எம்மா வாட்சன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம்மா சார்லோட் துற்றே வாட்சன் (Emma Charlotte Duerre Watson) ஒர் ஆங்கில நடிகையும், விளம்பர அழகியும், சமூக ஆர்வலரும் ஆவார். வாட்சன் பாரிஸ் நகரில் பிறந்தார்; ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் வளர்ந்தார்; குழந்தைப் பருவத்தில் டிராகன் பள்ளியில் பயின்றார்; ஸ்டேஜ்கோச் தியேட்டர் ஆர்ட்ஸ் ஆக்சுபோர்டு கிளையில் நடிகைக்கான பயிற்சி மேற்கொண்டார். முன்னர் பள்ளி நாடகங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், ஆரி பாட்டர் திரைப்படத் தொடர்களில் எர்மாயினி கிறேன்செராகத் தான் முதல் தொழிற்முறை நடிப்புப்பாத்திரமாக வந்திறங்கியபின் மேன்மையடைந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை எட்டு ஆரி பாட்டர் படங்களில் நடித்துள்ளார்.[6] உலகளாவிய புகழ், விமர்சனப் பாராட்டுகள், 1 கோடி பவுண்ட்கள் ஆகியவற்றின் உரிமையைப் பெற்றார். இவர் ஆரி பாட்டர் படங்களில் மட்டும் அல்லாமல், தி டேல் ஆஃப் டெஸ்பேரேஸ் என்னும் படத்தில் குரல் கொடுத்தும், பாலே ஷூஸ் என்னும் புதினத்தைத் தழுவிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றியும் தன் பணியைத் தொடர்ந்தார். தி பெர்க்ஸ் ஆஃப் பீயிங் எ வால்ஃபிலவர் என்னும் நாடகத் திரைப்படத்திலும், தி பிலிங் ரிங் என்னும் குற்றத் திரைப்படத்திலும் தான் ஒரு கதாபாத்திரமாக நடித்துள்ளார். திஸ் இஸ் தி என்ட் என்னும் நகைச்சுவைத் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் தான் ஒரு "மிகைப்படுத்தப்பட்ட" பதிப்பாகத் தோன்றியுள்ளார். நோவா என்னும் காவியத் திரைப்படத்தில் தலைப்புப் பாத்திரத்தின் தத்து மகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.[7]
2011 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை, எம்மா தன்னைப் படத்திட்டபணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளவும், தனது கல்வியைத் தொடரவும் நேரதை்தைப் பிரித்துக்கொண்டார். பிரவுன் பல்கலைக்கழகத்திலும் வர்செஸ்டர் கல்லூரியிலும் கல்வி பயி்ன்று, பிரவுன் பல்கலைக்கழகத்திலிருந்து மே 2014 ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பர்பெரிக்கும், லான்கோமுக்கும் அவரது விளம்பரத் தோற்றம் காட்டல் பணி பிரச்சாரப் பிரயாணத்தைக் கொண்டிருந்துள்ளது.[8][9] ஒரு புதுப்பாணி கலந்துரைஞராக, மக்களுக்கு ஆடையை உருவாக்க உதவியுள்ளார். 2014 ஆம் ஆண்டு, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலைகளின் பிரித்தானிய கலைக்கழகம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய நடிகையாக வென்றதற்காகக் கௌரவித்தது. அதே ஆண்டில், அவர் ஒர் ஐ.நா. பெண்கள் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். ஹிஃபார்ஷி என்ற ஐ.நா. பெண்கள் பிரச்சாரத்தைத் தொடங்க உதவி செய்தார், அது பாலினச் சமனிலையை வாதாட வேண்டி ஆண்களை அழைக்கின்றது.
Remove ads
தொடக்ககால வாழ்க்கை
ஆங்கில வழக்குரைஞர்களாகிய ஜாக்குலின் லியூஸ்பய், கிறிஸ் வாட்சன் ஆகியோருக்கு மகளாக வாட்சன் பாரிஸ் நகரம், பிரான்ஸில் பிறந்தார்;[10][11][12] ஐந்து அகவை வரை பாரிஸில் வாழ்ந்தார். தான் சிறுமியாக இருந்த போதே அவரின் பெற்றோர் மணமுறிவு பெற்று பிரிந்தனர். பின்னர் அவர் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையருக்குத் தன் தாயுடன் சேர்ந்து வாழ இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றார். அதே வேளையில், லண்டனில் தன் தந்தையின் வீட்டில் வார இறுதிகளைச் செலவழித்தார்.[10][13] பிரஞ்சு மொழியையும் சிறிதளவு பேசுகின்றார்.[14] தன் தாயுடனும், உடன்பிற்பாளனுடனும் ஆக்ஸ்போர்டிற்கு இடம்பெயர்ந்த பிறகு, அங்கிருந்த டிராகன் பள்ளியில் 2003 [10] வரை கல்வி பயின்றார். தான் ஒரு நடிகை ஆக வேண்டுமென்று ஆறு அகவை முதல் பற்று கொண்டார்.[15] அதற்காக ஆடல், பாடல், நடிப்பு ஆகியவற்றை ஆக்ஸ்போர்டு கிளை, ஸ்டேஜ்கோச் தியேட்டர் ஆர்ட்ஸ் என்னும் ஒரு பகுதி நேர நாடகப்பள்ளியில் கற்றுப் பயின்றார்.[16]
தனது பத்தாம் அகவையில், ஆர்தர்: தி யங் இயர்ஸ், தி ஹேப்பி பிரின்ஸ் [17] ஆகியவை உட்பட பல்வேறு ஸ்டேஜ்கோச் தயாரிப்புகளிலும் பள்ளி நாடகங்களிலும் செயலாக்கம் செய்தார். அவர் ஹாரி பாட்டர் தொடகள் முன்னதாக ஒருபோதும் வாழ்க்கைத் தொழிலாக நடிக்கவில்லை. வாட்சன் டிராகன் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, ஹேட்டிங்டன் பள்ளியில் [10] பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். ஒரு நாளில் ஐந்து மணி நேரம் வரை படப்பிடிப்புகளில் போது அவரும் அவரின் நண்பர்களும் பயிற்றுவிக்கப்படுவர்.[18] சூன் 2006 இல், அவர் பத்துப்பாடங்களில் பள்ளித் தேர்வுகளை எழுதி, எட்டுப்பாடங்களில் A* தரத்தையும் இரண்டு பாடங்களில் A தரத்தையும் முயன்றடைந்தார்.[10][19]
Remove ads
வாழ்க்கைத்தொழில்
1999–2003: தொடக்கங்களும் ஊடுவழியும்
வாட்சன் ஹரி பாட்டர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு புர்பெர்ரி நிறுவனத்தின் மூலமாக, வடிவழகு துறையிலும் அறிமுகமானார்.
விளம்பரத் தோற்றமும் நாகரிக நடையும்
2005 ஆம் ஆண்டில், வாட்சன் தனது விளம்பரத் தோற்றத்தை டீன் வோக் இற்கான ஒரு புகைப்படம் மூலம் தொடங்கினார். அதன் அட்டையில் பெருமைபடுத்திய இளம் நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.[3]
கல்வி

தனது பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் படத்திற்காக 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி திங்கள் தொடக்கத்திலிருந்து கல்வியில் இடைவெளி[20] எடுத்துக்கொண்டார், இருப்பினும் அவர் தன் படிப்பைத் தொடர விரும்பி,[21] பிராவிடென்ஸ், ரோட் தீவிலுள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தைத் [22] தேர்ந்தெடுத்தார். பல்கலைக்கழகத்தில் 18 திங்கள் கழிந்த பிறகு மார்ச்சு 2011 இல் தன் கல்விப்பருவத்தைத் தள்ளிப்போடுவதாக அறிவித்தார்.[23] இருந்த போதிலும் 2011 முதல் 2012 வரையுள்ள கல்வி ஆண்டில் அவர் வர்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு இல் வருகை புரிந்தார்.[24]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
நோவா எனும் படத்தில் வேலை செய்யும் போது, அவரின் நம்பிக்கை பற்றி கேள்விக்குள்ளாக்கப்பட்டார். அதற்கு அவர் ஒரு திருநிலை சர்வமயவாதியர் எனத் தன்னைப் பற்றி விவரித்தார்.[25]
திரைப்பட வரலாறு
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads