கண்ணதாசன்

தமிழ்க் கவிஞர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் From Wikipedia, the free encyclopedia

கண்ணதாசன்
Remove ads

கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

விரைவான உண்மைகள் கவியரசு கண்ணதாசன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955[1]). இவருடன் உடன்பிறந்தோர் பத்து பேர். சிறு வயதில் இவரைச் சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958)[2] என்பவர் 7000 ரூபாய்க்குத் தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியைச் சிறுகூடல்பட்டியில் பயின்றார். அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943-ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்குச் சென்றபோது வைத்துக் கொண்ட புனைப்பெயர் தான் கண்ணதாசன்.[3]

Remove ads

குடும்பம்

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி ஆச்சி (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9-ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[4] இவர்களுக்குக் கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.[5][6]

கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11-ஆம் நாள் [7] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[6]

ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

Remove ads

அரசியல் ஈடுபாடு

அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த கண்ணதாசன், 1961 ஏப்ரல் 9-இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ. வெ. கி. சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியைத் தொடங்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவுபட்ட போது இந்திரா காந்தி பக்கம் நின்றார். அரசியல் ரீதியாக எம் .ஜி. ஆரைக் கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றிக் கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகக் கண்ணதாசனை 1978-இல் எம்.ஜி.ஆர் நியமித்தார்.

மறைவு

கண்ணதாசன் உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24-இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20-இல், இவரது உடல் அமெரிக்காவிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22-இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[8] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981-இல் முதல்வர் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டு, 1990-இல் முதல்வர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992-இல் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கண்ணதாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2,400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.[9][10][11]

Remove ads

விருதுகள்

  • சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக) (1980)

திரைத்துறைக்கான பங்களிப்புகள்

திரையிசைப் பாடல்கள்

கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்து தொகுதிகள்

வசனம் எழுதிய திரைப்படங்கள்

கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்

தயாரித்த படங்கள்

கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார்.[12] அவை:

  1. சிவகெங்கைச் சீமை
  2. கவலை இல்லாத மனிதன்
  3. கறுப்புப் பணம் (1964)
  4. வானம்பாடி
  5. மாலையிட்ட மங்கை (1958)
  6. இரத்தத்திலகம்
Remove ads

பாடலாசிரியர் பணி

மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும்

இலக்கியப் படைப்புகள்

கவிதை நூல்கள்

காப்பியங்கள்

  1. ஆட்டனத்தி ஆதிமந்தி
  2. இயேசு காவியம்
  3. ஐங்குறுங்காப்பியம்
  4. கல்லக்குடி மகா காவியம்
  5. கிழவன் சேதுபதி
  6. பாண்டிமாதேவி
  7. பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
  8. மலர்கள்
  9. மாங்கனி
  10. முற்றுப்பெறாத காவியங்கள்

தொகுப்புகள்

  1. கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  2. கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  3. கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
  4. கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
  5. கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
  6. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
  7. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
  8. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
  9. பாடிக்கொடுத்த மங்களங்கள்

சிற்றிலக்கியங்கள்

  1. அம்பிகை அழகுதரிசனம்
  2. கிருஷ்ண அந்தாதி
  3. கிருஷ்ண கானம்
  4. கிருஷ்ண மணிமாலை
  5. கோபியர் கொஞ்சும் ரமணன், 1978 சனவரி முதல், கண்ணதாசன் இதழ்
  6. ஸ்ரீகிருஷ்ண கவசம்
  7. ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
  8. ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
  9. தைப்பாவை

கவிதை நாடகம்

  1. கவிதாஞ்சலி

மொழிபெயர்ப்பு

  1. பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
  2. பஜகோவிந்தம்

புதினங்கள்

  1. அதைவிட ரகசியம்
  2. அரங்கமும் அந்தரங்கமும்
  3. அவளுக்காக ஒரு பாடல்
  4. அவள் ஒரு இந்துப் பெண்
  5. ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
  6. ஆயிரங்கால் மண்டபம்
  7. ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.
  8. ஊமையன்கோட்டை
  9. என்னோட ராவுகள், 1978 நவம்பர், கண்ணதாசன் இதழ்
  10. ஒரு கவிஞனின் கதை
  11. கடல் கொண்ட தென்னாடு
  12. காமினி காஞ்சனா
  13. சரசுவின் செளந்தர்ய லஹரி
  14. சிவப்புக்கல் மூக்குத்தி, காமதேனு பிரசுரம், சென்னை 17
  15. சிங்காரி பார்த்த சென்னை
  16. சுருதி சேராத ராகங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17
  17. சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
  18. தெய்வத் திருமணங்கள்
  19. நடந்த கதை
  20. பாரிமலைக்கொடி
  21. பிருந்தாவனம்
  22. மிசா
  23. முப்பது நாளும் பவுர்ணமி
  24. ரத்த புஷ்பங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17
  25. விளக்கு மட்டுமா சிவப்பு?
  26. வேலங்குடித் திருவிழா
  27. ஸ்வர்ண சரஸ்வதி

சிறுகதைகள்

  1. ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை.
  2. ஒரு நதியின் கதை
  3. கண்ணதாசன் கதைகள்
  4. காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
  5. குட்டிக்கதைகள்
  6. பேனா நாட்டியம்
  7. மனசுக்குத் தூக்கமில்லை (வானதி பதிப்பகம், சென்னை)
  8. செண்பகத்தம்மன் கதை
  9. செய்திக்கதைகள்
  10. தர்மரின் வனவாசம்

தன்வரலாறு

  1. எனது வசந்த காலங்கள்
  2. வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
  3. எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
  4. மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

கட்டுரைகள்

  1. அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  2. இலக்கியத்தில் காதல், 1956, அருணோதயம், சென்னை.
  3. இலக்கிய யுத்தங்கள்
  4. எண்ணங்கள் 1000
  5. கடைசிப்பக்கம்
  6. கண்ணதாசன் கட்டுரைகள் (1960) காவியக்கழகம், சென்னை
  7. கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
  8. காதல் பலவிதம் காதலிகள் பல ரகம், 1978 ஏப்ரல், கண்ணதாசன் இதழ்
  9. கூட்டுக்குரல், அருணோதயம், சென்னை.
  10. குடும்பசுகம்
  11. சந்தித்தேன் சிந்தித்தேன்
  12. சுகமான சிந்தனைகள்
  13. செப்புமொழிகள்
  14. ஞானமாலிகா
  15. ஞானரஸமும் காமரஸமும், 1978 பிப்ரவரி, கண்ணதாசன் இதழ்
  16. தமிழர் திருமணமும் தாலியும், 1956, அருணோதயம், சென்னை.
  17. தென்றல் கட்டுரைகள்
  18. தெய்வதரிசனம்
  19. தேவதாசிமுறை மீண்டும் வேண்டும், 1978 சூலை, கண்ணதாசன் இதழ்
  20. தோட்டத்து மலர்கள்
  21. நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
  22. நான் இறைவனைச் சந்திக்கிறேன்
  23. நான் பார்த்த அரசியல் - முன்பாதி
  24. நான் பார்த்த அரசியல் (பின்பாதி)
  25. நான் ரசித்த வர்ணனைகள், 1978 மார்ச், கண்ணதாசன் இதழ்
  26. பயணங்கள்
  27. புஷ்பமாலிகா
  28. போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை
  29. மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
  30. ராகமாலிகா
  31. வாழ்க்கை என்னும் சோலையிலே

சமயம்

  1. அர்த்தமுள்ள இந்து மதம் 1
  2. அர்த்தமுள்ள இந்து மதம் 2
  3. அர்த்தமுள்ள இந்து மதம் 3
  4. அர்த்தமுள்ள இந்து மதம் 4: துன்பங்களிலிருந்து விடுதலை
  5. அர்த்தமுள்ள இந்து மதம் 5: ஞானம் பிறந்த கதை
  6. அர்த்தமுள்ள இந்து மதம் 6: நெஞ்சுக்கு நிம்மதி
  7. அர்த்தமுள்ள இந்து மதம் 7: சுகமான சிந்தனைகள்
  8. அர்த்தமுள்ள இந்து மதம் 8: போகம் ரோகம் யோகம்
  9. அர்த்தமுள்ள இந்து மதம் 9: ஞானத்தைத்தேடி
  10. அர்த்தமுள்ள இந்து மதம்10: உன்னையே நீ அறிவாய்

நாடகங்கள்

  1. அனார்கலி
  2. சிவகங்கைச்சீமை
  3. ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.

உரை நூல்கள்

கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

  1. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
  2. ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
  3. ஆண்டாள் திருப்பாவை
  4. எதையும் நான் கேலி செய்வேன்: காளமேகம் பாடல்கள், 1978, கண்ணதாசன் இதழ்
  5. கண்ணே கதவைத்திற!: கலிங்கத்துப்பரணி - கடைதிறப்புக் காட்சி, 1977 செப்டம்பர், கண்ணதாசன் இதழ்
  6. சங்கர பொக்கிஷம்
  7. சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
  8. தாசிவீடு சென்ற ஒருவனின் அனுபவங்கள்: சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது, 1977 நவம்பர், கண்ணதாசன் இதழ்
  9. திருக்குறள் காமத்துப்பால்
  10. பகவத் கீதை
  11. மதுவும் மங்கையரும்: கம்பராமாயணம் உண்டாட்டுப் படலம், 1977, கண்ணாதசன் இதழ்

பேட்டிகள்

  1. கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
  2. சந்தித்தேன் சிந்தித்தேன்

வினா-விடை

  1. ஐயம் அகற்று
  2. கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads