எதுவார்து செவர்துநாத்சே

From Wikipedia, the free encyclopedia

எதுவார்து செவர்துநாத்சே
Remove ads

எதுவார்து செவர்துநாத்சே (Eduard Shevardnadze, சியார்சிய: ედუარდ შევარდნაძე, உருசியம்: Эдуа́рд Амвро́сиевич Шевардна́дзе, 25 சனவரி 1928 - 7 சூலை 2014)[1] ஜோர்ஜியாவின் முன்னாள் அரசுத்தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 1972 முதல் 1985 வரை ஜோர்ஜியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதல் செயலாளராகவும், ஜோர்ஜிய சோவியத் குடியரசின் தலைவராகவும், 1985 முதல் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் வரை சோவியத் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். மிக்கைல் கொர்பச்சோவின் காலத்தில் சோவியத் வெளியுறவுக் கொள்கையில் செவர்நாத்சே பல முக்கிய தீர்மானங்களை எடுத்தார். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் 1992 முதல் 2003 வரை ஜோர்ஜியாவின் அரசுத்தலைவராக இருந்தார். 2003 இல் மேற்கொள்ளப்பட்ட ரோஜாப் புரட்சியை அடுத்து இவர் தனது பதவியில் இருந்து கட்டாய ஓய்வு பெற்றார்.

விரைவான உண்மைகள் எதுவார்த் செவர்த்நாத்சேEduard Shevardnadze, ஜோர்ஜியாவின் 2வது சனாதிபதி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads