என். எஸ். நாணா
என்கிற நாராயணன் என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தோவியர் மற்றும் வடிவமைப்பாளராவார் From Wikipedia, the free encyclopedia
Remove ads
என்.எஸ். நாணா என்கிற நாராயணன் என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தோவியர் மற்றும் வடிவமைப்பாளராவார். தமிழக அரசின் பாடநூல், அரசாணைகளில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்களை உருவாக்கியவர். 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாடு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்றவராவார்.
Remove ads
இளமைக் காலம்
இவர் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 25 இல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த இராங்கியம் கிராமத்தில் சண்முகம், பார்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இராங்கியம் சிவகாமி அம்பாள் உயர்நிலையில் பள்ளிக்கல்வியும் பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசுக் கலைக்கல்லூரியில் வணிகவியலில் இளஞ்கலைக் கல்லூரிப்படிப்பையும் முடித்தார்.
பணிக்காலம்
இந்தியா டுடே வார இதழாக வெளிவந்த தமிழ், தெலுங்கு, மலையாளம் பதிப்புகளின் தலைமை வடிவமைப்பாளராக 25 ஆண்டு காலம் பணியாற்றியவர்.[2] பாக்யா, வண்ணத்திரை, முத்தாரம், குங்குமம், மய்யம் உள்ளிட்ட இதழ்களில் பகுதிநேர வடிவமைப்பாளாராகப் பணிசெய்துள்ளார். கதை, கட்டுரைகளுக்காக விதவிதமான எழுத்துருக்களில் தலைப்புகளை வடிவமைத்து வந்துள்ளார்.
கணினித்தமிழ்
இவர் எழுத்தாளர் சுஜாதா, கவியரசர் கண்ணதாசன் முதலியோரின் கையெழுத்துகளை எழுத்துருவாக மாற்றியவர். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் மு. கருணாநிதி ஆகியோரின் கையெழுத்துகளை எழுத்துருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.[3] இவர் வடிவமைத்த 50 எழுத்துருக்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் பொதுப்பயன்பாட்டில் வெளியிடப்பட்டுள்ளன.[4] அதில் முல்லை, பாலை அரசு பாடநூல்களிலும், மருதம் எழுத்துரு அரசாணைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத் தமிழ் வட்டெழுத்தை ஒருங்குறி பயன்பாட்டுக்கு இணக்கமான எழுத்துருவாக வடிவமைத்துள்ளார். இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் தமிழ்க் கணினி விருதினைப் பெற்றார்.[5] தமிழ் வளர்ச்சித்துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசுப் பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கணினி மூலம் எளிய முறையில் பிழையின்றி தமிழ் உள்ளீடு செய்வதற்கான பயிற்சிப்பட்டறைகளை நடத்திவருகிறார். புகைப்படக்கலையிலும் பல விருதுகள் பெற்றவர், கிட்டார் இசைக்கலைஞர்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads