ம. கோ. இராமச்சந்திரனின் அரசியல் வாழ்க்கை

M.G.R From Wikipedia, the free encyclopedia

ம. கோ. இராமச்சந்திரனின் அரசியல் வாழ்க்கை
Remove ads

திரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலிலும் செல்வாக்குப் பெற்று மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Thumb

காங்கிரஸ்

1940ல் தேசியவாதியாக இருந்தமையால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணிபுரிந்தார். வெளிப்படையாக இல்லாமல் தன் முன்னேற்றத்தை கருதி அரசியலில் முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படுமோ என்று கருதி வெளிப்படையாக ஈடுபடுவதில்லை. 1948க்கு பிறகு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு சற்று அரசியலில் வெளி ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் அப்போது காமராஜர் மிக உயர்ந்து நின்றார். அவருடை கொள்கையை பின்பற்றி அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியலில் ஈடுபாடு வைத்து கொண்டார். பின்நாளில் காமராசரின் மதிய உணவு திட்டத்தினை திறம்பட சத்துணவு திட்டமாக செயல்படுத்தினார். அண்ணா என் தலைவன், காமராசர் என் வழிகாட்டி என்று தி.மு.க.வில் இருக்கும் போதும் கூறினார்.

Remove ads

தி.மு.க

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.

பேரறிஞர் அண்ணாவின் விசுவாசி

தி.மு.க.வின் தலைவரான அண்ணா எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்தார். எம்.ஜி.ஆரும் அண்ணாவை தலைவனாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டார். தேர்தல் பிரச்சாரத்தில் அதிக பங்கு வகித்தமையால் அண்ணா எம்.ஜி.ஆருக்கு இதயக்கனி எனும் பட்டம் கொடுத்தார்.

அறிஞர் அண்ணா உடல் நலக்குறைவினால் 3 பிப்ரவரி 1969 அன்று அண்ணா மரணம் அடைந்தார். அதையடுத்து அண்ணாவுக்கு அடுத்து அமைச்சரவையில் மூத்தவரான நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டார்.

கருணாநிதியை முதல்வராக்கினார்

அண்ணா மறைந்ததும் தமிழகத்தின் முதல்வர் பதவிக்கான சர்ச்சை திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிகழ்ந்தது. தற்காலிக முதல்வராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும், கருணாநிதிக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏகளும் இருந்தார்கள். பலத்த போட்டி நிலவியது. திமுகவின் சட்டமன்றக் குழுவுக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 9 பிப்ரவரி 1969 அன்று சென்னை அரசினர் தோட்டத்தில் கூட்டப்படும் என்று அறிவித்தார் நெடுஞ்செழியன். கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் திரைத்துறையிலும், அரசியலிலும் நண்பர்களாக இருந்தார்கள். அப்போது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கருணாநிதியின் பக்கமே இருந்தனர். கருணாநிதிக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி. கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்தார் என்று வருத்தப்பட்டார் நெடுஞ்செழியன். பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டி ஏற்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் வந்தனர். இப்போதும் கருணாநிதியின் பக்கமே எம்.ஜி.ஆர். இருந்தார்.[1]

"என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; உங்களைக் கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்." என்று கலைஞர் கருணாநிதி முதல்வர் பதவிக்கு வந்து 18 ஆண்டுகள் முடிந்து 19வது தொடங்குவதையொட்டியும், திமுக அரசு பதவியேற்று நான்காண்டுகள் முடிந்து இன்று 5வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதையொட்டியும் சட்டசபையில் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் தெரிவித்திருக்கிறார்.

கணக்கு கேட்டல்

தி.மு.கவின் பொருளாளராக இருந்தமையால் கட்சியில் நிலவும் குறைபாடுகளைக் கண்டு, பொதுக்குழு கூட்டத்தில் கணக்கு கேட்டார். "தி.மு.கழகத்தினர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும். தங்கள் கை சுத்தமானது என்பதை நிரூபிக்க வேண்டும்" என்று பொதுக்கூட்டங்களில் பேசினார். தி.மு.க. செயற்குழுவில் உள்ள 31 உறுப்பினர்களில் 26 பேர், "எம்.ஜி.ஆர். மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற மனுவில் கையெழுத்திட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கொடுத்தனர். தி.மு.க மாவட்டச் செயலாளர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டும், அதுவரை தி.மு.க. பொருளாளர் பொறுப்பிலிருந்தும், சாதாரண உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சஸ்பெண்ட் செய்வதாகத் தெரிவித்தும், பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் அக்டோபர் 9ந்தேதி கடிதம் அனுப்பினார். எம்.ஜி.ஆரை 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.கவிலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள்.[2]

Remove ads

அனைத்திந்திய அண்ணா தி.மு.க

தோற்றம்

கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் தி.மு.க கட்சியிலிருந்து 1972ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பின் சுற்றுபயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை எம்.ஜி.ஆர் கணித்தார்.

1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவரின் தொண்டர் அனகாபுத்தூர் இராமலிங்கம் ஆரம்பித்தார்.அந்த கட்சியின் உறுப்பினராக சேர்ந்து அதன் பாெதுச்செயலாளாராகப் பொறுப்பேற்றார்.

எஸ்.எம்.துரைராஜ், குழ.செல்லயா, சௌந்திரபாண்யன்,ஜி.ஆர்.எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.கவில் இணைந்தனர். எம்.ஜி.ஆர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தமையால் உறுப்பினர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.

மேலும் கட்சித்தாவல் தடைசட்டம் அப்போது பிறப்பிக்கப்படவில்லை என்பதால் எண்ணற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டசபை உறுப்பினர்களும் தொடர்ந்து இணைந்தார்கள். அதில் பாவலர் முத்துசாமியை கழகத்தின் முதல் அவைத்தலைவராக எம்.ஜி.ஆர் நியமித்தார்.[3]

"மொழிப் பிரச்சனையில் இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவது என்ற பிரச்சனையில் நானும் கருணாநிதியும், இரட்டைக்குழல் துப்பாக்கிகள்" என்று எம்.ஜி.ஆர் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் பண்பாடு

  • திமுக தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராஜன் மறைந்தபோது அதிமுகவில் இருந்த நாஞ்சில் மனோகரன் 50 பேருடன் கருப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
  • "காமராஜர் காலம் வரையிலும், எம்ஜிஆர் காலம் வரையிலும் இந்த அரசியல் பண்பாடு இருந்தது." என்று சட்டசபையில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா

எம்.ஜி.ஆர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும், ராஜ்யசபா எம்.பி.யாகவும், கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராகவும் செல்வி.ஜெயலலிதா பொறுப்பேற்று கழக மற்றும் அரசுப் பணிகளில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உற்ற துணையாக திகழ்ந்தார்.

எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக விளங்கிய அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளராக 28 ஆண்டுகள் இருந்தார்.

தமிழக முதலமைச்சர்

1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார்.

செயல்பாடுகள்

  • அரிசி விலை குறைப்பு
  • சென்னைக்கு குடிநீர் திட்டம்
  • அண்ணா பல்கலைக் கழகம்
  • அண்ணா வளைவு

திட்டங்கள்

எம்.ஜி.ஆரின் திட்டங்களில் மகத்தான திட்டம் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டமாகும். மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெருகின்ற திட்டமாக இது இருந்தது.

மகளிருக்கான திட்டங்கள்

  1. விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி
  2. மகளிருக்கு சேவை நிலையங்கள்
  3. பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள்
  4. தாய் சேய் நல இல்லங்கள்

குழந்தைகளுக்கான திட்டங்கள்

  1. இலவச சீருடை வழங்குதல் திட்டம்
  2. இலவச காலணி வழங்குதல் திட்டம்
  3. இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்
  4. இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள்

ஊனமுற்றோர்களுக்கு உதவி

மருத்துவ/சுகாதார சேவை திட்டங்கள்

  • இலவச ஆம்புலன்ஸ் திட்டம்

முதியோர்களுக்கான திட்டங்கள்

  1. மாதம் தோறும் உதவித் தொகை கொடுக்கும் திட்டம்
  2. நாள்தோறும் மதிய உணவு வழங்கும் திட்டம்
  3. ஆண்டிற்கு இருமுறை இலவச உடை வழங்கும் திட்டம்

விவசாயிகளுக்கான திட்டங்கள்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கலைஞர் கருணாநிதி அவர்களால் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

உழைப்பாளிகளுக்கான திட்டங்கள்

  1. கைவினைஞர்களுக்கான கருவிகள் வழங்கும் திட்டம்

இளைஞர்களுக்கான திட்டங்கள்

  1. படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்

வேலைவாய்ப்பு திட்டங்கள்

  1. வீட்டுக்கொருவருக்கு வேலை கொடுக்கும் திட்டம்
  2. சுயவேலை வாய்ப்பு வழங்கும் திட்டம்

ஏழைகளுக்கான திட்டங்கள்

  1. இலவச வேட்டி சேலை திட்டம்
  2. குடிசைக்கு ஒரு மின்விளக்கு
  1. எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்

இலவசப் பல்பொடி இலவசக் காலணி பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம்

  1. வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் [4]
  2. திருச்சியை தலைநகராக மாற்றும் திட்டம் - நிறைவேறவில்லை

மக்களின் நிலையைக் கண்டு இலவச திட்டங்களை அதிகம் செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். மக்களின் நலன் கருதி இத்திட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தாலும் தொலைநோக்குப் பார்வையோடு இல்லாத திட்டங்கள் என்றே அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுகின்றன.[5]

Remove ads

வகித்த முக்கிய பதவிகள்

மேலதிகத் தகவல்கள் பதவி, ஆண்டு ...

தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் மற்றும் செயலாளர். திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக-6 ஆண்டுகள் அ.இ.அ.தி.மு.க. தலைவராக-12 ஆண்டுகள் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளராக-09 ஆண்டுகள் தமிழக முதலமைச்சர் மூன்று முறை - 1977, 1980, 1984 .

எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற தொகுதிகளின் விவரம்

மேலதிகத் தகவல்கள் வருடம், தொகுதி ...

தமிழக முதலமைச்சர் [ 1977 to 1987 ]

வருடம்: 1977 - 1980 தேர்தல்: தமிழக சட்ட மன்ற தேர்தல் 1977

வருடம்: 1980 - 1984 தேர்தல்: தமிழக சட்ட மன்ற தேர்தல் 1980

வருடம்: 1984 - 1987 தேர்தல்: தமிழக சட்ட மன்ற தேர்தல் 1984

ஆதாரங்கள்

மேலும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads