எராஸ்மஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திசிடெரியஸ் எராஸ்மஸ் ரோட்டரோடமஸ் (Desiderius Erasmus Roterodamus)[note 1] (28 October 1466 – 12 July 1536)) இடச்சு தத்துவஞானியும், கத்தோலிக்க இறையியலாளரும் ஆவார். இவர் வடக்கு மறுமலர்ச்சியின் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1][2][3] ஒரு கத்தோலிக்க பாதிரியாராக, இவர் ஒரு தூய இலத்தீன் பாணியில் எழுதிய பாரம்பரிய புலமையில் ஒரு முக்கிய நபராக இருந்தார். மனிதநேயவாதிகள் மத்தியில் இவருக்கு " மனிதநேயவாதிகளின் இளவரசர் " என்ற பெயர் இருந்தது. மேலும் " கிறிஸ்தவ மனிதநேயவாதிகளின் மகுடம்" என்றும் அழைக்கப்படுகிறார்.[4] நூல்களில் பணிபுரிய மனிதநேய நுட்பங்களைப் பயன்படுத்தி, புதிய ஏற்பாட்டின் முக்கியமான புதிய இலத்தீன் மற்றும் கிரேக்க பதிப்புகளைத் தயாரித்தார். இது கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் மற்றும் கத்தோலிக்க மறுமலர்ச்சி ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தக்கூடிய கேள்விகளை எழுப்பியது.[5] இவர், ஆன் ஃப்ரீ வில்[5], இன் பிரைஸ் ஆஃப் ஃபோலி, ஹேண்ட்புக் ஆஃப் எ கிறிஸ்டியன் நைட், ஆன் சிவிலிட்டி இன் சில்ட்ரன், கோபியா: ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் தி அபண்டண்ட் ஸ்டைல் போன்ற பல படைப்புகளையும் எழுதினார்.
வளர்ந்து வரும் ஐரோப்பிய மத சீர்திருத்தத்தின் பின்னணியில் எராஸ்மஸ் வாழ்ந்தார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினராக இருந்தார். திருச்சபை மற்றும் அதன் மதகுருக்களின் துஷ்பிரயோகங்களை உள்ளிருந்து சீர்திருத்துவதில் உறுதியாக இருந்தார்.[6][7]
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
எராஸ்மஸ், 1460களின் நடுப்பகுதியில் 28 அக்டோபர் அன்று ராட்டர்டேம் நகரில் பிறந்தார்.[4] இவர் டச்சு மற்றும் லத்தீன் இலக்கியங்களை இயற்றியவர். நூலகங்களைப் படிப்பதற்காகவே சமய துறவியானார். இவர் பாரிஸ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கலந்துரையாடி விளக்கம் பெற்றார். தாமஸ் மோர், ஜான் கெலெட் போன்ற மானிட மரபாளர்களுடன் தொடர்புகொண்டவர்.
இறப்பு
தனது உடல்நிலை மோசமடையத் தொடங்கியபோது, அங்கேரியின் ராணி மேரி, அழைப்பின் பேரில் நெதர்லாந்தின் பிரபாண்டிற்குச் செல்ல முடிவு செய்தார். இருப்பினும், 1536 இல் இந்த நடவடிக்கைக்கான தயாரிப்புகளின் போது, இரத்தக்கழிசல் தாக்குதலால் [[பேசல்|பேசலில் திடீரென இறந்தார். நகரின் பாசல் மினிஸ்டர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[8][9]
படைப்புகள்
மொழிபெயர்ப்பு நூல்கள்
- கிரேக்க மொழியில் எழுதப்பட்ட விவிலியத்தின் புதிய ஏற்பாட்டுக்கு இலத்தீன் மொழியில் உரை விளக்கம் எழுதியுள்ளார்.
- சிசெரோ யூரிபிடஸ், லூசியன், ஆகியோரது நூல்களை மொழிபெயர்த்தார்.
பிற
- இவரது உரையாடல்கள் (Colloquies) புகழ்பெற்றவை
- ஏழு நாட்களில் எழுதி முடித்த மடமையை புகழ்ந்து நூலில் கிறிஸ்துவ துறவிகள், திருச்சபை நீதிபதிகள், போப்பாண்டவர்கள், ஆகியவற்றை மையப்படுத்தி நையாண்டி விளக்கமளித்துள்ளார்.
- கிறிஸ்துவ இளவரசனுக்கான கல்வி என்ற நூலில் போர்களை தவிர்த்தல், சொத்து குவிப்பை விழாக்கள், மடங்களுக்கு பதில் பள்ளிகளை பெருக்கல், பற்றி வலியுறுத்தியுள்ளார்.
- அமைதி பற்றிய முறையீடு என்ற நூலில் போரின் நிறை குறைகளை விவாதித்துளார்.
குறிப்புகள்
- Erasmus was his baptismal name, given after St. Erasmus of Formiae. Desiderius was an adopted additional name, which he used from 1496. The Roterodamus was a scholarly name meaning "from Rotterdam", though the Latin genitive would be Roterdamensis.
மேற்கோள்கள்
வெளி இணைப்பகம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads