எம். குலசேகரன்
மலேசிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
குலசேகரன் முருகேசன், (ஆங்கிலம்: Kulasegaran Murugeson சீனம்: 古拉); (பிறப்பு: 1957), மலேசிய அரசியல்வாதி; முன்னாள் மனிதவள அமைச்சர்; மற்றும் மலேசிய இந்தியர், மலேசிய சீனர், மலேசியப் பழங்குடியினர் உரிமைகளின் போராட்டவாதியாக அறியப் படுகிறார்.
ஓர் இரப்பர் தோட்டத் தொழிலாளரின் மகனாகப் பிறந்தவர். அயராத உழைப்பும், தளராத நம்பிக்கையும் இவரை மலேசிய அரசியலில் ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன.
2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின், மேற்கு ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில், மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த இக் பூய் ஹோங் (Yik Phooi Hong) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலில் அவர் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு32,576 வாக்குகள் பெற்றார். மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் 49,618 வாக்காளர்கள் உள்ளனர். சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈப்போ மாநகரில் ஒரு தமிழர் வெற்றி பெற்றது ஓர் அரசியல் சாதனையாகும்.[1]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு

எம். குலசேகரன் மலேசியாவில் பிரபலமான ஒரு வழக்குரைஞர். இவர் 1980ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள ’லிங்கன்ஸ் இன்’ (lincoln's Inn) எனும் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1983 ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி மலேசிய வழக்குரைஞர் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டார்.[2]பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போவில் சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். மலேசிய இந்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் மூன்றாம் தர மக்களாக[3] நடத்தப் படுவதைக் கண்டு மனம் கலங்கிய எம். குலசேகரன் அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று அரசியலில் ஈடுபட்டார்.
Remove ads
அரசியல்
மலேசியாவின் எதிர்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக செயல் கட்சியுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம். குலசேகரன், 1995 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பேராக் மாநில சட்டமன்றத்திற்கு ஈப்போ, தாமான் கேனிங் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும் 1997 மே மாதம் நடைபெற்ற தெலுக் இந்தான் தொகுதியின் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 2,916 வாக்குகள் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அந்தத் தொகுதியின் மக்களுக்கு பல அரிய சேவைகளைச் செய்தார்.
தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு உதவி
தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு நிறைய உதவிகளை வழங்கினார். தெலுக் இந்தான் பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாக இருந்தார்கள். அதனால் பலர் அடையாள அட்டைகள், குடியுரிமைகள் இல்லாமல் இருந்தனர். தன்னுடைய அரசியல் பலத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு அடையாள அட்டைகள், குடியுரிமைகள் பெற்றுத் தந்தார். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
குலசேகரன் அலுவலகம் உடைப்பு
2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின், மேற்கு ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் 78 விழுக்காடினர் சீனர்கள் ஆகும். சீனர்களின் முழுமையான ஆதரவைப் பெற்று சாதனை படைத்தார். 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் நடந்து முடிந்த பிறகு, ஒருமுறை அவருடைய அலுவலகம் உடைக்கப்பட்டு சில முக்கியமான சட்டப் பத்திரங்களும் பணமும் களவாடப்பட்டன. அரசியலுக்கும் தன்னுடைய அலுவலகம் உடைக்கப் பட்டதற்கும் தொடர்பு இல்லை என்று எம்.குலசேகரன் உறுதிப் படுத்தினார்.[4]
Remove ads
பள்ளி ஆசிரியர் இந்திராகாந்தி வழக்கு
இந்திராகாந்தி என்பவர் ஒரு பள்ளி ஆசிரியர். இவருடைய கணவர் இந்து சமயத்தில் இருந்து இஸ்லாமிய சமயத்திற்கு மதம் மாறினார். தன் பெயரை முகமட் ரிசுவான் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். பின்னர், இந்திரா காந்தி வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டிற்கு வந்து தன் இரு பிள்ளைகளை மதமாற்றம் செய்து பெயர்களையும் மாற்றினார்.
கடைசியாக, தன் மூன்றாவது மகளையும் கடத்திச் சென்று மதமாற்றம் செய்ய முயற்சி செய்தார். அதனால், ஷரியா சட்டப்படி, பிள்ளைகள் அனைவரும் தகப்பனாரின் பராமரிப்பின் கீழ் வருவார்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அநதத் தீர்ப்பை எதிர்த்து இந்திராகாந்தி, ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தன்னுடைய குழந்தைகளை தன் அனுமதி இல்லாமல் மதமாற்றம் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இந்திராகாந்தியின் சார்பில் வழக்குரைஞர் எம். குலசேகரன் வாதாடினார். இந்த வழக்கு மலேசிய மக்களின் கவனத்தையும், அரசியல், நீதித்துறைகளைச் சார்ந்தவர்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது. இறுதியில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாயாரைச் சேரும் என்று ஈப்போ நீதிமன்றம் முடிவு செய்தது.[5]
இந்துக் கோயில்கள் உடைப்பு
மலேசியாவில் இந்துக் கோயில்கள் உடைக்கப் படுவதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.[6] அவற்றில் குலசேகரன் கலந்து கொண்டு தன்னுடைய ஆதரவுகளை வழங்கி வந்துள்ளார்.[7] மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு சமய, மொழி, கலாசார உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. மலேசிய இந்தியர்களுக்கு பொருளாதார வகைகளில் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அந்தப் பேரணியில் எம்.குலசேகரன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினார். அதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கேட்ட போது அவருடைய மனு முற்றாக மறுக்கப்பட்டது.[8] இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அவர் குரல் எழுப்பி வருகிறார்.[9]
நாடாளுமன்றத்தில் தடை
மலேசிய மக்களவையில் இந்தியர்களின் பிரச்னைகளைப் பற்றி பேசும் போது பல முறை ஆளும் கட்சியினரால் இவர் கேலி செய்யப்பட்டுள்ளார். கீழ்த்தரமான சொற்களினால் வேதனைப்படுத்தப் பட்டுள்ளார். ஒருமுறை அவர் நாடாளுமன்றத்தில் ‘வேசைக்குப் பிறந்தவனே’ என்றும் திட்டப்பட்டிருக்கிறார்.[10] ’ஏசுபவர்கள் ஏசிவிட்டுப் போகட்டும். நான் என் கடமையைச் செய்து கொண்டே இருப்பேன்’ என்று சொன்னார் குலசேகரன்.
2007 ஆம் ஆண்டு துணை சபாநாயகரின் கட்டளையை மீறி சபாநாயகர், துணைசபாநாயகர்களின் சம்பள உயர்வைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்ததால் குலசேகரன் நாடாளுமன்றத்தில் இருந்தே வெளியேற்றம் செய்யப்பட்டார். நான்கு நாட்கள் அவர் நாடாளுமன்றத்தின் முகப்பு அறையிலேயே உட்கார்ந்து தன் பணிகளைச் செய்தார்.[11]
Remove ads
கைது
2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 'பாக்காத்தான் ராக்யாட்' எனும் மலேசிய மக்கள் கூட்டணி, பேராக் மாநிலத்தைக் கைப்பற்றியது. மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆளும் பாரிசான் நேசனல் கட்சியின் வசம் இருந்து வந்த பேராக் மாநிலம் முதல் முறையாக எதிர்க்கட்சிகளிடம் கை மாறியது. ஏறக்குறைய 10 மாதங்கள் மக்கள் கூட்டணி, பேராக் மாநிலத்தை ஆட்சி செய்தது.
2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூனறு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினர். அதனால், மக்கள் கூட்டணி வீழ்ச்சியுற்றது. பாரிசான் நேசனல் கட்சியின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. இந்தக் கட்டத்தில், மக்கள் கூட்டணியின் இதர சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரத மறியல் செய்தனர். அந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட குலசேகரன் அவர்களும், பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் சிவகுமார் அவர்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
Remove ads
அண்மைய நிலவரங்கள்
2013 பொதுத் தேர்தலில் எம். குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் பதவிக்கு ஆர்வப் பட்டதாக ஆருடங்கள் சொல்லப் பட்டன.[12] அவற்றை அவர் வன்மையாக மறுத்தார். 'தற்சமயம் பினாங்கு துணை முதல்வர் பதவியில் இருக்கும் பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அப்பதவியில் அவர் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்று கூறினார்.
தேர்தல் முடிவுகள்
Remove ads
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads