எங்கிருந்தோ வந்தான்
சந்தான பாரதி இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எங்கிருந்தோ வந்தான் (Engirundho Vandhan) சந்தான பாரதி இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். சத்யராஜ், ரோஜா, ஆம்னி, விஜயகுமார், ஜனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. சுந்தரன் தயாரிப்பில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைப்பில், 15 ஜனவரி 1995 ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம், 1988 ஆண்டு வெளியான "சித்திரம்" என்ற மலையாளப் படத்தின் மறுஆக்கமாகும்.[1][2]
Remove ads
நடிகர்கள்
சத்யராஜ், ரோஜா செல்வமணி, ஆம்னி, விஜயகுமார், சனகராஜ், கல்யாண் குமார், வினு சக்ரவர்த்தி, பானு சந்தர், தியாகு, ஆர். எஸ். சிவாஜி, கம்பர் ஜெயராமன், கவிதாலயா கிருஷ்ணன், எஸ். வி. ஷண்முகம், மோகன் ராமன், பரணி, சி. ஆர். சரஸ்வதி, பொன்வண்ணன்.
கதைச்சுருக்கம்
அமெரிக்காவில் வாழும் செல்வந்தர் விஸ்வநாதனின் (கல்யாண் குமார்) மகள் ராதா (ரோஜா செல்வமணி). விஸ்வநாதனின் நண்பன் மணிகண்டன் (ஜனகராஜ்) ராதாவை சென்னையில் வளர்த்து வந்தார். கௌதம் (பானு சந்தர்) என்ற வாலிபனை ராதா விரும்பினாள். அமெரிக்காவில் தன் தந்தை சொன்ன ஆண்மகனை திருமணம் செய்ய மறுத்து, மணிகண்டனின் உதவியுடன் கௌதமனுடன் திருமணம் செய்ய முடிவு செய்கிறாள் ராதா. ராதாவின் தந்தை மறுத்ததால், ராதாவிற்கு சொத்து எதுவும் இல்லை என்று தெரியவர, கெளதம் திருமணத்தை தடை செய்தான்.
சில நாட்களுக்கு பிறகு, தன் மகள் மற்றும் மருமகனை சந்திக்க வருகிறார் விஸ்வநாதன். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், திருமணம் நின்றுபோனதை அவரிடமிருந்து மணிகண்டனும், ராதாவும் மறைத்துவிடுகிறார்கள்.
அந்த சூழ்நிலையை சமாளிக்க, கண்ணனை (சத்யராஜ்) ராதாவின் கணவராக நடிக்க ஏற்பாடு செய்கிறார் மணிகண்டன். இறுதியில், விஸ்வநாதனுக்கு உண்மை தெரியவந்ததா என்பதே மீதிக் கதையாகும்.
Remove ads
ஒலிப்பதிவு
விஸ்வநாதனும் - ராமமூர்த்தியும் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இணைத்து இப்படத்திற்கான பின்னணி இசையை அமைத்தனர். வாலி எழுதிய ஆறு பாடல்களும் ஒலித்தொகுப்பாக 1995 ஆம் ஆண்டு வெளியானது.[3]
பாடல்களின் பட்டியல்
- நிலவே வா
- நந்தவன
- ஒரு கூட்டில்
- அந்த ஸ்ரீராமன்
- எங்கிருந்தோ வந்தான்
- மௌனம் என்பது
வெளியீடு
வர்த்தக ரீதியாக இந்தப் படம் தோல்வியை தழுவியது.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads