மனீஷாஜித்
தமிழ் திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனீஷாஜித் (Manishajith) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணிபுரிகிறார்.[1][2][3]
தொழில்
மனீஷாஜித் கம்பீரம் (2004) படத்தின் வழியாக அறிமுகமானார். அதில் இவர் சரத் குமாரின் மகளாக நடித்தார்.[4] கிட்டத்தட்ட நாற்பது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சஞ்சீவ் நடித்த நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.[5] 2015 ஆம் ஆண்டு, விந்தை படத்தில் முன்னாள் குழந்தை நட்சத்திரமான மகேந்திரனுடன் நடித்தார். அடுத்து கம்மர்கட்டு என்ற திகில் படத்தில் நடித்தார்.[6][7] டாஸ்மாக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாகக் கொண்ட திறப்பு விழா, மற்றும் ஜெகன் நடித்த எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல உள்ளிட்ட குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட பல படங்களில் நடித்தார்.[8][9] 2020 ஆம் ஆண்டில் உயிரே என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்; படப்பிடிப்புத் தளத்தில் இவர் மயக்கமடைந்த நிகழ்வுக்குப் பிறகு இவருக்கு பதிலாக ஸ்ரீ கோபிகா தொடரில் நடித்தார்.[10][11] இவரது வரவிருக்கும் படங்களில் தொலைக்காட்சி தொகுப்பாளர் அசாருடன் கடலை போட பொண்ணு வேணும் படம் அடங்கும்.[12]
Remove ads
திரைப்படவியல்
- குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படாவிட்டாதவை, அனைத்தும் தமிழ் படங்களாகும்.
- தொலைக்காட்சி
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads