மு. அண்ணாமலை
தமிழக தொழிலதிபர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜா சர் திவான் பகதூர் சா.இராம.மு.அண்ணாமலை செட்டியார் (Raja Sir Diwan Bahadur Satappa Ramanatha Muttaiya Annamalai Chettiar) சுருக்கமாக இராஜா அண்ணமலை செட்டியார், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய தொழிலதிபர், வங்கியாளர், கல்வியாளர் ஆவார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர். பெரும் வள்ளல். செட்டிநாட்டு இராஜா என்னும் பரம்பரைப் பட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் இவருக்கு வழங்கியது.[1]
தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஒரு உந்துதலாக அமைந்தது.[2]
சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.
Remove ads
குடும்பம்
- சா. இராம. முத்தையா செட்டியார் - தந்தை
- சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார் - அண்ணன்
- சா. இராம. மு. இராமசாமி செட்டியார் - அண்ணன்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads