மு. அ. முத்தையா

From Wikipedia, the free encyclopedia

மு. அ. முத்தையா
Remove ads

மு. அ. முத்தையா செட்டியார் (M. A. Muthiah Chettiar, 5 ஆகத்து 1905 - 12 மே 1984) ஒரு தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர், சென்னை மேயர், சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமேலவை உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்திற்கு 1957 ல் நடைபெற்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் ராஜா சர்முத்தையா அண்ணாமலை முத்தையா செட்டியார், கல்வி அமைச்சர் (சென்னை மாகாணம்) ...
Remove ads

இளமைக் காலம்

இவர் ஆகத்து 5, 1905 ஆம் ஆண்டு செட்டிநாட்டின் ராஜா மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற டாக்டர் மு. அண்ணாமலை செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். முத்தையா சென்னை வேப்பேரியில் பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளி, ஈவார்ட் பள்ளி, ராமானுஜம் செட்டியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயின்றார். 1925 ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

Remove ads

அரசியல் வாழ்வு

பின்னர் 1929 ஆம் ஆண்டு தமது 24 ஆம் வயதில் சென்னை நகராட்சி உறுப்பினரானார். 1931 ஆம் ஆண்டில் சென்னை நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1933 ஆம் ஆண்டு சென்னை மாநகரத் தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1936 ஆண்டு சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி, மருத்துவம், சுங்கம் ஆகிய துறைகளின் அமைச்சர் ஆனார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads