எல். கைலாசம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வரலாற்றுப் புதின எழுத்தாளர் டாக்டர் எல். கைலாசம், சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர். இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புதினங்கள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும், குற்றவியல் துறை மற்றும் தணிக்கை துறை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

விரைவான உண்மைகள் டாக்டர். எல். கைலாசம், பிறப்பு ...

இவர் எழுதிய மலர்ச்சோலை மங்கை என்ற நாவல், கல்கியின் பொன்னியின் செல்வன் முன்பாக நடைபெரும் கதைக்களத்தை கொண்டது. மற்றொரு புத்தகமான கயல் எனும் நாவலை, பாண்டியர்களின் வரலாற்றை தழுவி அமைத்துள்ளார். மணிமகுடம் என்ற நாவலில் சேரநாட்டு மாமன்னர் குலசேகர ஆழ்வாரின் வாழ்க்கை சித்திரத்தை தெளிந்த நடையில் சொல்லியுள்ளார். இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை தொகுத்து சுதந்திர சுடர்கள் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். குற்ற புலானாய்வு சரித்திர புதினமான விலாசினி வாசகர்களின் ஆதரவை பெற்றது. சோழநாட்டு சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்ட ராஜாளி என்ற மிகப் பெரிய சரித்திர புதினம் வாசகர்களின் ஆதரவைப் பெற்றது. சிந்து நதி நாகரிகத்தையும், பாண்டிய நாட்டையும் இணைத்து எழுதிய சிந்து இளவரசி எனும் புதினத்திற்கு கல்வி அமைச்சரால் பாராட்டு பெற்று பரிசினையும் பெற்றது. சமீபத்தில் எழுதிய பொன்னி எனும் பெருங் காவியம் கல்லணை கட்டப்பெற்ற வரலாற்றை சொல்வது. வாசகர்களின் ஆதரவை பெற்ற பொன்னி, மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகிறது. இந்த புத்தகங்கள் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. சோழநாட்டு / பாண்டிய நாடு சரித்திரத்தையும், கீழடி ஆராய்ச்சிகளையும் ஆதாரமாகக் கொண்டு இயக்கி என்ற மிகப் பெரிய சரித்திர புதினம் பேலஸ் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது, இப்பொழுது இவர் எழுதியுள்ள மலையமாதேவி எனும் சரித்திரப்புதினம் எதிர்பாராத திருப்பங்களையும், சிலிர்ப்பூட்டும் வர்ணணைகளையும் கொண்ட து வானதி நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

இவர் பாண்டிய நாட்டு சரித்திரத்தையும் மீனவர்களின் வாழ்வியலையும் ஆதாரமாகக் கொண்டு முத்துச்சிப்பி என்ற புதினத்தை எழுதியிருக்கிறார். விலாசினி மற்றும் சுதந்திர தேவி வேலு நாச்சியர் ஆகிய அவரின் புதினங்கள் வரலாற்றுப் புதினங்கள் கேரள சரித்திரத்தை பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய REVENGE எனும் ஆங்கிலப் புதினம் புகழ்பெற்றது.

குற்றவியல் புதினங்களான கொன்னது நீதானா? அன்பே அகல்யா போன்ற புதினங்கள் படிப்பரை ஈர்க்கும் வண்ணம் எழுதப்ப ட்டுள்ளது. Exploring Misstatements,  Cluster Analysis of Financial Statement போன்ற புகழ் பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். Detecting Audit Risks எனும் புத்தகம் தணிக்கையாளர்களுக்கு பெரும் துணையாக உள்ளது.

தற்பொழுது இவர் எழுதிக்கொண்டிருக்கும் இரத்த த் துளி எனும் சரித்திர புலனாய்வு புதினம் படிப்பவர்களை மலைக்க வைக்கும். இது செண்பகா பதிப்பகத்தாரால் வெளியிடப் படவுள்ளது.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads