எசுகெய்
மங்கோலிய போர் பிரபு மற்றும் செங்கிஸ்கானின் தந்தை From Wikipedia, the free encyclopedia
Remove ads
எசுகெய் பகதூர் அல்லது எசுகெய் (நவீன மொங்கோலியம்: Есүхэй баатар, யெசுகெய் பாடர்; இறப்பு 1171), கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவராகவும், தெமுஜினின் (பின்னாளில் செங்கிஸ் கான் என அறியப்பட்டவர்) தந்தையாகவும் அறியப்படுபவர்.[1] இவர் போர்சிசின் குடும்பத்தில் பிறந்தார், இவருடைய பெயருக்கு "ஒன்பது போல" என்று பொருள், அதாவது அவர் மங்கோலியர்களின் அதிர்ஷ்ட எண்ணான ஒன்பது இலக்கத்தின் மிகச்சிறந்த குணங்களைப் பெற்றுள்ளார் என்று பொருள்.[2][3][4]
Remove ads
வாழ்க்கை
எசுகெய் சின் அரசமரபால் ககானாக அறிவிக்கப்பட்ட காபூல் கானின் இரண்டாவது மகனான பார்டன் பாகதூரின் மகன் ஆவார். காபூல் கான், முதன் முதலில் மங்கோலியர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்த கய்டுவின் பேரன் ஆவார். எசுகெய் தனது முதல் மனைவி சோச்சிகல் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றார்: பெக்தர் மற்றும் பெலகுதை. மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் படி இளம் தெமுஜின் அவரது அண்ணன் பெக்தரை வேட்டையாடும்போது கொன்றார். ஆனால் அவரது மற்றொரு ஒன்றுவிட்ட சகோதரன், பெலகுதை, ஒரு நல்ல நண்பனாக இருந்தார், பின்னர் செங்கிஸ் கானுக்குக் கீழ் ஒரு தளபதியாகப் பணியாற்றினார். எசுகெய்யின் இரண்டாவது மற்றும் தலைமை மனைவி ஓவலுன், ஒலகோனுடு வன மக்களின் ஒரு மகள் ஆவார். ஓவலுனை அவரது புதிய கணவர் சிலேடுவிடமிருந்து, எசுகெய் அவரது அண்ணன் நெகுன் தைசி மற்றும் தம்பி தரிதை ஒச்சிகன் உதவியுடன் கடத்தினார்.
Remove ads
குடும்பம்
ஓவலுன் | எசுகெய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
போர்ட்டே | தெமுசின் (செங்கிஸ் கான்) | கசர் | கச்சியுன் | தெமுகே | பெலகுதை | பெக்தர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சூச்சி | சகதாயி | ஒக்தாயி | டொலுய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Remove ads
உசாத்துணை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads