எச்ஏஎல் தேசசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எச்ஏஎல் தேசசு (சமசுகிருதம்: तेजस् "சுடரொளி", Tejas) என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது இந்தியாவின் வானறிவியல் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இந்துசுதான் வானறிவியல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற 4.5 ஆம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.[3][4]
தேசசு தனது முதல் பயணத்தை 2001 இல் மேற்கொண்டது, பிறகு 2015 இல் இந்திய வான்படையில் அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட்டது.[5][6] 2003 ஆம் ஆண்டில், இதற்கு அதிகாரப்பூர்வமாக "தேசசு" என்று பெயரிடப்பட்டது.[7] இது மீயொலிவேக போர் விமானங்களின் வரிசையில் மிகவும் இலகுவான வானூர்தியாகும்.[8]
Remove ads
வடிவமைப்பு
தேசசு ஒரு ஒற்றை விசைப்பொறி கொண்ட ஒரு பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது மேம்பட்டபறக்கும் திறனுக்காக தளர்வான நிலையான நிலைத்தன்மையுடன் வால் இல்லாத முக்கோண இறக்கை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தேசசு இடைமறிப்பு மற்றும் தாக்குதல் பணிகளைச் செய்ய வல்லது.[9] இது பல்வேறு ஆயுதங்களை சுமந்து செல்ல ஏதுவாக எட்டு இணைப்பு புள்ளிகளைக் கொண்டுள்ளது.[10] இதன் முன் பகுதியில் வான்வழி எரிபொருள் நிரப்புதல் கருவியைக் கொண்டுள்ளது.[11]

அலுமினியம், லித்தியம் மற்றும் டைட்டானியம் உலோகக்கலவைகள் மற்றும் , கார்பன் இழையால் செய்யப்பட்ட பொருட்கள் தேசசுவின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன.[12][13][14] இதன் இறக்கையின் விளிம்புகள் கண்ணாடியிழைகளால் ஆனது.[15] கலவை பொருட்களின் விரிவான பயன்பாடு வானூர்தியை இலகுவாக்குவது மட்டுமல்லாமல் அதிக வலிமையையும் தருகிறது.[9][16] கடற்படைக்காக தயாரிக்கப்படும் வானூர்திகளில் சில மேம்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூக்கு சற்றே தாழ்வாக இறக்க ஆவண செய்யப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் வலுவூட்டப்பட்ட இறங்கமைப்பு மற்றும் வானூர்தி தாங்கிக் கப்பல்களில் தரையிறங்குவதற்கான கொக்கி அமைப்பை கொண்டுள்ளது.[17][18]
இந்த வானூர்தி முக்கோண இறக்கைகளைக் கொண்டுள்ளாது. தலா மூன்று தானியங்கி பட்டிகைகள் இறக்கைகளின் முன் விளிம்புகளில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இறக்கைகளின் பின் விளிம்புகளில் கட்டுப்பாடு இதழ்கள் மற்றும் இறக்கைத் துடுப்புகள் உள்ளன.பின்பகுதியில் ஒரு செங்குத்து துடுப்பு மற்றும் இரண்டு நிறுத்திகளைக் கொண்டுள்ளது.[19][20]
இந்த வானூர்திகாக காவேரி என்ற பெயரில் ஒரு தாரை பொறியை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்க எரிவாயு விசையாழி ஆராய்ச்சி நிறுவனம் முட்பட்டது.[21] இருப்பினும் காவேரியின் உருவாக்கம் பின்னடைவைச் சந்தித்த காரணத்தினால் தேசசு வானூர்திகளில் ஜெனரல் எலக்ட்ரிக் பொறிகள் பொருத்தப்படுகின்றன.[22][23] தேசசு நவீன கதிரலைக் கும்பா மற்றும் பல்வேறு மின்னணு போர் உபகாரணங்களைக் கொண்டுள்ளது.[24] இதன் கட்டுப்பாடு கணினிகள் பாரத் மின்னணுவியல் நிறுவத்தால் தயாரிக்கப்படுகின்றன.[25]
Remove ads
விவரக்குறிப்புகள்

பொது இயல்புகள்
- குழு: 1 அல்லது 2
- நீளம்: 13.2 m (43 அடி 4 அங்)
- இறக்கை விரிப்பு: 8.2 m (26 அடி 11 அங்)
- உயரம்: 4.4 m (14 அடி 5 அங்)
- இறக்கைப் பரப்பு: 38.4 m2 (413 sq ft)
- வெற்றுப் பாரம்: 6,560 kg (14,462 lb)
- மொத்தப் பாரம்: 9,800 kg (21,605 lb)
- தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 13,500 kg (29,762 lb)
- எரிபொருள் கொள்ளவு: 2,458 kg (5,419 lb) 3,060 L (670 imp gal; 810 US gal)
- சக்தித்தொகுதி: 1 × ஜெனரல் எலக்ட்ரிக் எப்404 தாரை பொறி, 48.9 kN (11,000 lbf) உந்துதல் [28] உளர், 85 kN (19,000 lbf) பின்னெரியுடன்[29][30]
செயற்பாடுகள்
- அதிகபட்ச வேகம்: 2,220 km/h (1,379 mph; 1,199 kn)
- அதிகபட்ச வேகம்: மாக் 1.8[31][32]
- போர் வரம்பு: 739 km; 399 nmi (459 mi) [33][34]
- பயண வரம்பு: 3,000 km (1,864 mi; 1,620 nmi) [35]
- உச்சவரம்பு 15,240 m (50,000 அடி)
- ஈர்ப்பு விசை வரம்பு: +9/-3.5[36][37]
- சிறகு சுமையளவு: 255.2 kg/m2 (52.3 lb/sq ft)
- தள்ளுதல்/பாரம்: 1.07[38]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads