எல். சந்தானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எல். சந்தானம் என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் 1996 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] மேலும் இவர் 2001 தேர்தலில், அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சி சார்பாக உசிலம்பிட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2] மீண்டும் 2006 தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு திமுக வேட்பாளரான பி. மூர்த்தியிடம் தோல்வி அடைந்தார்.[3][4] அஇஅதிமுக தலைவி ஜெ. ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு தேர்தலில் தோழமை கட்சியான பார்வர்டு பிளாக்கு கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்கியிருந்தார்.[5] இவர் தனது பார்வர்டு பிளாக்கு கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த இவர் 2006 ல் சோழவந்தான் தொகுதியில் மீண்டும் அதிமுக சார்பாக போட்டியிட்டார்.[6] 2006 தேர்தலில் அதிமுக உடன் இணைய தன் கட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒப்புதல் இல்லாத காரணத்தினால், இவர் 2001-2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தனித்துப் போட்டியிட்ட ஒரே பார்வர்டு பிளாக்கு உறுப்பினர் ஆவார்.[7] சந்தானத்தின் பல்வேறு நடவடிக்கைகளால் அக்கட்சியின் புதிய தலைவர் கார்த்திக் சந்தானத்தை தனது கட்சியிலிருந்து விலக்கிவிட்டார்.[8] அதன் பின்னர் இவர் அதிமுக கட்சியுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி இவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[9] இவருக்கு முதலில் மதுரை மத்தி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா மாநிலம் முழுவதிலும் உள்ள தன் கட்சி உறுப்பினர்களுக்கு திருப்தி தரும் வகையில் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட மாற்றங்களால், இவருக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் மாற்றம் ஏற்பட்டது.[10]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads