கம் ...
Remove ads

கதை

கிராமத்தில் வசித்து வரும் நாயகன் அகில். எப்படியாவது திரைப்பட நாயகனாகி சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். அதே ஊரைச் சேர்ந்த மொட்டை ராஜேந்திரனும் நாயகனுக்கு ஆதரவாக இருக்கிறார். இதனையடுத்து அகில் பட வாய்ப்புக்காக சென்னைக்கு வருகிறார். சென்னையில் அகிலுக்கு பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்த படத் தயாரிப்பாளரின் சூழ்ச்சியால், அகில் அப்படத்தில் இருந்து நீக்கப்படுகிறார்.

இதனால் அகில், மீண்டும் தன் கிராமத்துக்கே திரும்பி வருகிறார். அகிலை நாயகனா பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் மொட்டை ராஜேந்திரன், நாமே ஏன் படம் எடுக்க கூடாது என யோசனை கொடுக்கிறார். இதையடுத்து மீண்டும் சென்னைக்கு வந்த யோகி பாபுவுடன் இணைந்து ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

Remove ads

நடிகர்கள்

வரவேற்பு

2021 மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் குறித்து மாலை மலரில் ஒரு விமர்ச்சகர் எழுதும் பொழுது படதில் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது பின்னடைவு. உச்சகட்ட காட்சிகளை ரசிக்கும்படியாக அமைத்த இயக்குநர் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். பாடல்கள் சுமாராகவே உள்ள. என்றார்.[3]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads