என்றும் அன்புடன்
1992 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
என்றும் அன்புடன் (Endrum Anbudan) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக திரைப்படம் ஆகும். ஆர். பாக்கியநாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் முரளி, சித்தாரா, ஹீரா ராசகோபால் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மனோரமா, ஜனகராஜ், சின்னி ஜெயந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார்.
Remove ads
நடிகர்கள்
- முரளி - தியாகு
- சித்தாரா- நந்தினி
- ஹீரா ராசகோபால் ஜெனிபர்
- மனோரமா
- சனகராஜ் - வெங்கடாச்சலம்
- சின்னி ஜெயந்த் - அசோக்
- சார்லி - முனுசாமி
- செந்தில்- எஸ்ட்ரி
- பேபி மோனிஷா - மல்லு
- மோகன் ராமன் - நந்தினியின் தந்தை
- சந்திரசேகர் - விருந்தினர் தோற்றம்
தயாரிப்பு
என்றும் அன்புடன் படத்தை ஆர். பாக்யநாதன் எழுதி இயக்கியுள்ளார்.[1] சத்ய ஜோதி பிலிம்சின் சார்பாக ஜி. சரவணன், டி. ஜி. தியாகராஜன் ஆகியோர் தயாரித்தனர் . ஒளிப்பதிவை எம். எஸ். அண்ணாதுரை மேற்கொள்ள, படத்தொகுப்பை அனில் மல்நாட் மேற்கொண்டார்.
இசை
படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார்.[2][3]
வெளியீடும் வரவேற்பும்
என்றும் அன்புடன் 14 ஆகத்து 1992 இல் வெளியானது.[4] தி இந்தியன் எக்ஸ்பிரசின் அய்யப்பா பிரசாத் எழுதும்போது, " என்றும் அன்புடன் படத்தை அறிமுக இயக்குநராக எழுதி, இயக்கிய பாக்யநாதன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தைக் கையாண்டுள்ளார். சித்தாராவும் முரளியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்".
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads