விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இந்திய இரட்டை இசையமைப்பாளர்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்பவர்கள் தென்னிந்தியத் திரையுலகின் இணைகளான ம. சு. விசுவநாதன் மற்றும் டி. கே. ராமமூர்த்தி ஆவர். இவர்கள் 1952 லிருந்து ஒன்றாக இணைந்து பணியாற்றத் தொடங்கி 100 க்கும் அதிகமான படங்களில் பணியாற்றினர். 1965ல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்குப் பிறகு பிரிந்தார்கள். அதன் பிறகு ராமமூர்த்தி 1966 – 1986 வரை 16 திரைப்படங்களில் பணியாற்றினார். இவர்கள் மீண்டும் 30 வருடங்களுக்குப் பிறகு 1995 எங்கிருந்தோ வந்தான் திரைப்படத்தில் இணைந்தார்கள்.
2012ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியின் 14-வது ஆண்டு தொடக்கவிழாவில் முதல்வர் ஜெயலலிதா விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைக்கு 60 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியும், இருவருக்கும் மகிழுந்துகளையும் பரிசாக தந்தார்.[1]
Remove ads
தொடக்க வாழ்க்கை
ராமமூர்த்தி
டி. கே. ராமமூர்த்தி திருச்சியில் பிரபல இசைக்குடும்பத்தில் பிறந்தார். சிறுவயது முதலே வயலின் வாசிப்பவராக இருந்தார். இவருடைய தந்தை கிருஷ்ணசாமி பிள்ளை மற்றும் தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை ஆகியோரும் வயலின் வாசிப்பில் சிறந்தவர்கள். ராமமூர்த்தி சிறுவயதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 1940களில் அவிச்சி மெய்யப்பச் செட்டியார் அவர்களிடம் பணியாற்றினர். பி. எஸ் திவாகர், ஆர் சுதர்சனம் போன்றோரின் நட்புடன் திரையுலகத்தில் வாய்ப்புகளைத் தேடினார். சி. ஆர். சுப்பராமன், டி. ஜி. லிங்கப்பா போன்ற வயலினிஸ்டிடம் பணியாற்றினார்.
விஸ்வநாதன்
எம். எஸ். விஸ்வநாதன் நடிகராகவும், பாடகராகவும் ஆசைகொண்டிருந்தார். 1940 களில் மேடை நாடகங்களில் நடித்தார். 1950 களில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக விளங்கிய டி. ஆர். பாப்பா அவர்கள், இசையமைப்பாளராகுமுன் எஸ். வி. வெங்கட்ராமன் அவர்களின் இசைக்குழுவில் ஒரு வயலின் இசைக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவர் எம். எஸ். விஸ்வநாதனை அந்தக் குழுவில் ஒரு எடுபிடி வேலைகள் செய்யும் உதவியாளராக இணைத்து விட்டார். விஸ்வநாதனுக்கு இசையமைப்பதில் ஆர்வம் இருந்தது. அதனால் இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களுடன் சேர்ந்தார். அதன் பின் சி. ஆர். சுப்புராமன் குழுவில் ஆர்மோனியம், பியானோ என்பவற்றை வாசிக்கும் கலைஞராக முன்னேறினார். டி. ஜி. லிங்கப்பா மற்றும் டி. கே. ராமமூர்த்தி ஆகியோரும் இவருடன் இணைந்து பணியாற்றினார்கள்.
எம். எஸ். விஸ்வநாதன் 15 வயதிலேயே மூன்று இசைக்கருவிகளை இசைக்கும் திறனைப் பெற்றிருந்தார். டி. கே. ராமமூர்த்தி 16 வயதிலிருந்து வயலின் இசைக் கலைஞராக இருந்தார்.
Remove ads
இறப்பு
நோய்வாய்ப்பட்டிருந்த இராமமூர்த்தி 2013 ஏப்ரல் 17 அன்று சென்னை மருத்துவமனையில் காலமானார்.[2][3] அப்போது அவருக்கு 91 வயது.[4]
விஸ்வநாதன் 2015 சூன் 27 அன்று சென்னை மருத்துவமனையில் சுவாசப் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டார்.[5] 2015 சூலை 14 அன்று மருத்துவமனையில் காலமானார்.[6]
திரைவாழ்க்கை
Remove ads
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads