எரிக் ஹாப்ஸ்பாம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எரிக் ஹாபஸ்பாம் (Eric Hobsbawm, பிறப்பு ஜூன் 9, 1917 . இறப்பு ஒக்டோபர் 1, 2012) ஒரு பிரித்தானிய மார்க்சிய சிந்தனையாளர் மற்றும் வரலாற்றாசிரியர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

வாழ்க்கை
ஹாப்ஸ்பாம் 1917 இல் எகிப்தில் அலெக்ஸாண்டிரியாவில் யூதப்பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை லியோபால்ட் பெர்ஸி ஓப்ஸ்பாம் (Leopold Percy Obstbaum). தாய் நெல்லி க்ரன்(Nelly Grün). பெற்றோர் சேர்மானிய பின்புலம் கொண்டவர்கள் என்றாலும் குழந்தைகளை ஆங்கிலம் பேசுபவர்களாக வளர்த்தார்கள். 1929இல் தந்தை இறந்தார். தாய் இரண்டுவருடம் கழித்து இறந்தார். எரிக் ஹாபஸ்பாமும் தங்கை நான்ஸியும் தாய்வழி மாமியின் பராமரிப்பில் வாழ்ந்தார்கள். 1933இல் அவர்கள் இலண்டனுக்கு புலம் பெயர்ந்தார்கள். எரிக் ஹாப்ஸ்பாம் செயிண்ட் மேரில்போன் க்ராமர் பள்ளியில் படிக்க அராம்பித்தார்
ஹாப்ஸ்பாம் இருமுறை மணம்புரிந்தார். 1943இல் அவர் மணந்த மூரியல் சீமன் (Muriel Seaman) ஐ 1951இல் விவாகரத்து செய்தார். பின்னர் மேரிலின் ஷ்வார்ஸை (Marlene Schwarz) மணந்தார், அவர்களுக்கு இரு குழந்தைகள். ஜூலியா ஹாப்ஸ்பாம் ஆண்டி ஹாப்ஸ்பாம்.
ஹாப்ஸ்பாம் மார்க்சிய நம்பிக்கைகொண்டவர். பிரிட்டன் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர். கட்சியின் வரலாற்று ஆசிரியர்குழு உறுப்பினர். 1998இல் ஹாப்ஸ்பாம் கம்பானியன் ஆஃப் ஆனர் விருது பெற்றார். 2003ல் அவரது ஐரோப்பிய வரலாற்றாய்வுக்காக பால்ஸான் பிரைஸ் பெற்றார்
Remove ads
அரசியல்
1031இலேயே ஹாப்ஸ்பாம் ஜெர்மானிய சோசலிச இளைஞர் இயக்கத்தில் சேர்ந்தார். 1936இல் ஜெர்மானிய கம்யூனிஸ்டுக்கட்சியில் சேர்ந்தார். கம்யூனிஸ்டு வரலாற்றாசிரியர் சங்கத்தில் 1946 முதல் 1956 வரை பணியாற்றினார். 1956இல் சோவியத் ஒன்றியம் ஹங்கேரியைத் தாக்கியபோது பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் அந்தக் குழுமத்தில் இருந்து விலகினார்கள்; ஹாப்ஸ்பாம் நீடித்தார். ஆனால் அப்போதே சோவியத் ஒன்றியம் ஸ்டாலினிய நோக்கில் இழைத்த ஜனநாயகப் படுகொலைகளைக் கண்டிக்கவும் செய்தார்.
ஹாப்ஸ்பாம் பின்னர் ஐரோப்பிய கம்யூனிசத்தை ஆதரித்தார். 197இ8ல் ஹாப்ஸ்பாம் சமூகத்தில் தொழிலாளர்களுக்கு இருந்த மையப்பங்களிப்பு இல்லாமலாகிவிட்டது என்றும் இனிமேல் மார்க்சியம் அவர்களை மட்டுமே நம்பி இருக்கமுடியாது என்றும் ‘உழைப்பாளர்களின் முன்னோக்கிய பயணம் தடைபட்டதா?’ என்ற கட்டுரையில் எழுதினார். அந்தக்கருத்து சம்பிரதாய மார்க்ஸியர் நடுவே கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. மார்க்சிசம் டுடே இதழில் தொடர்ச்சியாக அரசியல் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். 1960களுக்குப்பின் ஹாப்ஸ்பாம் சோவியத் பாணி மார்க்சியத்தில் நம்பிக்கை இழந்து மார்க்சிய செயல்திட்டங்களில் சமகாலத்தன்மை கொண்ட மாறுதல்களுக்காக வாதிட ஆரம்பித்தார்
Remove ads
பணி
ஹாப்ஸ்பாம் பெர்லினின் பிரின்ஸ் ஹென்ரிச் ஜிம்னேசியத்தில் கல்வி பயின்றார். பின்னர் செயிண்ட் மேரில்போன் கிராமர் பள்ளியிலும், கேம்ப்ரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். ஃபேபியன் சமூகத்தைப்பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். 1947இல் ஹாப்ஸ்பாம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பிர்க்பெக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1959 முதல் ஆய்வுப்பேராசிரியராகவும் 1982 முதல் முதுநிலைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
படைப்புகள்
ஹாப்ஸ்பாம் ஐரோப்பிய வரலாற்றைப்பற்றிய அவரது மூன்று நூல்களுக்காகவே பெரிதும் மதிக்கப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டைப்பற்றி அவர் எழுதிய புரட்சியின் யுகம் (The Age of Revolution: Europe 1789–1848) முதலியத்தின் யுகம் (The Age of Capital: 1848–1875)சாம்ராஜ்ய யுகம் (The Age of Empire: 1875–1914) ஆகிய நூல்கள் செவ்வியல் ஆக்கங்கள் என கருதப்படுகின்றன. ஹாப்ஸ்பாம் எழுதிய மார்க்ஸிய நூல்கள் மார்க்ஸிய ஆய்வாளார்கள் நடுவே செல்வாக்குடன் உள்ளன
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads