என். ஆர். இராசவரோதயம்
சிலோன் தமிழ் அரசியலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவரத்தினசிங்கம் இரத்தினவரோதயம் இராசவரோதயம் (Navaratnasingam Ratnavarothiam Rajavarothiam, அக்டோபர் 8, 1908 - ஆகத்து 27, 1963) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
இராசவரோதயம் கிழக்கிலங்கையில் திருகோணமலையில் நவரத்தினசிங்கம் என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் கற்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார்.
அரசியலில்
இராசவரோதயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அதன் தீவிர உறுப்பினரானார். கட்சியின் உப-தலைவராக இருந்தவர். 1952 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் எஸ். சிவபாலனுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1]. இத்தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இருவர் மட்டுமே. இவர் 1956, மார்ச் 1960, சூலை 1960 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads